இரத்த தானங்கள்

சிறப்பாக நடைபெற்ற SLTJசிலாபம் கிளையின் முதலாவது இரத்த தான முகாம்

April 18, 2012
இரத்த தானங்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் கிளை முதல் முறையாக ஏற்பாடு செய்த மாபெரும் இரத்த தான முகாம் SLTJ சிலாபம் கிளை காரியாலயத்தில் 15.04.2012ம் திகதி அல்லாஹ்வின் உதவியுடன் மிக வெற்றிகரமாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்! இந்த இரத்த தான முகாமில் பெண்கள் உட்பட 48 நபர்கள் இரத்தம் தானம் செய்தனர். இந்த வருடத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற மூன்றாவது இரத்ததான முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பெரும் வெற்றியைத் தந்த SLTJ அகுரனை கிளையின் முதலாவது இரத்த தான முகாம்

பெரும் வெற்றியைத் தந்த SLTJ  அகுரனை கிளையின் முதலாவது இரத்த தான முகாம்
March 12, 2012
இரத்த தானங்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கண்டி மாவட்டத்தில் அகுரனை கிளை முதல் முறையாக ஏற்பாடு செய்த மாபெரும் இரத்த தான முகாம் அகுரனை அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் 11.03.2012ம் திகதி அல்லாஹ்வின் உதவியுடன் மிக வெற்றிகரமாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்!. பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த இரத்த தான முகாமில் 21 பெண்கள் உட்பட 122 நபர்கள் இரத்தம் தானம் செய்தனர். இந்த வருடத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற இரண்டாவது இரத்ததான முகாம் என்பதுடன் அதிகமான நபர்கள் இரத்தம் வழங்கி முதலிடத்தை பெற்ற இரத்த தான முகாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கலாவெவயில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த இரத்த தான முகாம்

கலாவெவயில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த இரத்த தான முகாம்
February 27, 2012
இரத்த தானங்கள்

அனுராதபுரம் மாவட்டத்தில் தொடரச்சியாக மூன்றாவது முறையும் இரத்த தானம் செய்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் முதல் நிலையில் உள்ளது.
25.02.2012 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கலாவெவ  நேகமை மற்றும் ஹோராப்பொலை கிளைகள் இணைந்து நடத்திய இரத்த தான முகாமில் 111 பேர் இரத்த தானம் செய்து   அம்மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றது.

கலாவெவயில் மாபெரும் இரத்த தான முகாம்

கலாவெவயில் மாபெரும் இரத்த தான முகாம்
February 13, 2012
அறிவிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கலாவெவ, ஹோராப் பொல மற்றும் நேகமை கிளைகள் இணைந்து நடத்தும் உதிரம் கொடுத்து உயிரைக் காக்கும் இம்மகத்தான பணி சிறப்பாக அமைந்திட உங்கள் பங்களிப்பையும் வழங்கிடுவீர்.

SLTJ சார்பாக கலாவெவயில் நடை பெற்ற மாபெரும் இரத்தான முகாம்.

SLTJ சார்பாக கலாவெவயில் நடை பெற்ற மாபெரும் இரத்தான முகாம்.
October 29, 2011
அறிவிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கலாவெவ, நேகம மற்றும் ஹோராப்பொல ஆகிய மூன்று கிளைகளும் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்ச்சி கடந்த 26-10-2011 அன்று கலாவெவ மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நூறு பேருக்கும் அதிகமானவர்கள் இரத்தானம் செய்தார்கள். அகில இலங்கை மட்டத்தில் ஆன்மீகம் மற்றும் சமுதாயப்பணிகளை மிகவும் வீரியமாக செய்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் இரத்தானம் செய்வதில் முஸ்லீம் அமைப்பு என்ற வகையில் அகில இலங்கை மட்டத்தில் இரண்டாவது இடத்தையும் மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் பெற்றுக் கொண்டது அல்ஹம்துலில்லாஹ்.

(மேலதிக புகைப்படங்களும், வீடியோவும் பின்னர் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

SLTJ சார்பாக கலாவெவயில் மாபெரும் இரத்தான முகாம்.

SLTJ சார்பாக கலாவெவயில் மாபெரும் இரத்தான முகாம்.
October 4, 2011
இரத்த தானங்கள்

அனுராதபுர மாவட்டத்தின் மிகப் பெரிய முஸ்லீம் கிராமமாகிய கலாவெவயில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக வரலாற்றில் முதன் முதலாக எதிர்வரும் 26ம் தேதி மாபெரும் இரத்தான முகாம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கலாவெவ, நேகம, ஹோராப்பொல ஆகிய மூன்று கிளைகள் ஒன்றினைந்து செய்யும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரத்தம் வழங்கி மனித உயிர் காக்கும் உன்னத பணியில் பங்கெடுக்குமாறு அனைவரையும் அன்பாய் அழைக்கிறது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைமையகம்.