அறிவிப்பு

SLTJ தலைமையகத்தில் பெண்களுக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி

May 18, 2012
அறிவிப்பு

சத்திய இஸ்லாத்தை தெளிவாக எடுத்துரைக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாடு முழுவதிலும் பலவிதமான தஃவாப்பணிகளை எதிர்ப்புகளையும் தாண்டி செய்து வருகிறது. ஆண்களுக்கு மட்டும் இஸ்லாத்தை படிக்க வசதிகளை செய்துகொள்ளும் இக்காலத்தில் பெண்களக்கும் இஸ்லாத்தை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்ற  நந்நோக்கில் நாடளாவிய ரீதியில் பெண்களுக்கும் விசேட நிகழ்ச்சிகளை ஜமாஅத் செய்து வருகிறது. அதன் தொடராக கொழும்பிலும் (SLTJ தலைமையகத்தில்) எதிர்வரும் 26.05.2012 அன்று மாலை 4.00 இரவு 8.30 மணி வரை பெண்களக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்மாந்துரையில் பகிரங்க மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

சம்மாந்துரையில் பகிரங்க மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
May 16, 2012
அறிவிப்பு

சத்திய மார்க்கத்தை தூய்மையாக எடுத்துரைக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரப் பணி நாடளாவிய ரீதியில் பல தீய சக்திகளின் எதிர்ப்புகளையும் தாண்டி வீரியமாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.அதன் தொடரில் சம்மாந்துரையிலும் பகிரங்க மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வார மார்க்க விளக்க பொதுக் கூட்டங்கள்

இந்த வார மார்க்க விளக்க பொதுக் கூட்டங்கள்
May 11, 2012
அறிவிப்பு

சாய்ந்தமருது

இன்ஷா அல்லாஹ் ஸ்ரீலங்கா தவ்ஹத் ஜமாஅத்தின் கல்முனை – சாய்ந்தமருது கிளையின் ஏற்பாட்டில் இன்று(11.05.2012)மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இடம்:
சாய்ந்தமருது SEA BREEZE  ரெஸ்டூரன்ட் முன்னால்

உரையாற்றுபவர்களும் தலைப்புகளும்:

நாங்கள் தனித்து செயற்படுவது ஏன்?
சகோதரர்: ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸீ

தியாகத்தில் வளந்த இஸ்லாம்
சகோதரர்: அஜ்மீர் அமீனி

கலாவெவ

இன்ஷா அல்லாஹ் ஸ்ரீலங்கா தவ்ஹத் ஜமாஅத்தின் கலாவெவ கிளையின் ஏற்பாட்டில் நாளை(12.05.2012)மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

உரை: ரஸ்மின் எம்.ஐ.எஸ்.ஸீ
தலைப்பு: இது தான் இஸ்லாம்

இடம்: குஸலான கம

நேரம்: மலை 6.30 முதல் 9 மணி வரை

தொடர்புக்கு: 0713095595

தம்புள்ள பள்ளிவாசல் இடிப்பை எதிர்த்து SLTJயின் மாபெரும் கண்டன ஆர்ப்பாரட்டம்

தம்புள்ள பள்ளிவாசல் இடிப்பை எதிர்த்து SLTJயின் மாபெரும் கண்டன ஆர்ப்பாரட்டம்
April 27, 2012
அறிவிப்பு

அல்லாஹ்வின் ஆலயத்தை காப்பதற்கான மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி!
அழைக்கிறது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்

கடந்த 20.04.2012 ஆம் திகதி இலங்கை முஸ்லிம்களின்  உணர்வுகள் மொத்தமாய் எரிமலையாக்கப்பட்ட தினம்! இலங்கை தேசத்தின் இறைமையை காக்கும் இமைகளாய் வாழ்ந்த முஸ்லிம்களின் இறையில்லம், இனவாதிகளின் ஆக்ரமிப்புக்கும், அடாவடித்தனத்துக்கும் உள்ளாகி,எமது வழிபாட்டு உரிமை தட்டிப்பறிக்கப்பட்ட கரு தினம்! 60 ஆண்டுகளாய் அல்லாஹ்வை வழிபட்டு வந்த, அரச பதிவுகளுடன் கூடிய ஆவணங்களை அத்தாட்சியாய் வைத்துள்ள, ஓர் இறையில்லத்தை திட்டமிட்ட சதிவலைகள் மூலம் சில இனவாத சக்திகள் கபளீகரம் செய்ய எத்தனித்த தினம்!
‘பௌத்தர்களுக்குரிய புனித பூமிக்குள் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளம் அமைய இடமளியோம்! என்ற இனவாத கோஷத்துடன் ஓர் இறையில்லம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை இந்நாட்டின் பூர்வீகக் குடிகளான முஸ்லிம்களின் மத உரிமையை தட்டிப்பறிக்கும் [...]

மூன்று மாத அழைப்பாளர்கள் பயிற்சி நெறி

மூன்று மாத அழைப்பாளர்கள் பயிற்சி நெறி
April 17, 2012
அறிவிப்பு

மூன்று மாத வதிவிட வசதியுடன் கூடிய அழைப்பாளர்கள் பயிற்சி நெறி

அசத்திய அலைகள் மேல் எழுந்து வரும் இத் தருனத்தில் சத்திய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் வீரியத்துடனும் விவேகத்துடனும் எடுத்து உரைக்கும் ஏகத்துவ அழைப்பாளர்களை ஒவ்வொரு கிளையிலும் உருவாக்கும் நன்நோக்கில் இப்பயிற்சி நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இடம்
இஸ்லாமிய அழைப்பு மையம் SLTJ சிலாபம் கிளை

இப்பயிற்சி நெறியில் பங்குபெற விரும்புபவர்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் தமது விண்ணப்பப் படிவத்தினை SLTJ தலைமையகத்திற்கு அனுப்புதல் வேண்டும்.

24A, ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்

ஸ்ரீ சத்தர்ம மாவத்தை,

மாளிகாவத்தை,

கொழும்பு – 10

0112677974, 0774781780, 0774781481

விண்ணப்பப் படிவத்தினை இங்கு டவ்ன்லோட் செய்து கொள்ளலாம்.

சிலாபத்தில் SLTJயின் மாபெரும் இரத்த தான முகாம்

சிலாபத்தில் SLTJயின் மாபெரும் இரத்த தான முகாம்
April 11, 2012
அறிவிப்பு

தஃவாப் பணிகளில் மிகவும் வீரியமாக நடைபோடும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையினர் சமுதாயப் பணிகளையும் தொய்வின்றி செய்து வருகின்றதனர். அதன் ஒரு அங்கமாக இம்மாதம் 15ம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) மாபெரும் இரத்த தான முகாம் ஒன்றை நடாத்தவுள்ளனர். உதிரம் கொடுத்து உயிரைக் காக்கும் இம்மகத்தான பணி சிறப்பாக அமைந்திட உங்கள் பங்களிப்பையும் வழங்கிடுவீர்.

வெளிவந்து விட்டது ஏப்ரல் மாத “அழைப்பு” இதழ்.

வெளிவந்து விட்டது ஏப்ரல் மாத “அழைப்பு” இதழ்.
April 9, 2012
அறிவிப்பு

இஸ்லாத்தை அதன் தூய வடிவில்  வஹியின் வார்ப்பாய் எடுத்து சொல்லும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின்   ஏப்ரல் மாத “அழைப்பு” இதழ் வெளிவந்து விட்டது.

சமுதாயத்திற்கு தேவையான பல முக்கிய ஆக்கங்களை எவ்வித தயவுதாட்சன்யமுமின்றி எடுத்துரைக்கும் அழைப்பு இதழில் இந்த மாதம்
“ஆதிக்க வெறியாட்டத்திற்கான துரும்புச் சீட்டே ஜெனீவா பிரேரணை”
“மவ்லித் ஓதும் மவ்லவிகள் ஷீயாக்களே!”
“முஜ்தஹித் வேஷம் போடும் முகல்லித்”

போன்ற விமசனக் கட்டுரைகளடன் இன்னும் பல முக்கிய ஆக்கங்களையும் பார்த்துப் பயனடையுங்கள்

அழைப்பு இதழைப் பெற்றுக் கொள்ள : 0773951616/ 01122677974

ஹோராப்பொலையில் பெண்களுக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி

ஹோராப்பொலையில் பெண்களுக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி
March 29, 2012
அறிவிப்பு

சத்திய இஸ்லாத்தை தெளிவாக எடுத்துரைக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாடு முழுவதிலும் உள்ள கிளைகளினூடாக பலவிதமான தஃவாப்பணிகளை எதிர்ப்புகளையும் தாண்டி செய்து வருகிறது. ஆண்களுக்கு மட்டும் இஸ்லாத்தை படிக்க வசதிகளை செய்துகொள்ளும் இக்காலத்தில் பெண்களக்கும் இஸ்லாத்தை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்ற  நந்நோக்கில் நாடலாவிய ரீதியில் பெண்களுக்கும் விசேட நிகழ்ச்சிகளை ஜமாஅத் செய்து வருகிறது. அதன் தொடராக கெகிராவை, ஹோராப்பொலையில் எதிர்வரும் 31.03.2012 அன்று மாலை 3.45 முதல் 6.00 மணி வரை பெண்களக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜமாதுல் அவ்வல் மாத முதல் பிறை அறிவிப்பு

ஜமாதுல் அவ்வல் மாத முதல் பிறை அறிவிப்பு
March 24, 2012
அறிவிப்பு

நேற்று இலங்கையில் எப்பகுதியிலும் பிறை தென்படாததால் ரபீஉல் ஆகிர் மாதம் முப்பதாகப் பூர்த்தியான நிலையில்  இன்று மஃரிபிலிருந்து ஜமாதுல் அவ்வல் மாதம் ஆரம்பமாகிறது.

அகுரனையில் SLTJ யின் மாபெரும் இரத்த தான முகாம்

அகுரனையில்  SLTJ யின் மாபெரும் இரத்த தான முகாம்
March 8, 2012
அறிவிப்பு

இஸ்லாத்தை வீரியமாக எடுத்துரைக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அகுரனை கிளை பாரிய எதிர்களுக்கு மத்தியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அல்ஹம்து லில்லாஹ்
சத்தியப் பிரச்சாரத்தில் சவால்களை தாண்டிச் செல்லும் இவர்கள் சமுதாயப்பணியிலும் தமது முழு ஆர்வத்தையும் காட்டுகின்றமை குறிப்பிடத் தக்கதே.

இவர்களின் அடுத்த முயற்சியாக

SLTJ வட்டதெனிய கிளையில் ஜும்ஆ ஆரம்பம்

SLTJ வட்டதெனிய கிளையில் ஜும்ஆ ஆரம்பம்
March 5, 2012
அறிவிப்பு

 ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் வட்டதெனிய கிளையில் எதிர்வரும் 09.03.2012ம் திகதியில் நபி வழி அடிப்படையில் ஜம்மா ஆரம்பிக்கப்பட உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!