கட்டுரைகள்

ஏப்ரல் பூல் ? முட்டாள்கள் தினம். இஸ்லாத்தில் ஏற்புடையதா?

April 3, 2012
கட்டுரைகள்

ஆக்கம்: ஜவாஹீர் (ஜமாலி)

மனித குலத்தின் ஈருல வெற்றிக்கு கருவாக இருக்கின்ற திருமறைக் குர்ஆன் ஜாஹியாக்காலம் தொட்டு இன்றைய நவீன காலம் வரை ஏற்படுத்திய மாற்றங்களையும் சாதித்த சாதனைகளையும் எழுத ஆரம்பித்தால் பேனாவின் மைக்குப்பிகள் முடிவுற்று விடும்.

நூங்கள் வாழுகின்ற சமகால, தேசிய, சர்வதேச சமூக அமைப்புக்கள். இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான ஜாஹிலிய்யத்தின் அடிப்படை அடித்தலத்தில் அமைந்திருப்பதை அவதானிக்கின்றோம்.

அறிவும்,  ஆராய்ச்சியும்  அமோகமாய்  முன்னேறிய  இன்றைய  கால கட்டத்தில் மனிதர்களில்  ஒரு  சாரார் மௌட்டீகத்திற்கும்,  பிற்போக்கு  சிந்தனைகளுக்கும் கூஜா  தூக்குகின்ற  அவல  நிலையை  இன்று கண்கூடாகக்  கான்கிறோம். கற்காலத்திலிருந்து  பொற்காலத்திற்குத்  தாவிய  மனிதன்  மீண்டும் கற்காலத்திற்கே  செல்கிறானோ  என  அவதானிகள்  சிந்திக்குமளவிற்கு  மனித குலம் இன்று [...]

தவ்ஹீத் போர்வையில் இணை வைப்பு

தவ்ஹீத் போர்வையில் இணை வைப்பு
March 24, 2012
கட்டுரைகள்

எஸ். அப்பாஸ் அலீ MISc

நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் பலரிடம் இஸ்லாம் குறித்து தவறான நம்பிக்கைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக இஸ்லாத்தின் அடிப்படை விஷயத்திலும் இவர்கள் தவறான நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.

இலங்கை மற்றும் தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் வருவதற்கு முன் குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற சரியான நிலைபாட்டை மக்கள் அறியாது இருந்தனர். இன்றைக்கும் பலருடைய நிலை அவ்வாறே உள்ளது.

முன்னோர்கள், பெரியார்கள், இமாம்கள் எதைக் கூறினாலும் அக்கூற்றுக்கு ஆதாரம் இருக்கின்றதா? இல்லையா? என்று சிந்திக்கும் மனநிலை அன்றைக்கு மக்களிடம் இல்லை.

இமாம்கள் கூறுவதையே ஆதாரமாக எடுத்துக் கொண்டு அவர்களைக் கண்மூடி பின்பற்றி வந்தனர். மத்ஹபு மாயவலையில் சிக்கி இருந்தனர்.

குர்ஆன், ஹதீஸ் [...]

சிக்கனமான திருமணம்

சிக்கனமான திருமணம்
February 19, 2012
ஆய்வுகள்

விமர்சிக்கப்படும் ஹதீஸ்கள்

பி. ஜைனுல் ஆபிதீன்

திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டுமே முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம்.

இதில் ஒரு சந்தர்ப்பத்திலும் நாம் வளைந்து கொடுத்ததில்லை. இந்த அடிப்படைக் கொள்கையில் நம்மிடம் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை. ஆயினும் ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் நம்மிடம் தவறுகள் ஏற்பட்டு அதை அவ்வப்போது பகிரங்கமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

நம்மை விடப் பல மடங்கு அறிவும், ஆற்றலும் மிக்க எத்தனையோ அறிஞர்கள், ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் தவறாக முடிவு செய்து பின்னர் [...]

சந்திர, சூரிய கிரகணங்களும், கியாமத்து நாளும். – கிரகணத் தொழுகையின் சட்டங்கள்.

சந்திர, சூரிய கிரகணங்களும், கியாமத்து நாளும். – கிரகணத் தொழுகையின் சட்டங்கள்.
December 11, 2011
கட்டுரைகள்

கிரகணம் தொடர்பாக இஸ்லாம் சொல்வதென்ன?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம்ஏற்பட்டது. அன்றைய தினத்தில் (நபியவர்களின் புதல்வர்) இப்ராஹீம்(ரலி) இறந்தார். இதையொட்டி மக்கள் இப்ராஹீமின் இறப்புக்காகத் தான்கிரகணம் ஏற்பட்டது” என்று பேசிக் கொண்டனர். அப்போதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சூரியனும் சந்திரனும்அல்லாஹ்வின் சான்றுகல் இரு சான்றுகளாகும். எவரதுஇறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை.எனவே, அவற்றை நீங்கள் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்;தொழுங்கள்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி), நூல்: புகாரி 1043

நபியவர்களின் மகன் மரணித்த நேரமும், கிரகணம் தோன்றிய நேரமும் ஒன்றாக இருந்ததினால் மக்கள் நபியின் மகனின் மரணத்திற்குத் தான் கிரகணம் தோன்றியது என கூறிக்கொண்டிருந்த வேலை மக்களின் மூட நம்பிக்கையை நபியவர்கள் துடைந்தெரிந்தார்கள்.

இஸ்லாம் ஒரு பகுத்தறிவு மார்க்கம் என்பதற்கு நபி (ஸல்) அவர்களின்இந்த விளக்கம் சான்றாக அமைந்துள்ளது. கிரகணம் பற்றி மக்கள் தங்கள்அறியாமையை வெளிப்படுத்தும் போது, நபி (ஸல்) அவர்கள் அந்தஅறியாமை இருளை நீக்கி, கிரகணம் என்பது யாருடைய மரணத்துக்காகவும்நிகழ்வதில்லை, அது இறைவனின் ஏற்பாடு என்பதை உணர்த்துகின்றார்கள்.
முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்பதற்கும் இந்தச்சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஒருசாதாரண மனிதராக இருந்து, மக்கள் இவ்வாறு பேசியிருந்தால் அதைத்தமது தூதுத்துவத்திற்கு ஆதாரமாக ஆக்கியிருப்பார்கள். நபியின் மகன்இறந்து விட்டான்; அதனால் கிரகணம் பிடித்து விட்டது என்று மக்களேபேசிக் கொள்ளும் போது அதைத் தடுக்க வேண்டிய அவசியம் இல்லை.இன்று கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள் பலர், இயற்கைநிகழ்வுகளைக் கூடத் தங்கள் அற்புதம் என்று வாதிப்பதைப் பார்க்கிறோம்.
ஆனால் நபி (ஸல்) அவர்கள், இதை அற்புதம் என்று வாதிடுவதற்கு எல்லாவாய்ப்புகளும் இருந்தும், மக்களே இதை அற்புதம் என்று சொன்ன போதும்நபியவர்கள் உண்மையான இறைத் தூதர் என்பதால் அவ்வாறு போலியானதகுதியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
கிரகணம் ஏற்படுவதற்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, அதுஇறைவனின் மாபெரும் அத்தாட்சிகளான சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வு என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார்கள். அவர்கள்இறைத் தூதர் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது.
ஏகனின் எச்சரிக்கை.
சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் உலக முடிவு நாள்வந்து விட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்றவர்களாக எழுந்து பள்ளிக்குச்சென்றார்கள்.
நிலை, ருகூஉ, சஜ்தா ஆகியவற்றை நீண்ட நெடிய நேரம் செய்துதொழுதார்கள். நான் ஒருபோதும் அவர்கள் அவ்வாறு செய்யக்கண்டதில்லை. (தொழுகை முடிந்ததும்), அல்லாஹ் அனுப்பிவைக்கும்இந்த அடையாளங்கள் எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும்ஏற்படுபவை அல்ல. எனினும் அல்லாஹ் தன் அடியார்களை இவற்றின்மூலம் எச்சரிக்கவே செய்கிறான். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள்கண்டால் அவனை நினைவு கூர்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும்அவனிடம் பாவமன்னிப்புக் கோருவதிலும் நீங்கள் கவனம்செலுத்துங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி),  நூல்: புகாரி 1059

உண்மையில் நபி (ஸல்) அவர்கள் அஞ்சியது போல் கிரகணம் என்பது ஒருகுட்டி கியாமத் நாளாகத் தான் அமைகின்றது. கொம்புள்ள இரண்டு ஆடுகள்கால் முட்டிகளைத் தூக்கிக் கொண்டு முட்டுவதற்கு ஆயத்தமாகி நிற்பதுபோல் மூன்று கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் நிற்கின்றன.
வானம் பிளக்கும் போது எண்ணையைப் போல் சிவந்ததாக ஆகும்.(அல்குர்ஆன் 55:37)

சந்திர கிரகணத்தின் போது வெண்ணிலவு சிவந்து எரிவது போன்று வானம்எங்கும் சிவப்பு வண்ணம் தெளிக்கப்பட்டது போல் காட்சியளிக்கின்றது. இதுகியாமத் நாளை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துவதுபோன்றுள்ளது.
கங்கண சூரிய கிரகணத்தின் போது, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில்நெருப்பு பற்றி எரிவது போல் தோன்றுகின்றது. ஏதோ மறு நொடியில்மறுமை துவக்கம் அமைந்து விடுமோ என்பது போன்ற ஒரு கோர பயம்நம்மை ஆட்கொள்கின்றது.
கியாமத் நாள் வரை இரவை உங்களுக்கு அல்லாஹ் நிரந்தரமாக்கிவிட்டால் அல்லாஹ்வையன்றி உங்களுக்கு ஒளியைக் கொண்டு வரும்இறைவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! செவியுறமாட்டீர்களா?” என்று கேட்பீராக! (அல்குர்ஆன் 28:71)

இந்த வசனத்தில் அல்லாஹ் நம்மை அச்சுறுத்துவது போன்று, பூமியில்விழும் நிழலைத் தொடரச் செய்து விட்டால் அவனைத் தவிர வேறு யார்வெளிச்சத்தைத் தர முடியும்?
நபியவர்கள் கண்ட நரகக் காட்சி.
அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (தொழுது கொண்டிருக்கையில்) இதோஇந்த இடத்தில் எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்தமுயற்சியிலிருந்து) பின்வாங்கியதையும் கண்டோமே! (அது ஏன்?)” என்றுகேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் சொர்க்கத்தைக்கண்டேன்’ அல்லது சொர்க்கம் எனக்குக் காட்டப்பட்டது’. அதிலிருந்து(பழக்) குலையொன்றை எடுக்க முயன்றேன். அதை நான் எடுத்திருந்தால்இந்த உலகம் உள்ளவரை நீங்கள் அதிலிருந்து புசித்திருப்பீர்கள்.
மேலும் நான் நரகத்தையும் கண்டேன். இன்றைய தினத்தைப் போல(ஒரு பயங்கரமான) காட்சி எதையும் ஒருபோதும் நான்கண்டதேயில்லை. மேலும், நரகவாசிகல் அதிகமாகப் பெண்களையேகண்டேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 5197

நபி (ஸல்) அவர்கள் இந்தக் கிரகண நாளில் சுவனம் மற்றும் நரகத்தின்காட்சிகளை நேரடியாகவே கண்ட காட்சி, உண்மையில் கிரகணம் கியாமத்மற்றும் மறுமை உலகை அடியார்கள் ஒரு கணம் தங்கள் கண் முன்னால்கொண்டு வந்து நிறுத்துவதற்காகத் தான் என்று தெளிவாக விளங்குகின்றது.
அனைத்தையும் கண்ட அல்லாஹ்வின் தூதர்.
நீங்கள் நுழையவிருக்கின்ற (மறுமை வெளி, சொர்க்கம் மற்றும் நரகம்உட்பட) அனைத்தும் எனக்குக் காட்டப்பட்டன. எனக்குச் சொர்க்கம்காட்டப்பட்ட போது அதிலிருந்த பழக் குலையொன்றை நான் எட்டிப்பிடிக்கப் போனேன். ஆனால், எனது கைக்கு எட்டவில்லை. எனக்கு(இத்தொழுகையின்போது) நரகமும் காட்டப்பட்டது. அதில் பனூஇஸ்ராயீல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு பூனையின்காரணத்தால் வேதனை செய்யப்படுவதை நான் பார்த்தேன். அவள் தனதுபூனைக்குத் தீனி போடாமல் கட்டிப் போட்டு வைத்திருந்தாள். அவள்அதை பூமியிலுள்ள புழுப்பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை. (இதன் காரணமாகவே அவள் நரகம் சென்றாள்.) மேலும், நரகத்தில் நான்அபூஸுமாமா அம்ர் பின் மாலிக் என்பவரையும் பார்த்தேன். அவர்நரகத்தில் தனது குடலை இழுத்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்.மக்கள் ஒரு மாமனிதர் (அல்லது தலைவரின்) மரணத்திற்காகவேசூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுகிறது’ என்றுகூறுகின்றனர். (ஆனால்) அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில்இரு சான்றுகளாகும். அவற்றை உங்களுக்கு இறைவன் காண்பிக்கிறான்.அவற்றுக்குக் கிரகணம் ஏற்பட்டால் வெளிச்சம் வரும்வரை நீங்கள்(இறைவனைத்) தொழுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 1508

கிரகணத்தின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆற்றியஉரையில், பூனைக்கு இழைக்கப்பட்ட அநீதி, ஹாஜிகளிடம் செய்த திருட்டுஉட்பட சமுதாயத்திற்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து, அனைத்துப்பாவங்களுக்கும், தீமைகளுக்கும் உரிய தண்டனையும் அத்தொழுகையில்கண்டதாகக் குறிப்பிடுவது நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றது.
திடுக்கிட்ட திருத்தூதர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆற்றிய கிரகண அதிர்ச்சி உரையில்தொடர்ந்து கூறியது:
முஹம்மதின் சமுதாயத்தாரே! தன் அடியார்களில் ஆணோ பெண்ணோயார் விபசாரத்தில் ஈடுபட்டாலும் (அதைக் கண்டு)  கடுமையாக ரோஷம்கொள்பவர் அல்லாஹ்வைவிட வேறொருவருமிலர். முஹம்மதின்சமுதாயத்தாரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான்அறிவதையெல்லாம் நீங்களும் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்;அதிகமாக அழுவீர்கள். நான் (சொல்ல வேண்டியதைச்)சொல்லிவிட்டேன் அல்லவா?
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1499

கிரகணத்தைக் கண்டு பயந்த நபி (ஸல்) அவர்கள் பயணமே சொல்லிவிட்டார்கள் என்றால் கிரகணம் என்பது ஒரு குட்டி கியாமத் என்று தான்நாம் விளங்க முடிகின்றது.
கப்ர் வேதனையைப் பற்றிய எச்சரிக்கை.
எனக்கு இதுவரை காட்டப்பட்டிராத அனைத்தையும் (இந்த) இடத்தில்(தொழுகையில் இருந்தபோது) கண்டேன். சொர்க்கம், நரகம் உட்பட(அனைத்தையும் கண்டேன்). மேலும் எனக்கு இறைவனின் தரப்பிலிருந்து(வஹீ) அறிவிக்கப்பட்டது:
நீங்கள் உங்கள் மண்ணறைகளுக்குள் (பெருங்குழப்பவாதியான)மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனைக்கு நிகரான’ அல்லது நெருக்கமான’அளவிற்கு சோதிக்கப்படுவீர்கள். அப்போது (கப்ரில் அடக்கம்செய்யப்பட்டவரிடம்) இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?”என்று (நபியாகிய என்னைப் பற்றிக்) கேட்கப்படும். அப்போது இறைநம்பிக்கையாளர்’ அல்லது உறுதிகொண்டவர்’ இவர் அல்லாஹ்வின்தூதர் முஹம்மத் (ஸல்) ஆவார்கள்; அன்னார் எங்களிடம் தெளிவானசான்றுகளையும் நேர்வழியையும் கொண்டு வந்தார்கள்; நாங்கள்(அவரது அழைப்பை) ஏற்றோம்; அவர்களைப் பின்பற்றினோம்; இவர்முஹம்மத் (ஸல்) அவர்கள் தாம்’ என்று மும்முறை கூறுவார். அப்போது(கேள்வி கேட்ட வானவர்களின் தரப்பிலிருந்து) தகுதி பெற்றவராக நீர்(நிம்மதியாக) உறங்குவீராக!’ என்றும் நிச்சயமாகவே நீர் (இறைத்தூதரான) இவரைப் பற்றி இத்தகைய உறுதியானநம்பிக்கையுடையவராகவே (உலகில்) இருந்தீர் என்று நாமறிவோம்’என்றும் கூறப்படும். நயவஞ்சகனோ’ அல்லது சந்தேகப் பேர்வழியோ’,எனக்கு எதுவும் தெரியாது; மக்கள் அவரைப் பற்றி ஏதோ சொல்லிக்கொண்டிருக்கக் கேட்டிருக்கிறேன். எனவே நானும் அது போன்றுகூறினேன்” என்பான்.
அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி), நூல்: புகாரி 86, 184
கிரகணமும், வணக்கமும்.
அறிவியலாளர்கள் கண் கொள்ளாக் காட்சி என்று கேமராக்களையும்வீடியோக்களையும் தூக்கிக் கொண்டு சூரிய, சந்திர கிரகணங்களைப் படம்பிடிக்க பேயாய் அலைகின்றனர். சிலர் விமானத்தில் பயணம் செய்துவிமானத்தில் இருந்தவாறே கிரகணத்தை கேமராக்களுக்குள்விழுங்குகின்றனர்.
இப்படி ஒரு சாரார் ஆய்வில் இறங்கியிருக்கும் போது மற்றொரு சாரார்சூரிய, சந்திர கிரகணங்களை ஏதோ ஒரு வான வேடிக்கை போல் உல்லாசப்பார்வையில் இறங்கி விடுகின்றனர். மூன்றாவது சாரார் ஒரு விதமானபயத்திலும் மூட நம்பிக்கையிலும் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.
ஆனால் இஸ்லாம் மறுமையை நினைவுபடுத்துகின்ற மாபெரும் நிகழ்வுகள்என்பதை மனித குலத்தின் மனதில் பதிய வைத்து அந்நாளில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடச் சொல்கின்றது.
அப்போது செய்ய வேண்டிய வணக்கங்கள் என்னென்ன என்றபட்டியலையும் விரிவாகத் தருகின்றது.

விரைந்து பள்ளிக்கு வருதல்.

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம் இருந்துகொண்டிருந்தோம். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்து தமது மேலாடையை இழுத்துக் கொண்டேபள்வாசலுக்குள் சென்றார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி),  நூல்: புகாரி 1040
தொழுகை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சூரியனும் சந்திரனும்அல்லாஹ்வின் சான்றுகல் இரு சான்றுகளாகும். எவரதுஇறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை.எனவே, அவற்றை நீங்கள் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்;தொழுங்கள்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி), நூல்: புகாரி 1043

நபி (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனேஅவர்கள் பள்வாசலுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப்பின்னால் மக்கள் அணிவகுத்து நின்றனர். நபி (ஸல்) அவர்கள் தக்பீர்(தஹ்ரீமா)’ கூறி, நீண்ட நேரம் ஓதினார்கள். பிறகு தக்பீர் கூறி நீண்டநேரம் ருகூஉச் செய்தார்கள். பின்னர் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்ந்தோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்)என்று கூறி நிலையில் நின்றார்கள். சஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்டநேரம் ஓதினார்கள். ஆனால் இது முதலில் ஓதியதை விடக் குறைந்தநேரமே அமைந்திருந்தது. பிறகு தக்பீர் கூறி ருகூஉச் செய்தார்கள். இந்தருகூஉ முதல் ருகூஉவை விடக் குறைந்த நேரமே அமைந்திருந்தது.பின்னர் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹம்து’என்று கூறி (நிமிர்ந்து) விட்டு, சஜ்தாச் செய்தார்கள்.

பிறகு இதுபோன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள்.- அப்போதுநான்கு சஜ்தாக்(கள் கொண்ட இரண்டு ரக்அத்)கல் நான்கு ருகூஉகள்செய்து முடித்தார்கள். அவர்கள் தொழுகையை முடிப்பதற்கு முன்(கிரகணம் விலகி) வெச்சம் வந்து விட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள்எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான குணங்களைக் கூறிப்போற்றி(ய பின் உரை நிகழ்த்தி)னார்கள். அவர்கள், (சூரியன், சந்திரன்)இவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகல் இரு சான்றுகளாகும். எவரதுஇறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணங்கள்ஏற்படுவதில்லை. அவற்றை நீங்கள் கண்டால் தொழுகையில் கவனம்செலுத்துங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1046
இறைவனை நினைவு கூர்தல், பிரார்த்தனை, பாவமன்னிப்பு.
அல்லாஹ் அனுப்பி வைக்கும் இந்த அடையாளங்கள் எவரதுஇறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் ஏற்படுபவை அல்ல. எனினும்அல்லாஹ் தன் அடியார்களை இவற்றின் மூலம் எச்சரிக்கவேசெய்கிறான். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் அவனைநினைவு கூர்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும் அவனிடம்பாவமன்னிப்புக் கோருவதிலும் நீங்கள் கவனம் செலுத்துங்கள்” என்றுகூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி), நூல்: புகாரி 1059

கிரகணமும், தர்மமும்.
நபி (ஸல்) அவர்கள் (தமது உரையில்), சூரியனும் சந்திரனும்அல்லாஹ்வின் சான்றுகல் இரு சான்றுகளாகும். எவரதுஇறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை.அதை நீங்கள் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுங்கள்;தக்பீர் சொல்லுங்கள்; தொழுங்கள்; தான தர்மம் செய்யுங்கள்” என்றுகூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1044
கிரகணத்தின் போது நபி (ஸல்) அவர்கள் தர்மத்தை வலியுறுத்துவதால்அந்நாளில் நாம் தர்மம் செய்து நபிவழியை செயல்படுத்துவோமாக!மறுமையில் நன்மையைப் பெறுவோமாக!

பெண்களும், கிரகணமும்.

நான் (தொழுதுகொண்டிருக்கையில்) நரகத்தையும் கண்டேன். இன்றையதினத்தைப் போல (ஒரு பயங்கரமான) காட்சி எதையும் ஒருபோதும்நான் கண்டதேயில்லை. மேலும், நரகவாசிகல் அதிகமாகப்பெண்களையே கண்டேன்” என்று கூறினார்கள். மக்கள், ஏன்?அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்)அவர்கள், பெண்கன் நிராகரிப்பே காரணம்” என்றார்கள். அப்போதுபெண்கள் அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்?” என வினவப்பட்டது.அதற்கு கணவன்மார்களை நிராகரிக்கிறார்கள். (கணவன் செய்த)உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் ஒருத்திக்குநீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள்கண்டால் உன்னிடமிருந்து எந்த நலனையும் நான் கண்டதேயில்லை’என்று சொல்லிவிடுவாள்” என்று பதிலத்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 5197

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தின் போதும், கிரகண தினத்தின்போதும், பெண்களை நரகத்தில் அதிகமதிகம் பார்த்ததாகவும் அதற்குரியகாரணத்தையும் சொல்கிறார்கள். பெண்கள் இந்தக் காரணத்தைக் களைந்துதங்களை நரகத்திலிருந்து காத்துக் கொள்ள முன்வர வேண்டும்.
இவ்வாறாக, கிரகணம் ஏற்படும் போது மூட நம்பிக்கைகளைத் தவிர்ந்து,மறுமை நம்பிக்கையைப் பலப்படுத்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் நமது வணக்க வழிபாடுகளைஅமைத்துக் கொள்வோமாக!

குறிப்பு

மவ்லவி ஷம்சுல்லுஹா அவர்கள் கிரகணம் தொடர்பாக எழுதிய ஆக்கத்தையே காலத்திற்குத் தேவையான சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

 

முஹர்ரம் பத்தும், முஸ்லிம்களின் மூடப் பழக்கங்களும்.

முஹர்ரம் பத்தும், முஸ்லிம்களின் மூடப் பழக்கங்களும்.
November 26, 2011
கட்டுரைகள்

இஸ்லாத்தில் போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட நான்கு புனித மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்று. ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான முஹர்ரம் மாதத்திற்கு மெருகூட்டும் விதமாக அதன் பத்தாம் நாள் அமைந்திருக்கின்றது.

கதிரவனை மறைக்கும் கர்பலா காரிருள்

ஃபிர்அவ்னைக் கடலில் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றி, அவர்களுக்கு எகிப்தின் ஆட்சிப் பொறுப்பையும் வழங்கிய நாள் தான் ஆஷூரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாள். (ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட வரலாறு தனிக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது)

மூஸா நபியை நம்பிய முஸ்லிம்களுக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்குவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிறைவேறிய அந்த நாள் கர்பலாவால் மறைக்கப்பட்டு விட்டது.

கதிரவனை மறைக்கும் [...]

இலங்கை தஃவா களம் குறித்து சகோதரர் பி.ஜெ என்ன சொல்லுகிறார்?

இலங்கை தஃவா களம் குறித்து சகோதரர் பி.ஜெ என்ன சொல்லுகிறார்?
October 22, 2011
அழைப்பு

இலங்கை தஃவா களம் குறித்து சகோதரர் பி.ஜெ என்ன சொல்லுகிறார்? (பேட்டி பகுதி – 01)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கவிதை எழுதுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

கவிதை எழுதுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?
August 6, 2011
ஆய்வுகள்

கட்டுரை ஆசிரியர் : Rasmin M.I.Sc

ஒரு செய்தியைச் சொல்வதற்கு பலவிதமான முறைகளை ஒவ்வொருவரும் பின்பற்றுவார்கள்.பேச்சின் மூலம், செய்கையின் மூலம், எழுத்தின் மூலம் என்று பலவிதங்களிலும் நம் மனதில் தோன்றும் செய்திகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்கிறோம்.

சிலர் சில செய்திகளை கவிதை மூலம் சொல்வார்கள். இந்தக் கவிதை முறை தகவல் எத்திவைப்பைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

கவிதை எழுதுவதையோ அல்லது பாடுவதையோ இஸ்லாம் தடுக்கவில்லை. ஆனால் அவைகள் இஸ்லாத்திற்கு மாற்றமில்லாத கருத்துக்களை கொண்டிருக்க வேண்டும்.

இஸ்லாத்திற்கு மாற்றமான இணை வைக்கும் கருத்துக்களை கொண்ட கவிதைகளை எடுதுவதற்கோ பாடுவதற்கோ இஸ்லாத்தில் அனுமதியில்லை.

கவிஞர்கள் நிறைந்த, எடுத்ததற்கெல்லாம் கவிதையினாலேயே சண்டையிட்ட காலத்தில் தான் திருமறைக் குர்ஆனை அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கினான்.

மக்கத்து [...]

கையேந்திகளின் மாதமா ரமழான்?

கையேந்திகளின் மாதமா ரமழான்?
August 4, 2011
கட்டுரைகள்

கட்டுரை ஆசிரியர் : Rasmin M.I.Sc

அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்கி உணவு உண்டு சுபஹ் காலையில் இருந்து மாலை வரை இறைவனுக்காக உண்ணாமலும் பருகாமலும் இருந்து இறையச்சத்தை அதிகப் படுத்த வேண்டிய மாதம் இந்த ரமழான் மாதம்.

முஸ்லீம்கள் என்று சொல்லக் கூடிய சிலர் இந்த மாதத்தை கையேந்திகளின் மாதமாக மாற்றியிருப்பதுதான் மிகவும் கவலைக்குறிய விஷயமாகும்.

மகளுக்கு திருமணம் வரதற்சனை (சீதனம்)கொடுக்க வேண்டும்

மகனுக்கு நோய்

தந்தைக்கு முடியவில்லை

தாய் படுத்த படுக்கையில் உள்ளார்

சகோதரனுக்கு பேச முடியாது

சகோதரிக்கு நடக்க முடியாது

இப்படி பல வாக்கியங்களை சொல்லிக் கொண்டு பிச்சைக்காரர்கள் வீடுகள் கடைகள் பள்ளிகள் மத்ரஸாக்கள் பாதையோரங்கள் சந்தைகள் என்று மக்கள் கூடுமிடங்களிலெல்லாம் இவர்கள் கையேந்துகிறார்கள்.

பிச்சையே தொழிலாக…….

சிலர் கஷ்டத்தினால் மேற்சொன்ன சில காரணங்களின் மூலம் தங்கள் கவுரவத்தைக் கூட இழந்து மக்களிடம் கையேந்தி [...]

வேதனை தீர்க்கும் விஷேச துஆக்கள்.

வேதனை தீர்க்கும் விஷேச துஆக்கள்.
August 3, 2011
கட்டுரைகள்

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.  (அல்குர்ஆன் 2:153)

ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள் உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 2:155-156)

பல்வேறு சோதனைகளைக் கொண்டு இறை நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்படுவார்கள் என்று இவ்வசனங்கள் கூறுவதுடன் அந்தச் சோதனையின் போது கடைப்பிடிக்க வேண்டிய பண்புகளையும் சொல்ல வேண்டிய வார்த்தைகளையும் சொல்லித் தருகின்றன.

இப்ராஹீம் நபி அவர்களுக்கும் அவர்களது துணைவியார் சாரா அவர்களுக்கும் மிகக் கடுமையான சோதனை ஏற்படுகின்றது. அந்நேரத்தில் அவர்கள் தொழுது இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் [...]

ஷஃபான் 15ம் நாள் நோன்புக்கு ஆதாரம் உண்டா? வழிகெட்டவர்களின் தவறான மொழியாக்கமும், தரங்கெட்ட பத்வாவும்(?).

ஷஃபான் 15ம் நாள் நோன்புக்கு ஆதாரம் உண்டா? வழிகெட்டவர்களின் தவறான மொழியாக்கமும், தரங்கெட்ட பத்வாவும்(?).
July 20, 2011
கட்டுரைகள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜமாத்துல் முஸ்லிமீன் என்ற பெயரில் இலங்கையில் இருக்கும் வழி கெட்ட அமைப்பொன்று ஷஃபான் மாதம் 15ம் நாள் நோன்பு பிடிக்க வேண்டும் என்றும் அதுதான் பராஅத் இரவு என்றும் குறிப்பிட்டு ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டிருந்தார்கள் அந்தத் துண்டுப் பிரசுரத்திற்குறிய பதிலை இங்கு தருகிறோம்.

இதுதான் வழிகெட்ட அமைப்பினர் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தை பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.

ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்கச் சொல்லும் ஒரு ஹதீஸும் முஸ்லிம் நூலில் இல்லை. வித்தியாசமாக எதையாவது சொல்ல வேண்டும் நோய் காரணமாக இவ்வாறு வாதிடுகின்றனர்.

அவர்கள் குறிப்பிடும் மூன்று ஹதீஸ்களிலும் மாதத்தின் இறுதியில் என்று மொழி பெயர்ப்பதற்குப் பதிலாக [...]

வட்டி என்ற சமுதாயக் கொடுமை. (தொடர் – 02)

வட்டி என்ற சமுதாயக் கொடுமை. (தொடர் – 02)
July 16, 2011
கட்டுரைகள்

வட்டியைப் பற்றி சரியாக தெளிவு படுத்தாமல் நபியவர்கள் மரணித்தார்களா?

கட்டுரை ஆசிரியர் : Rasmin  M.I.Sc

வட்டியைப் பற்றி திருக்குர்ஆன் சொல்லும் செய்திகளை சென்ற தொடரில் பார்த்தோம். வட்டியைப் பற்றி நபி(ஸல்)அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்போது நோக்குவோம்.

அவ்ன் பின் அபீ ஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:    குருதி உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை என் தந்தை (அபூஜுஹைஃபா அவர்கள்) விலைக்கு வாங்கினார்கள். (பிறகு, அவருடைய தொழிற் கருவிகளை உடைத்துவிட்டார்கள்).  (இது தொடர்பாக) அவர்களிடம் நான் (விளக்கம்) கேட்க, அவர்கள் “நபி (ஸல்) அவர்கள், நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (குருதிஉறிஞ்சி எடுப்பதற்கு பெறுகின்ற கூலியை)யும் தடைசெய்தார்கள். வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!” என்று பதிலளித்தார்கள். (புகாரி [...]