அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…
கொள்கை விளக்கம்
வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை உறுதியாக நம்புவதும்ää முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் திருத்தூதருமாவார் என்பதை உறுதியாக நம்புவதும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும்.
அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும்
அல்லாஹ்வை வணங்குங்கள் அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!
அல்குர்ஆன் 4:36
ஜின்னையும்ääமனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. அல்குர்ஆன் 51:56
இணை கற்பித்தல் கூடாது
அகில உலகையும் படைத்துää காத்து பராமரிக்கும் ஒரே ஒரு இறைவன் அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது.அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை.எதுவும் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும்.
பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகள்ääஆற்றல்கள் அவனுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கும் இருப்பதாக நம்புவதும் அல்லாஹ்வுக்குச் செய்யும் வழிபாடுகளில் எந்த ஒன்றையும் மற்றவர்களுக்குச் செய்வதும் இணை கற்பித்தல் ஆகும்.
இணை கற்பித்தல் மாபெரும் அநியாயம்
லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது “என் அருமை மகனே!அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே!இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்” என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக! அல்குர்ஆன் 31:13
இணை கற்பித்தல் மன்னிக்கப்படாத குற்றம்
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ்; நிலையில் உள்ள (பாவ)த்தைää தான் நாடியோருக்கு மன்னிப்பான்.அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப்பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். அல்குர்ஆன் 4:48
இணை கற்பித்தல் நிரந்தர நரகம்
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான்.அவர்கள் சென்றடையும் இடம் நரகம்.அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை. (அல்குர்ஆன் 5:72)
இணை கற்பித்தால் நல்லறங்கள் அழிந்துவிடும்
“(நபியே) நீர் இணை கற்பித்தால் உமது நல்லறங்கள் அழிந்து விடும்”
அல்குர்ஆன் 39:65
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்கம் புகுவார்”.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல் : புகாரி (1238)
தர்ஹா வழிபாடு
இறந்து போன நல்லடியார்களிடம் முஸ்லிம்கள் சிலர் பிரார்த்தனை செய்கின்றனர்.அவர்கள் இறந்து அடக்கம் செய்யப்பட்ட பல ஆண்டுகள் உருண்டோடிய பின்பும் இவ்வாறு பிரார்த்தனை செய்கின்றனர்.
அல்லது ஒரு கிராமத்தை கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது.”இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்? என்று நினைத்தார்.உடனே அவரை அல்லாஹ் நூரு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான்.பின்னர் அவரை உயிர்ப்பித்தான்.”எவ்வளவு நாளை கழித்திருப்பீர்? என்று கேட்டான்.”ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்” என்று அவர் கூறினார்.”அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும்ää பாணமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்து விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும் அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிரோம் என்பதையும் கபனிப்பீராக!”என்று அவன் கூறினான்.அவருக்குத் தெளிவு பிறந்த போது “அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்”எனக் கூறினார். (அல்குர்ஆன் 2:259)
இவ்வசனத்தில் மிகச் சிறந்த நல்லடியார் ஒருவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்கிறான்.அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே அவரது உடல் கிடந்தது.
ஆயினும் தாம் எத்தனை ஆண்டுகள் இவ்வாறு இருந்தோம் என்பதை அவரால் அறிய இயலவில்லை.ஒரு நாள் தூங்கியதாகவே நினைகிறார்.பூமிக்குள் அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே இந்த நல்லடியாரின் உடல் இருந்தும் அவரால் தனக்கு என்ன நேர்ந்தது என்பதையே அறிய முடியவில்லை என்றால் பூமிக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள் எவ்வாறு இவ்வுலகில் மற்றவர்களின் நிலைகளை அறிவார்கள என்பதைச் சிந்திக்க வேண்டும்.
இறந்தவர்கள் செவியேற்கமாட்டார்கள்
உயிருடன் உள்ளோரும்ää இறந்தவரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான்.மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. (அல்குர்ஆன் 35:22)
நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது. (அல்குர்ஆன் 27:80)
பிரார்த்தனைக்கு பதிலளிக்க மாட்டார்கள்
அவனே அல்லாஹ் உங்கள் இறைவன்.அவனுக்கே அதிகாரம்.அவனையன்றி நீங்கள் யாரை அழைகிரீர்களோ அவர்கள் அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள்.செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள்.கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள்.நன்கறிந்தவனை போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. அல்குர்ஆன் 35:13ää14
அல்லாஹ்வை அன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப்பாருங்கள்! அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும். அல்குர்ஆன் 7:194
கப்ரை கட்டுவதுää பூசுவது கூடாது!
நபி (ஸல்) அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (1610)
உயர்த்தப்பட்ட கப்ருகளை தரைமட்டமாக்குதல்
அபுல் ஹய்யாஜ் அல் அஸதி அறிவிக்கிறார்கள் : அலி (ரலி) அவர்கள் என்னிடம் நபி (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக அனுப்பினார்களோ அதே பணிக்கு உன்னை அனுப்புகிறேன்.எந்த சிலையையும் அதனை அழிக்காமலும் எந்தக் கப்ரையும் அதனை தரைமட்டம் ஆக்காமலும் விட்டு விடாதே!என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம் (1609)
நபி (ஸல) அவர்கள் கூறினார்கள் “உங்களுடைய கப்ருகளை தரையோடு மட்டமாக ஆக்குங்கள்.
அறிவிப்பவர் : ஃபழாலா பின் உபைத் (ரலி)
நூல் : அஹ்மத் (22834)
அல்லாஹ்வின் சாபம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யூதää கிறிஸ்தவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான்.(ஏனென்றால்) தங்களுடைய நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடமாக எடுத்துக் கொண்டனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (1330)
படைப்பினங்களிலேயே மோசமானவர்கள்
அறிந்து கொள்ளுங்கள்! மக்களிலேயே மோசமானவர்கள் தங்களின் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிக் கொண்டவர்கள் தான்.என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ உபைதா (ரலி)
நூல் : அஹ்மத் (16781)
தாயத்துää தாவிஸ் அணிதல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் தாயத்தை தொங்கவிடுகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல் : அஹ்மத் (16781)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் தாயத்தை தொங்க விடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான். யார் சிப்பியை தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தை நிறைவேற்ற மாட்டான்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல் : அஹ்மத் (16763)
இம்ரான் பின் ஹ_ஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள்.அவருடைய கையில் ஒரு மஞ்சல் நிற வளையம் இருந்தது.இது என்ன? என்று கேட்டார்கள்.அதற்கு அவர் வாஹினா (தொடையில் ஏற்படும் ஒரு வகையான நோய்) ஏற்பட்டதால் (அணிந்துள்ளேன்) என்று கூறினார்.நபி (ஸல்) அவர்கள் இதை கலற்றி விடு. இது உனக்கு பலஹீனத்தை தான் ஏற்படுத்தும்.இது உன் மீது இருக்கும் நிலையில் நீ மரணித்து விட்டால் நீ ஒரு போதும் வெற்றி பெற மாட்டாய் என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மத் (19149)
வானஙகளையும்ää பூமியையும் படைத்தவன் யார்?”என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று கூறுவார்கள்.”அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்.”என்று கேட்பீராக!”அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும் .சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்.”என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 39:38)
தாயததுää தாவீதுகளைக் கட்டுதல் தட்டுகளில் எழுதிக் கரைத்துக் குடித்தல் வீடுகளி;ல் வெள்ளைக்கல்லைத் தொங்கவிடுவதுää சிறிய பாட்டில்களையும் பூசணிக்காய்ää உருவப்பொம்மைகள் போன்றவற்றைத் தொங்கவிடுவதும் இணைவைப்புக் காரியங்களாகும்.இவற்றைத் தவிர்ந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுதல்
தாமாகச் செத்தவைää இரத்தம்ää பன்றியின் இறைச்சிää அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு தடைசெய்துள்ளாhன்.வரம்பு மீறாமலும்ää வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை.அல்லாஹ் மன்னிப்பவன்ää நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:173)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தன் பெற்றோரைச் சபித்தவனை அல்லாஹ் சபித்துவிட்டான்.அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுபவரையும் அல்லாஹ் சபித்து விட்டான்.பித்அத் செய்பவனையும் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை ஏற்படுத்துபவனுக்கு அடைக்கலம் அளிப்ப வனையும் அல்லாஹ் சபித்து விட்டான்.அடையாலக் கல்லை மாற்றுபவனையும் அல்லாஹ் சபித்து விட்டான்.
அறிவிப்பவர் : அலீ பின் அபீதாலிப் (ரலி0
நூல் : முஸ்லிம் (3657)
நேர்ச்சை செய்தல்
யார் அல்லாஹ்வுக்கு வழிபடும் விஷயத்தில் நேர்ச்சை செய்தாரோ அவர் (அதனை நிறைவேற்றி) அவனுக்கு வழிபடட்டும்.யார் அவனுக்கு மாறு செய்யும் விஷயத்தில் நேர்ச்சை செய்தாரோ (அவர் அதை நிறைவேற்றி) நிறைவேற்றி அவனுக்கு மாறு செய்யவேண்டாம்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (6696
வரம்பு மீறிப் புகழ்ந்தல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கிறிஸ்தவர்கள்ää மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறி புகழ்ந்ததைப் போன்று என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். நான் அல்லாஹ்வுடைய அடியான் தான்.அல்லாஹ்வுடைய அடியாhக் என்றும் அவனுடைய தூதர் என்றும் கூறுங்கள்.
அறிவிப்பவர் : உமர் (ரலி)
நூல் : புகாரி (3445)
இன்று முஸ்லிம்கள் பரவலாக ஓதக்கூடிய சுப்ஹான மவ்லிதுää முகைதீன் மவ்லிதுää புர்தாää சாகுல் ஹமீது மவ்லிது போன்ற எந்த மவ்லிதாக இருந்தாலும் நபி (ஸல்) அவர்களையும் மற்றவர்களையும் இறைவனுடைய ஆற்றல் அளவிற்கு வரம்பு மீறிப் புகழ்ந்த வரிகள் அதில் நிறைந்துள்ளன.உதாரணம்
நீங்கள் தான் எங்கள் பாவங்களை மன்னிக்கக்கூடியவர்
எங்களுடைய தீமைகளை மறைக்கக் கூடியவரும் நீங்கள் தான்.
இது போன்ற இணைவைப்பான வரிகள் மவ்லிதுகளில் வருகின்றன.இவற்றைச் சாதாரணமாகப் படிப்பது கூட தவறாகும்..
ஜோசியம் பார்த்தல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபி (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) நிராகரித்து விட்டான்.
அறிவிப்பவர் : அபூஹ_ரைரா (ரலி)
நூல் : அஹ்மத் (9171)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஜோதிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாறபது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.
அறிவிப்பவர் : ஸபிய்யா (ரலி)
நூல் : முஸ்லிம் (4137)
பரவலாக முஸ்லிம்களுக்கு மத்தியில் பால் கிதாப் பார்த்தல் என்ற ஒரு நடைமுறை காணப்படுகிறது.இதுவும் ஜோதிடத்தில் சேர்ந்தது தான்.எனவே பால் கிதாப் பார்ப்பதும் இணைவைப்புக் காரியமாகும்.
நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தொற்று நோய் என்பது கிடையாது.சகுனம் என்பதும் இல்லை. ஆ;ந்தை சகுனமும் கிடையாது. பீடை மாதமும் கிடையாது.
ஆறிவிப்பவர் : அபூஹீரைரா (ரலி)
நூல் : புகாரி (5757)
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் : சகுனம் பார்ப்பது இணைகற்பித்தலாகும் என்று மூன்று முறை கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : அபூதாவூத் (3411)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவன் சகுனம் பார்;த்து தனது காரியத்தை மாற்றுகிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான்.
அறிவிப்பவர் : இப்னு அம்ரு (ரலி)
நூல் : அஹ்மத் (6748)
இன்றைக்கு அதிகமான முஸ்லிம்கள் மக்களின் திருமணம்ää பயணம்ää மேலும் பல காரியங்களுக்கு நல்ல நேரம்ää கெட்ட நேரம் பார்த்தே நடக்கின்றனர்.
அதே போன்று விதவைப் பெண்ää பூணை குறுக்கே வருவதும் சகுனம் என்றும் நம்பிக்கை வைத்துள்ளனர்.இது போன்ற நம்பிக்கைகள் அனைத்துமே இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயல்கள் ஆகும்.
சூனியம் செய்தல்
அல்லாஹ்வின் விருப்பம் இன்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. (அல்குர்அன் 2:102)
சூனியம் என்ற வித்தை மூலம் பாரதூரமான காரியங்களைச் செய்ய முடியும் என்று பலரும் எண்ணுகின்றர். இருப்பதை இல்லாமல் ஆக்கவோ இல்லாததை உருவாக்கவோ ஒன்றை வேறொன்றாக மாற்றவோ எந்த வித்தையும் கிடையாது.
தந்திரம் செய்து இப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முடியும்.அவ்வளவு தான்! இருக்கும் பொருளையே யாருக்கும் தெரியாத வகையில் மறைத்து பின்னர் எடுத்துக் காட்ட முடியும்.
“நீங்களே போடுங்கள்!” என்று (மூஸா) கூறினார்.அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள்.மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள்.பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். (அல்குர்ஆன் 7:116)
இவ்வசனத்தில் சூனியக்காரர்கள் மக்களின் கண்களை ஏமாற்றினார்கள் என்று அல்லாஹ கூறுகிறான்.
“இல்லை நீங்கள் போடுங்கள்!” என்று அவர் கூறினார்.உடனே அவர்களின் கயிறுகளும்ää கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. (அல்குர்ஆன் 20:66)
இவ்வசனத்தில் பாம்பைப் போல் கற்பனையான தோற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.கயிறுகளைப் பாம்புகளாக அவர்கள் மாற்றினார்கள் என்று அல்லாஹ் கூறவில்லை.
மேஜிக் எனப்படும் கலை தான் ஸிஹ்ர் எனும் சூனியமே தவிர வேரில்லை.கையை முடக்குவேன்ää காலை முடக்குவேன் என்றும் இல்லாததை உண்டாக்குவேன் என்றும் புளுகக் கூடியவர்கள் தங்கள் மந்திர சக்தியினால் பெரும் வசதி படைத்தவர்களாக ஆக முடியவில்லை.மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து வேண்டுமானால் பணக்காரர்களாக சிலர் ஆகியிருக்க முடியும். இதிலிருந்தே சூனியம் என்பஷது வெறும் பித்தலாட்டாம் என அறிய முடியும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று நபர்கள் சொர்கம் புகமாட்டார்கள்.1 மது அருந்துபவன் 2 உறவுகளை துண்டிப்பவன் 3 சூனியத்தை உண்மை என நம்புவன்.
நூல் : அஹ்மத் ( 18748)
அழித்துவிடும் ஏழு பாவங்களில் நபி (ஸல்) அவர்கள் சூனியத்தையும் ஒன்றாக குறிப்பிட்டுள்ளார்கள்
நூல் : புகாரி (2767)
அல்லாஹ் அல்லாதவர்களின் மீது சத்தியம் செய்தல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒருவர் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும்.இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (2679)
இன்னும் இதே போன்று பல இணைவைப்பான காரியங்கள் நம் சமூகத்தில் இருக்கின்றன.அவைகள் விட்டும் முற்று முழுதாக தவிர்ந்து அல்லாஹ் ஒருவனை மாத்திரம் நம்பி வழிபட்டு இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபேருவோமாக!
குர்ஆன்ää ஹதீஸைப் பின்பற்றுதல்;
அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட இந்த இஸ்லாமிய மார்க்கத்தை அல்லாஹ் தன் வேதமான திருக்குர்ஆன் மூலமும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்கள் மூலமும் காட்டித் தந்துள்ளான்.
இந்த இரண்டும் தான் இஸ்லாத்தின் அடிப்படையாகும்.இந்த இரண்டை மட்டும் தான் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அல்லாஹ் திருக்குர்ஆனில் ஏராளமான வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.
நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும்ää அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்!
(அல்குர்ஆன் 8:1)
அல்லாஹ்வுக்கும்ää அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான்.அவற்றின் கீழ் பகுதியில் ஆறுகள் ஓடும்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 4:13)
அல்லாஹ்வுக்கும். இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர் அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள்ää உண்மையாளர்கள்ää உயிர் தியாகிகள்ää மற்றும் நல்லோருடன் இருப்பார்கள்.அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4:69)
இஸ்லாத்தின் அடிப்படையில் உள்ள இறைவனின் வாக்கான திருக்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழி முறைகளைப் பின்பற்றாதவனை திருக்குர்ஆன் கடுமையாக எச்சரிக்கிறது.
அல்லாஹ்வுக்கும்ää அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை நரகில் நுழையச் செய்வான்.அதில் அவன் நிரந்தரமாக இருப்பான்.அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு (அல்குர்ஆன் 4:;14)
அல்லாஹ்விடமிருந்தும்ää அவன் தூதுச் செய்திகளிலிருந்தும் எடுத்துச் சொல்வதைச் தவிர (வேறு இல்லை) அல்லாஹ்வுக்கும்ää அவனது தூதருக்கும் மாறு செய்வோருக்கு நரக நெருப்பு உள்ளது.அதில் என்றென்றும் அவர் நிரந்தரமாக இருப்பார். (அல்குர்ஆன் 72:23)
அநீதி இழைத்தவன் தனது கைகளைக் கடிக்கும் நாளில் “இத்தூதருடன் நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்கலாமே!” என்று கூறுவான். (அல்குர்ஆன் 25:27)
இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குர்ஆனையும் நபி வழியையும் விட்டுவிட்டு முன்னோர்கள் சொன்னார்கள் என்பற்காக அல்லது பெரும்பான்மை மக்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்பதற்காகவோ அவற்றைப் பின்பற்றுபனுக்கு பின் வரும் திருக்குர்;ஆன் வசனங்கள் தெளிவான அறிவுரையை கூறுகிறது.
“அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோர்கள் எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்” என்று (மக்கா காபிர்கள்) கூறுகின்றனர்.அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (அல்குர்ஆன் 2:170)
“அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கயும் வாருங்கள் !” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்” என்று கூறுகின்றனர்.அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (அல்குர்;ஆன் 5:104)
அவர்கள் வெட்கக்கேடான காரியத்தை செய்யும் போது “எங்கள் முன்னோர்களை இப்படித் தான் கண்டோம்.அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்.” என்று கூறுகின்றனர்.”அல்லாஹ் வெட்கக் கேடானதை ஏவமாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்;லாஹ்வின மீது இட்டிக்கட்டிக் கூறுகிறீர்களா?” என்று (முஹம்மதே) கேட்பீராக! (அல்குர்ஆன் 7:28)
ஆவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள்.”எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும்ää எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம்.அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்.” எனவும் கூறுவார்கள். “எங்கள் இறiவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையை அளிப்பாயாக!அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக” எனவும் கூறுவார்கள்.
(அல்குர்ஆன் 33: 66ää68)
இதைப் போன்று பெரும்பான்;மை கூட்டம் சொல்வதால் ஒரு கருத்து உண்மையானதாக சத்தியமானதாக ஆகி விடாது.என்பதையும் திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை. (அல்குர்ஆன் 7:187)
எனினும் அவர்களில் அதிகமானோர் அறியாதவர்கள் (அல்குர்ஆன் 6:111)
அவர்களில் பெருப்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை (அல்குர்ஆன் 12:106)
எனினும் அவர்களில் பெரும்பாலோர் உண்மையை அறிய மாட்டார்கள்.அவர்கள் புறக்கணிப்பவர்கள்
(அல்குர்ஆன் 21:24)
அவர்கள் ஒட்டுக் கேட்கின்றனர்.அவர்களில் அதிகமானோர் பொய்யர்கள். (அல்குர்ஆன் 26:223)
பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள்.அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர்.அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை. (அல்குhஆன் 6:116)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் சமூதாயத்தில் ஒரு குழுவினர் (உண்மை கொள்கைக்கு) ஆதரவாளர்களாக இருந்துகொண்டே இருப்பார்கள்.இறுதியாக அவர்கள் மேலோங்கியவர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களிடம் இறைக் கட்டளை (யான மறுமை நாள்) வரும்.
அறிவிப்பவா : முஃகீரா (ரலி)
நூல் : புகாரி (7311)
நுபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இஸ்லாமிய மார்க்கம் புதுமையானதாக (ஆரம்பத்தில் மக்கள் மனதில்) தோன்றியது.முன்னால் தோன்றியது போலவே புதுமைவாதிகளுக்கு நற்செயதி உண்டாகட்டும்.
அறிவிப்பவர் : அபூஹ_ரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (208)
முன்னோர்கள் சொன்னதற்கும் செய்தற்கும் மாற்றமாக இருக்கிறதுää முரணாக இருக்கிறது என்பதற்காகவோ புதிய கருத்தாக இருக்கிறது என்பதற்காகவோ ஒரு கருத்தை மறுக்கக் கூடாது.எந்தக் கருத்தாக இருந்தாலும் அது திருக்குர்ஆன் நபிமொழிக்கு ஒத்ததாக இருக்கிறதா? அல்லது முரணாக இருக்கிறதா? என்பதைப் பார்த்து திருக்குர்ஆன் நபிமொழிக்கு ஒத்த இருக்கும் கருத்தை ஏற்று முரணாக இருக்கும் கருத்தைப் புறக்கணிக்க வேண்டும்.
நமக்க மத்தியில் பிரச்சினைகள் ஏற்படும் போது திருக்குர்ஆனையும் நபி மொழியையும் வைத்தே எக்கருத்து சரியானது என்பதை முடிவுசெய்ய வேண்டும்.இவ்வாறே திருக்குர்ஆன் வழிகாட்டுகிறது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்.! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்!ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும் இத்தூதரிமும் கொண்டு செல்லுங்கள்.!இதுவே சிறந்ததும் மிக அழகிய விளக்கமுமாகும். (அல்குர்ஆன் 4:59)
(முஹம்மதே) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்றுப் பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தியுமு; கொள்ளாமல்ää முழுமையாக கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (அல்குர்;ஆன் 4:65)
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும் அவனது தூதரிமும் அழைக்கடும் போது “செவியுற்றோம கட்டுப்பட்டோம்” என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும்.அவர்ளே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24:51)
அல்லாஹ் காட்டிய இந்த அற்புதமான வழிமுறைகளை விட்டு விட்டு யார் சொன்னாலும் அதை மார்க்கமாக எடுத்தச் செயல்பட்டால் அதற்கு கூலி கிடைக்காததோடு தண்டனையும் கிடைக்கும்.
இன்றை தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்.எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன்.இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)
நான் உங்களை (மார்கம்) வென்மையான (தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கிறேன்.அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும்.அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்.
அறிவிப்பவர் : இர்பாள் பின் ஸாரியா (ரலி)
நூல் : அஹ்மத் (16519)
மார்க்கம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு முழுமைப்படுத்தப்பட்டு விட்டது.இனி இம்மார்க்கத்தில் ஒன்றைக் கூட்டுவதற்கோää குறைப்பதற்கோ யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது.
இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத வழிமுறைகளைப் பின்பற்றுவது அல்லாஹ்வுக்கு இம்மார்க்கத்தைக் கற்றுக் கொடுப்பது போன்றதாகும்.அதாவது அல்லாஹ் முழுமைப்படுத்திய மார்க்கம் எங்களுக்குப் போதாது.இன்னும் பல விஷயங்கள் உள்ளன என்று கூறுவதைப் போன்றதாகும்.
அல்லாஹ் கேட்கிறான் :
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லாஹ் வானங்களிலும்ää பூமியிலும் உள்ளதை அறிவான்.அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக (அல்குர்ஆன் 49:16)
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட வேண்டும் என்று மேற்கூறப்பட்ட வசனங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.ஆனால் இன்றைய முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படாமல் அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டித்தராதவைகளெல்லாம் மார்க்கம் என்று நினைத்து செய்துகொண்டிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகின்றாரோ அது மறுக்கப்டும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (2690)
நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம்
செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மத் (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாக்கக்கூடியவைகள் அனைத்தும் பித்அத்களாகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஓவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : நஸாயி (1560)
இஸ்லாமிய மார்க்கம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு முழுமைப்படுத்தப்பட்டு விட்டது.இனி இம்மார்க்கத்தில் ஒன்றை கூட்டுவதற்கோää குறைப்பதற்கோ யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது.
இன்றை தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்.எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன்.இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.
அல்குர்ஆன் 5:3
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான (தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கிறேன்.அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும்.அழியக்கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்.
அறிவிப்பவர் : இர்பான் பின் ஸாரியா (ரலி)
நூல் : அஹ்மத் (16519)
இன்று நம் இஸ்லாமிய சமுதாயத்தில் குர்ஆனுக்கும் நபி வழிக்கும் மாற்றமான எத்தனையோ புதுமையான நடைமுறைகள் காணப்படுகின்றன.அவற்றில் சில
1 பாங்குக்கு முன் ஸலவாத் கூறுவது
2 ஜூம்ஆவில் இரண்டு பாங்கு கூறுதல்
3 தொழுகைக்கு பின் கூட்டு துஆ ஓதுதல்
4 இறந்தவர்களுக்காக கத்தம் பாதிஹா ஓதுதல்
5 மவ்லூது மீலாது விழா கொண்டாட்டங்கள்
இதைப் போன்று எத்தனையோ செயல்கள் மார்க்கத்தின் பெயரால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.இவற்றிக்கும் நன்மை கிடையாது என்பதோடு தண்டனையும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)
இல – 241A ஸ்ரீ சத்தர்ம மாவத்தை,மாளிகாவத்தை, கொழும்பு – 10
Tel: 112677974, 0777255467,07715245254
E-mail: sltjmail@gmail.com , Web Site : www.sltjweb.com





