சமூக சேவை

சிறப்பாக நடைபெற்ற SLTJசிலாபம் கிளையின் முதலாவது இரத்த தான முகாம்

April 18, 2012
இரத்த தானங்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் கிளை முதல் முறையாக ஏற்பாடு செய்த மாபெரும் இரத்த தான முகாம் SLTJ சிலாபம் கிளை காரியாலயத்தில் 15.04.2012ம் திகதி அல்லாஹ்வின் உதவியுடன் மிக வெற்றிகரமாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்! இந்த இரத்த தான முகாமில் பெண்கள் உட்பட 48 நபர்கள் இரத்தம் தானம் செய்தனர். இந்த வருடத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற மூன்றாவது இரத்ததான முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கேகல்லை மாவட்டம் கெடபேரியவில் SLTJ யின் இலவச குடிநீர்த் திட்டம்

கேகல்லை மாவட்டம் கெடபேரியவில் SLTJ யின் இலவச குடிநீர்த் திட்டம்
April 17, 2012
உதவிகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக  கேகல்லை மாவட்டம், அரணாயக தேர்தல் தொகுதி, கெடபேரிய எனும் ஊரில் வாழும் மக்களுக்காக ரூபா 125000  செலவில்  2012.04.07ம் திகதி ஒரு பொதுக் கிணறு கட்டிக் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! மக்களின் நலன் கருதி மிகவும் அவசியமான ஒரு இடத்தில் அனைவரும் பயன்படுத்தும் விதம் இந்தக் கிணறு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இடம்பிடித்த ஹோராப்பொலை ஆயுர்வேத மருத்துவ முகாம்

வரலாற்றில் இடம்பிடித்த ஹோராப்பொலை ஆயுர்வேத மருத்துவ முகாம்
April 11, 2012
மருத்துவ முகாம்கள்

கெகிராவ வரலாற்றில் முதல் முறையாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஹோராப்பொலை கிளை ஏற்பாடு செய்திருந்த ஆயுர்வேத மருத்துவ முகாம். 2012.04.09 ம் திகதி அனுராதபுர மாவட்டத்தின் ஹோராப்பொல முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் சக்கரை நோய் மற்றும் கிட்னி சம்பந்தப்பட்ட ப்ரோடீன் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது. இதில் 87 நபர்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர்.முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகளும் இதில் கனிசமான அளவு கலந்துக் கொண்டனர். அல்ஹமதுலில்லாஹ்!

வட மத்திய மாகானத்தில் வசிக்கும் மக்கள் தான் அதிகமான அளவில் சிறுநீரக நோயினால் பாதிக்கபட்டிருப்பதாகவும் இந் நோயிலிருந்து தவிர்பதற்கு கொதித்தாரிய நீரை பருகுமாறு கெகிராவ ஆயுர்வேத மருத்துவர் கே.பீ.பீ.சீ. பெரேரா அவர்கள் இம் மருத்துவ முகாமில் ஆலோசனை வழங்கினார்கள். மேலும் சிறு நீரகம் [...]

இஸ்லாத்தை ஏற்ற சகோதரிளுக்கு SLTJயின் வாழ்வாதார உதவி

இஸ்லாத்தை ஏற்ற சகோதரிளுக்கு SLTJயின் வாழ்வாதார உதவி
April 9, 2012
இஸ்லாத்தில் இணைந்தோருக்கு உதவிகள்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் 2012.03.08ம் திகதி கொழும்பில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரி ஷர்மிலா அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூபா 15000மும் சகோதரி மும்தாஸ் யாஸ்மின் அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூபா 10000 மும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

மாடியிலிருந்து விழுந்து மரணித்தவரின் குடும்பத்துக்கு SLTJ யின் நிதியுதவி

மாடியிலிருந்து விழுந்து மரணித்தவரின் குடும்பத்துக்கு SLTJ யின் நிதியுதவி
March 21, 2012
நிதி உதவிகள்

கட்டுமானப் பணியில் வேலை செய்து கொண்டிருந்த சகோதரர் எம்.எம்.ஏ.பிரசன்ன என்பவர் எதிர்பாராத விதத்தில் கீழே விழிந்து உயிரிலந்த காரணத்தினால் அவரது குடும்பத்தாருக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தால் நிதி வசூலிக்கப்பட்டு ஜமாஅத் தலைமையகத்தில் வைத்து ரூபா 50500  நன்கொடையாக வழங்கப்பட்டது. இதை அவரது மகளாகிய எம்.எம்.ஏ.ஹர்ஷனீ ஜமாஅத்தின் அழைப்பாளரான சகோதரர் ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸீ. அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் காட்சி இதோ.

SLTJ சிலாபம் கிளை சார்பாக புதிதாக வாங்கிய இடத்தில் நடைபெற்ற சிரமதானம்

SLTJ சிலாபம் கிளை சார்பாக புதிதாக வாங்கிய இடத்தில் நடைபெற்ற சிரமதானம்
March 14, 2012
சமூக சேவை

கடந்த 07.03.2012 அன்று SLTJ சிலாபம் கிளை சார்பாக புதிதாக வாங்கிய இடத்தை சுத்தம் செய்வதற்காக ஊர் கொள்கைவாதிகள் ஒன்று கூடி அப்பணியை சிறப்பாக செய்து முடித்தனர்.

சிலாபம் கிளையினால் நடத்தப்பட்டு வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் வெகு விரைவில் புதிய இடத்திற்கு மாற்றப்படவுள்ளது. (இன்ஷா அல்லாஹ்)

 

 

 

 

 

பெரும் வெற்றியைத் தந்த SLTJ அகுரனை கிளையின் முதலாவது இரத்த தான முகாம்

பெரும் வெற்றியைத் தந்த SLTJ  அகுரனை கிளையின் முதலாவது இரத்த தான முகாம்
March 12, 2012
இரத்த தானங்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கண்டி மாவட்டத்தில் அகுரனை கிளை முதல் முறையாக ஏற்பாடு செய்த மாபெரும் இரத்த தான முகாம் அகுரனை அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் 11.03.2012ம் திகதி அல்லாஹ்வின் உதவியுடன் மிக வெற்றிகரமாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்!. பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த இரத்த தான முகாமில் 21 பெண்கள் உட்பட 122 நபர்கள் இரத்தம் தானம் செய்தனர். இந்த வருடத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற இரண்டாவது இரத்ததான முகாம் என்பதுடன் அதிகமான நபர்கள் இரத்தம் வழங்கி முதலிடத்தை பெற்ற இரத்த தான முகாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்லாத்தை ஏற்ற சகோதர சகோதரிகளுக்கு SLTJயின் நிதி உதவிகள்

இஸ்லாத்தை ஏற்ற சகோதர சகோதரிகளுக்கு SLTJயின் நிதி உதவிகள்
March 10, 2012
இஸ்லாத்தில் இணைந்தோருக்கு உதவிகள்

இஸ்லாத்தை ஏற்ற சகோதர சகோதரிகளுக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிதி உதவிகள் 07.03.2012ம் திகதி ஜமாஅத் தலைமையகத்தில் வழங்கப்பட்டன. மூன்று சகோதரிகளுக்கு வாழ்வாதார உதவியாக தலா 15000 ரூபாய்களும் ஒருவருக்கு தனது இல்லத்தை புணர்நிர்மானம் செய்வதற்காக 60000 ரூபாயும் வழங்கப்பட்டது. பல சிரமங்களுக்கு மத்தியில் வாழக் கூடிய நவ முஸ்லிம்களுக்கு உதவி செயவதற்காகவும் மார்க்க கல்வியை கற்றுக் கொடுப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஜமாஅத்தின் நவ முஸ்லிம்களின் அபிவிருத்திக் குழு இந்த உதவிகளை வழங்க தீர்மானித்தது.

தங்கொடுவயைச் சேர்ந்த சகோதரி தனது இல்லத்தில் வைத்து இஸ்லாத்தில் இணைந்தார்

தங்கொடுவயைச் சேர்ந்த சகோதரி தனது இல்லத்தில் வைத்து இஸ்லாத்தில் இணைந்தார்
March 8, 2012
இஸ்லாத்தில் இணைந்தோருக்கு உதவிகள்

தங்கொடுவ எனும் ஊரில் வசிக்கும் சகோதரி துஷாரி அவர்கள் 07.03.2012ம் திகதி தனது இல்லத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கட்டார் மண்டல செயலாளர் சகோதரர் முஹம்மத் அலி எம்.ஐ.எஸ்.ஸீ.அவர்களின் தகவளின் அடிப்படையில் சகோதரியை தொடர்பு கொண்டு ஜமாஅத்தின் தலைவர் ஆர்.எம்.ரியால் அவர்களும் நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.ஜே.எம். ரிலா அவர்களும் கடந்த பெப்ரவரி மாதம் சகோதரி துஷாரி அவர்களின் இல்லத்திற்கு சென்று இஸ்லாத்தின் கொள்கையை விளக்கி இஸ்லாமீய புத்தகங்கள் வழங்கி விட்டு வந்தனர். பிறகு தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதை சிந்திக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மீண்டும் சகோதரியை தொடர்ப்பு கொண்டு அவரது வீட்டிற்கு சென்ற ஜமாஅத்தின் நிர்வாகிகள் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளையும் கிறிஸ்தவம் [...]

அமெரிக்காவுக்கு எதிராக SLTJ நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவுக்கு எதிராக SLTJ நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
February 28, 2012
சமூக சேவை

“அந்நிய சக்திகள் இலங்கையின் இறைமையை தட்டிப்பறிக்க இடமளியோம்!”
களத்தில் இறங்கியது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணை குழுவின் பரிந்துரையை இலங்கை அரசு நடைமுறைப்பபடுத்தத் தவறிவிட்டது என்றும் கூறி அமெரிக்க தலைமையிலான மேற்குலக ஆதிக்கவாதிகள் நேற்று ஜெனீவாவில் வைத்து இலங்கை அரசுக்கெதிராய் தீர்மானங்கள் நிறைவேற்றக் காத்திருந்தன.
இலங்கை தேசத்து பிரச்சினையை அதன் குடிமக்களாகிய நாங்கள் பேசித்தீர்த்துக் கொள்வோம்! ஆட்டூழியம் புரிந்து பல நாடுகளின் இயற்கை வளங்களை சூரையாடி தனது மத மற்றும் உளுத்துப் போன சீரழிந்த கலாச்சாரத்தை திணித்து பல நாடுகளை சுடுகாடாய் மாற்றிய அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகளுக்கு மனித உரிமை [...]

கலாவெவயில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த இரத்த தான முகாம்

கலாவெவயில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த இரத்த தான முகாம்
February 27, 2012
இரத்த தானங்கள்

அனுராதபுரம் மாவட்டத்தில் தொடரச்சியாக மூன்றாவது முறையும் இரத்த தானம் செய்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் முதல் நிலையில் உள்ளது.
25.02.2012 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கலாவெவ  நேகமை மற்றும் ஹோராப்பொலை கிளைகள் இணைந்து நடத்திய இரத்த தான முகாமில் 111 பேர் இரத்த தானம் செய்து   அம்மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றது.