Archive for February, 2012

ஸிஹ்ர் ஓர் ஆய்வு தொடர் – 2

February 29, 2012
ஆய்வுகள்

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்பது குறித்து நாம் விரிவான விளக்கம் அளித்து பல கேள்விகளையும் கேட்டிருந்தோம். அதில் முதலாவதாக நாம் கேட்ட பால் குடி தொடர்பான ஹதீஸ் பற்றி இஸ்மாயீல் ஸலஃபி இது வரை வாய் திறக்கவில்லை. இதற்கு அவர் அளிக்கும் பதிலில் எல்லா முடிச்சுக்களும் அவிழ்ந்து விடும் என்ற போதும் பதில் சொன்னால் மாட்டிக் கொள்வேன் என்ற (உமர் அலி) மனநிலையில் அவர் இருப்பது தெரிகிறது.

ஆயினும் நானும் பதில் சொன்னேன் என்று காட்டிக் கொள்வதற்காக மலகுல் மவ்த்தை மூஸா நபி கன்னத்தில் அறைந்த ஹதீஸ் குறித்து சில தமாஷான பதில்களைக் கூறியுள்ளார். நாம் கேட்ட அனைத்துக்கும் பதில் வந்த பின் மொத்தமாக ஒரே [...]

அமெரிக்காவுக்கு எதிராக SLTJ நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவுக்கு எதிராக SLTJ நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
February 28, 2012
சமூக சேவை

“அந்நிய சக்திகள் இலங்கையின் இறைமையை தட்டிப்பறிக்க இடமளியோம்!”
களத்தில் இறங்கியது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணை குழுவின் பரிந்துரையை இலங்கை அரசு நடைமுறைப்பபடுத்தத் தவறிவிட்டது என்றும் கூறி அமெரிக்க தலைமையிலான மேற்குலக ஆதிக்கவாதிகள் நேற்று ஜெனீவாவில் வைத்து இலங்கை அரசுக்கெதிராய் தீர்மானங்கள் நிறைவேற்றக் காத்திருந்தன.
இலங்கை தேசத்து பிரச்சினையை அதன் குடிமக்களாகிய நாங்கள் பேசித்தீர்த்துக் கொள்வோம்! ஆட்டூழியம் புரிந்து பல நாடுகளின் இயற்கை வளங்களை சூரையாடி தனது மத மற்றும் உளுத்துப் போன சீரழிந்த கலாச்சாரத்தை திணித்து பல நாடுகளை சுடுகாடாய் மாற்றிய அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகளுக்கு மனித உரிமை [...]

கலாவெவயில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த இரத்த தான முகாம்

கலாவெவயில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த இரத்த தான முகாம்
February 27, 2012
இரத்த தானங்கள்

அனுராதபுரம் மாவட்டத்தில் தொடரச்சியாக மூன்றாவது முறையும் இரத்த தானம் செய்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் முதல் நிலையில் உள்ளது.
25.02.2012 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கலாவெவ  நேகமை மற்றும் ஹோராப்பொலை கிளைகள் இணைந்து நடத்திய இரத்த தான முகாமில் 111 பேர் இரத்த தானம் செய்து   அம்மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றது.

சர்வதேசத்தின் சதிகார வலைப்பின்னலில் சிக்கவிடாது தாயகத்தை பாதுகாப்போம்!

சர்வதேசத்தின் சதிகார வலைப்பின்னலில் சிக்கவிடாது தாயகத்தை பாதுகாப்போம்!
February 27, 2012
அறிவிப்பு

ஜெனீவா பிரேரணைக்கு எதிராக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்ப்பாட்டம்!
27.02.2012 பகல் 2.00 மணிக்கு S.L.T.J. தலைமையகத்திற்கருகில்
அனைவரும் அணி திரண்டு வாருங்கள்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது அமர்வு நாளை ஆரம்பமாக உள்ள நிலையில்ää இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ளதாகக் கூறப்படும் தீர்மானத்தை 25 முதல் 30 நாடுகள் ஆதரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என்று ஜெனிவாத் தகவல்கள் கூறுகின்றன.    47 நாடுகளைக் கொண்ட மனித உரிமைகள் சபையில் 24 நாடுகளின் ஆதரவு இருந்தால் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குத் தமது உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளன. அதேபோன்று ஆபிரிக்க நாடுகளும் தமது ஆதரவைத் தெரிவிக்க உள்ளன.    இலங்கைக்கு எதிரான பிரேரணையை [...]

ஸிஹ்ர் ஓர் ஆய்வு

ஸிஹ்ர் ஓர் ஆய்வு
February 26, 2012
ஆய்வுகள்

அல் குர்ஆனும் சுன்னாவும் முரண்படுமா என்று “ஞான சூனியங்கள் ” அண்மைக் காலமாக கேள்வி எழுப்பி வருகின்றன. அல்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்தது. அதற்கு விளக்கவுரையாகத் தான் ஹதீஸ்கள் உள்ளன.
எனவே அல்குர்ஆனுக்கு முரணாக உள்ளவைகள் ஹதீஸ்களாக இருக்க முடியாது. ஹதீஸ்கள் என்ற பெயரில் சில பொய்களும் கட்டுக் கதைகளும் இடைச் செறுகள் செய்யப்பட்டன. அந்த தொடரில் நபி (ஸல்) அவர்கள் ஆறு மாதங்கள் பைத்தியமாக இருந்ததாக சில இட்டுக்கட்டப்பட்ட செய்திகளும் புகுத்தப் பட்டுள்ளன.
சிந்திக்காத சிந்தனைத் திரணற்ற சிலர் நபியையும் கேவலப்படுத்தி வருகின்றர். எனவே இது தொடர்பான தெளிவை வளங்குவதற்காக இத்தொடர் வெளியிடப்படுகிறது.

ஸிஹ்ர் ஓர் ஆய்வு- தொடர் 1

மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதப் புகுந்த [...]

SLTJ கம்பளை கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

SLTJ கம்பளை கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி
February 25, 2012
வாராந்திர பயான்கள்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கம்பளை கிளையில் கடந்த 25.02.2012 அன்று இஷா தொழுகையின் பின்  வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோதரர் ஹபீல் ஸலபி அவர்கள் அல்குர்ஆனும் விஞ்ஞானமும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராலமானோர் கலந்து பயனடைந்தனர்.

ரபீஉல் ஆகிர் மாத முதல் பிறை

ரபீஉல் ஆகிர் மாத முதல் பிறை
February 23, 2012
அறிவிப்பு

நேற்று இலங்கையில் எப்பகுதியிலும் பிறை தென்படாததால் ரபீஉல் அவ்வல் மாதம் முப்பதாகப் பூர்த்தியான நிலையில்  இன்று மஃரிபிலிருந்து ரபீஉல் ஆகிர் மாதம் ஆரம்பமாகிறது.

ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?
February 23, 2012
நூல்கள்

நூலின் பெயர் : ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா
ஆசிரியர் : எஸ்.அப்பாஸ் அலி

بسم الله الرحمن الرحيم

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டையும் ஒரு முஸ்லிம் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் இதற்கு மாற்றமாக செயல்படக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாக பல வழிகளில் மக்களுக்கு நாம் கூறி வருகிறோம். இதுவே நமது உயிர் மூச்சாக இன்று வரை இருந்து வருகிறது. இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களிலும் நமது பிரச்சாரம் இதை மையமாகக் கொண்டே அமையும்.

குர்ஆன் மட்டும் போதும். ஹதீஸ் வேண்டாம் என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் கிளம்பிய போது இந்த வழிகேட்டிலிருந்து அவர்களையும் அவர்களிடமிருந்து [...]

பதுலை பண்டாரவலையில் SLTJயின் புதிய கிளை அங்குராப்பணம்

பதுலை பண்டாரவலையில் SLTJயின் புதிய கிளை அங்குராப்பணம்
February 22, 2012
புதிய கிளை துவக்க நிகழ்ச்சிகள்

பதுலை மாவட்டத்தில் பண்டாரவைல எனும் ஊரில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தஃவா மற்றும் நிர்வாக விதிமுறைகளை ஏற்றுக் கொண்டு அழைப்பு பணியை வீரியமாகவும் தூய்மையாகவும் செய்வதற்கு முன் வந்துள்ள பன்டாரவைல ஏகத்துவச் சகோதரர்கள் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ கிளையாக தங்களை இணைத்துக் கொண்டனர்.
கொள்கையில் உறுதியாக செயல்படும் நம் சகோதரர்கள் நாளுக்கு நாள் ஜமாஅத்துடன் கிளைகளாக இணைந்த வன்னம் உள்ளனர். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே..
பண்டாரவலை கிளை நிர்வாகிகள்

தலைவர்   :      M.S.M. முபாரக்         0710714114

உப தலைவர் :   S. அப்துர் ரஹீம் 0724123242

செயலாளர் :      M.S.M. ஹலீம்         0777980939

உப செயலாளர் :       M.S.M. முஹாஜிரீன்    0776288209

பொருளாளர்      :      [...]

சகோதரர் ஸஹ்ரான் அவர்களின் 4வது கடிதத்திற்கான பதில்.

சகோதரர் ஸஹ்ரான் அவர்களின் 4வது கடிதத்திற்கான பதில்.
February 22, 2012
விமர்சனங்கள்

சகோதரர் ஸஹ்ரான் அவர்களுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையில் விவாதம் தொடர்பாக தொடர் கடிதப் பரிமாற்றங்கள் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே! அந்த வகையில் நமது 3வது கடிதத்திற்கு மவ்லவி ஸஹ்ரான் அவர்கள் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அக்கடிதத்தையும்  அதற்கு நமது ஜமாத் சார்பாக அனுப்பப்பட்ட பதில் கடிதத்தையும் இங்கு வெளியிடுகிறோம்.

மவ்லவி ஸஹ்ரான் அவர்கள் அனுப்பிய கடிதம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பதில் கடிதம்.

இலக்கில்லாத இயக்கங்கள் விளக்கமில்லாத தலைவர்கள்

இலக்கில்லாத இயக்கங்கள் விளக்கமில்லாத தலைவர்கள்
February 22, 2012
விமர்சனங்கள்

(ஏகத்துவம் மாத இதழில் வெளியான இவ்வாக்காத்தை வாசகர் நலம் கருதி எமது இணயைத்தளத்திலும் வெளியிடுகிறோம்)

சாதாரணமாக பஸ் அல்லது ரயிலில் ஏறிப் பயணம் செய்கின்ற ஒரு மனிதன் கூட ஓர் இலக்குடன் பயணம் செய்கின்றான். ஆனால் இன்று தமிழகத்தில் காளான்கள் போன்று தோன்றிப் பயணம் செய்கின்ற இயக்கங்களுக்கு ஓர் இலக்கு, ஒரு தூர நோக்கு, இலட்சியம் எதுவுமில்லாமல் பயணம் செய்கின்றனர்.

டமாக்ரடிக் பார்ட்டி, பாப்புலர் பிரண்ட், கேம்பஸ் பிரண்ட், டவுன்பஸ் பிரண்ட் என்று ஒரே சிந்தனை கொண்டவர்கள் இத்தனை பெயர்களில் இயங்கி வருகின்றனர். இவர்களின் இலக்கு என்ன? இலட்சியம் என்ன?