இஸ்லாத்தில் இணைந்தோருக்கு உதவிகள்

இஸ்லாத்தை ஏற்ற சகோதரிளுக்கு SLTJயின் வாழ்வாதார உதவி

April 9, 2012
இஸ்லாத்தில் இணைந்தோருக்கு உதவிகள்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் 2012.03.08ம் திகதி கொழும்பில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரி ஷர்மிலா அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூபா 15000மும் சகோதரி மும்தாஸ் யாஸ்மின் அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூபா 10000 மும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

இஸ்லாத்தை ஏற்ற சகோதர சகோதரிகளுக்கு SLTJயின் நிதி உதவிகள்

இஸ்லாத்தை ஏற்ற சகோதர சகோதரிகளுக்கு SLTJயின் நிதி உதவிகள்
March 10, 2012
இஸ்லாத்தில் இணைந்தோருக்கு உதவிகள்

இஸ்லாத்தை ஏற்ற சகோதர சகோதரிகளுக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிதி உதவிகள் 07.03.2012ம் திகதி ஜமாஅத் தலைமையகத்தில் வழங்கப்பட்டன. மூன்று சகோதரிகளுக்கு வாழ்வாதார உதவியாக தலா 15000 ரூபாய்களும் ஒருவருக்கு தனது இல்லத்தை புணர்நிர்மானம் செய்வதற்காக 60000 ரூபாயும் வழங்கப்பட்டது. பல சிரமங்களுக்கு மத்தியில் வாழக் கூடிய நவ முஸ்லிம்களுக்கு உதவி செயவதற்காகவும் மார்க்க கல்வியை கற்றுக் கொடுப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஜமாஅத்தின் நவ முஸ்லிம்களின் அபிவிருத்திக் குழு இந்த உதவிகளை வழங்க தீர்மானித்தது.

தங்கொடுவயைச் சேர்ந்த சகோதரி தனது இல்லத்தில் வைத்து இஸ்லாத்தில் இணைந்தார்

தங்கொடுவயைச் சேர்ந்த சகோதரி தனது இல்லத்தில் வைத்து இஸ்லாத்தில் இணைந்தார்
March 8, 2012
இஸ்லாத்தில் இணைந்தோருக்கு உதவிகள்

தங்கொடுவ எனும் ஊரில் வசிக்கும் சகோதரி துஷாரி அவர்கள் 07.03.2012ம் திகதி தனது இல்லத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கட்டார் மண்டல செயலாளர் சகோதரர் முஹம்மத் அலி எம்.ஐ.எஸ்.ஸீ.அவர்களின் தகவளின் அடிப்படையில் சகோதரியை தொடர்பு கொண்டு ஜமாஅத்தின் தலைவர் ஆர்.எம்.ரியால் அவர்களும் நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.ஜே.எம். ரிலா அவர்களும் கடந்த பெப்ரவரி மாதம் சகோதரி துஷாரி அவர்களின் இல்லத்திற்கு சென்று இஸ்லாத்தின் கொள்கையை விளக்கி இஸ்லாமீய புத்தகங்கள் வழங்கி விட்டு வந்தனர். பிறகு தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதை சிந்திக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மீண்டும் சகோதரியை தொடர்ப்பு கொண்டு அவரது வீட்டிற்கு சென்ற ஜமாஅத்தின் நிர்வாகிகள் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளையும் கிறிஸ்தவம் [...]

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்ணுக்கு வாழ்வாதார உதவி.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்ணுக்கு வாழ்வாதார உதவி.
January 9, 2012
இஸ்லாத்தில் இணைந்தோருக்கு உதவிகள்

தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட சகோதரிக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தின் புதிய முஸ்லீம்களுக்கான பிரிவின் மூலம் 16,500 ரூபா வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாத்தை தழுவியவருக்கு வாழ்வாதார உதவி.

இஸ்லாத்தை தழுவியவருக்கு வாழ்வாதார உதவி.
August 24, 2011
இஸ்லாத்தில் இணைந்தோருக்கு உதவிகள்

இஸ்லாத்தை தழுவியவர்களுக்கான மார்க்க நிகழ்சிகள் மற்றும் வாழ்வாதாரா உதவிகள் வழங்குவதற்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் உருவாக்கப்பட்ட என்ற பிரிவின் மூலமாக கடந்த ஞாயிற்றுக் கிழமை இஸ்லாத்தை தழுவிய சகோதரர் ஒருவரின் குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.

மீரிகமையைச் சேர்ந்த சகோதரர் SLTJ தலைமையகத்தில் வைத்து இஸ்லாத்தில் இணைந்தார்.

மீரிகமையைச் சேர்ந்த சகோதரர் SLTJ தலைமையகத்தில் வைத்து இஸ்லாத்தில் இணைந்தார்.
July 28, 2011
இஸ்லாத்தில் இணைந்தோருக்கு உதவிகள்

இலங்கை மீரிகமை என்ற பகுதியைச் சேர்ந்த அறுபது வயது நிறம்பிய சகோதரர் 28.07.2011 இன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீ்த் ஜமாத் தலைமையகத்தில் வைத்து தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

தனது பெயரை சித்தீன் என்று வைத்துக் கொண்டுள்ளார்.

தூய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எத்தி வைக்கும் பணியில் வீரியமாக செயல்பட்டு வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பணிகள் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!