கல்வி உதவிகள்

200 free text books distributed on behalf of SLTJ in Colombo.

January 31, 2012
ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவிகள்

Sri Lanka Thawheed Jama’ath distributed free text books for the poor and needy students as an educational aid, at Al- Hijra Vidyalaya , Kuppiyawatta, Colombo-09. Alhamdulillah!
About 200 Students received the free text books on this occasion.
The vice president of the Jama’ath bro. Raqeeb, in charge for the social work of Jama’ath, bro. Mueen, the treasurer of the Jama’ath bro. Hassen and the publisher of the Alaippu magazine of the Jama’ath attended graced the occasion.

 

Free text books distributed on behalf of SLTJ in Weligama.

Free text books distributed on behalf of SLTJ in Weligama.
January 31, 2012
ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவிகள்

Free text books were distributed among poor students on behalf of Sri Lanka Thawheed Jama’ath on Sunday 15.01.2012 at Weligama Al- Arafa Central College in the western province. Alhamdulillah!
About 150 poor students received the free text books on this occasion.

 

 

கொழும்பில் SLTJ சார்பாக 200 மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகங்கள் அன்பளிப்பு.

கொழும்பில் SLTJ சார்பாக 200 மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகங்கள் அன்பளிப்பு.
January 26, 2012
ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவிகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் சார்பாக கொழும்பு – 09 குப்பியாவத்தை, அல் ஹிஜ்ரா வித்தியாளயத்தில் வைத்து ஏழை மாணவர்களின் கல்வி உதவியாக இலவச அப்பியாசப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வில் சுமார் 200 மாணவர்கள் இலவச அப்பியாசப் புத்தகப் பொதிகளைப் பெற்றுக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில் ஜமாத்தின் துணைத் தலைவர் சகோதரர் ரகீப், சமூகப் பணிப் பொருப்பாளர் சகோதரர் முயீன், ஜமாத்தின் பொருளாளர் சகோதரர் ஹஸன் நானா மற்றும் அழைப்பு மாத இதழின் வெளியீட்டாளர் சகோதரர் ரிழ்வான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

வெளிகமையில் SLTJ சார்பாக ஏழை மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகம் வழங்கப்பட்டது.

வெளிகமையில் SLTJ சார்பாக ஏழை மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகம் வழங்கப்பட்டது.
January 22, 2012
ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவிகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக கடந்த ஞாயிற்றுக் கிழமை (15.01.2012) அன்று தென் மாகாணம் வெளிகம அல் அரபா மத்திய கல்லூரியில் ஏழை மாணவர்களுக்கான இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதில் சுமார் 150 ஏழை மாணவர்கள் இலவச அப்பியாசப் புத்தகப் பொதியை பெற்றுக் கொண்டார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மாபோலை சகோதரருக்கு 13300 ரூபா கல்வி உதவி.

மாபோலை சகோதரருக்கு 13300 ரூபா கல்வி உதவி.
January 14, 2012
கல்வி உதவிகள்

கடந்த 06.01.2012 (வெள்ளிக்கிழமை) அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக மாபோலையைச் சேர்ந்த புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சகோதரருக்கு அவரின் பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக 13300 ரூபா வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.  ஜமாத்தின் நிர்வாக உறுப்பினர் சகோதரர் ரொஷான் உதவித் தொகையை வழங்குவதையும் அருகில் ஜமாத்தின் நிர்வாக உறுப்பினர் சகோதரர் முஸம்மில் அவர்களையும் காணமுடியும்.

இரண்டு பிரச்சாரகர்களுக்கு மடி கணிணி அன்பளிப்பு.

இரண்டு பிரச்சாரகர்களுக்கு மடி கணிணி அன்பளிப்பு.
January 9, 2012
உதவிகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் மூலமாக ஜமாத்தின் தேசிய பேச்சாளர்களான சகோதரர் பர்சான் மற்றும் சகோதரர் அஜ்மீர் ஆகியோருக்கு மடி கணிணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. பிரச்சாரகர்களின் பிரச்சாரத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வேலைத் திட்டத்தின் முதற் கட்டமாகவே இவ்வன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

பல்கலைக் கழக மாணவர்களுக்கு ரூபா 12,500 கல்வி உதவி.

பல்கலைக் கழக மாணவர்களுக்கு ரூபா 12,500 கல்வி உதவி.
January 9, 2012
கல்வி உதவிகள்

பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் புத்தளத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகளின் கல்விக்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையத்தின் மூலம் 12,500 ரூபா குறிப்பிட்ட மாணவிகளின் தந்தையிடம் வழங்கப்பட்டது. ஜமாத்தின் சமூகப் பணிப் பொருப்பாளர் சகோதரர் முயீன் அவர்கள் இத்தொகையை வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்.

SLTJ தலைமையகம் மூலம் அப்பியாசப் புத்தகங்கள் தொடர் விநியோகம்.

SLTJ தலைமையகம் மூலம் அப்பியாசப் புத்தகங்கள் தொடர் விநியோகம்.
January 7, 2012
ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவிகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் மூலமாக ஏழை மாணவர்களுக்காக அப்பியாசப் புத்தகங்கள் தொடராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்…. தொடர்ந்து புகைப்படங்களும் செய்திகளும் வெளியிடப்படும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பராமரிப்பற்ற அநாதைப் பிள்ளைகளுக்கான SLTJயின் மாதாந்த புலமை பரிசில் திட்டம் ஆரம்பம்.

பராமரிப்பற்ற அநாதைப் பிள்ளைகளுக்கான SLTJயின் மாதாந்த புலமை பரிசில் திட்டம் ஆரம்பம்.
November 3, 2011
ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவிகள்

ஏகத்துவப் பிரச்சாரத்தையும், சமுதாயப் பணிகளையும் ஒருங்கே முன்னெடுத்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தனது சேவைகளை நாளுக்கு நாள் விரிவுபடுத்தியபடி உள்ளதை அனைவரும் அறிவீர்கள்.

அந்த வகையில் கடந்த 01.11.2011 அன்று பராமரிப்பற்ற அநாதைச் சிறுவர்களுக்கான மாதாந்த புலமைப் பரிசில் திட்டத்தையும் ஜமாத் ஆரம்பித்தது.  இந்தப் பணியை ஆரம்பிக்கும் முகமாக சுமார் 36 அநாதைப் பிள்ளைகளுக்கான உதவித் தொகையை ஐக்கிய இராச்சியத்தில் (UK)பணிபுரியும் இலங்கைச் சகோதரர்களின் தந்துதவியமை குறிப்பிடத்தக்கதாகும். அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சகோதரர்களின் மார்க்கத் தேவையையும், வாழ்வாதார பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்காக NMD என்ற பெயரில் புதிய முஸ்லீம்களுக்கான வழிகாட்டல் பிரிவொன்றையும் ஜமாத் அண்மையில் ஆரம்பித்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவருக்கு SLTJ சார்பாக பணப் பரிசில் வழங்கப்பட்டது.

5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவருக்கு SLTJ சார்பாக பணப் பரிசில் வழங்கப்பட்டது.
October 20, 2011
கல்வி உதவிகள்

அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கெக்கிராவை ஒலம்பாவை என்ற ஊரைச் சேர்ந்த முஹம்மது ஸகீ என்ற மாணவர் அதிக புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை மட்டத்தில் முதலிடம் பெற்றார் அல்ஹம்துலில்லாஹ்.

இவருக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அநுராதபுர மாவட்ட கிளைகளின் (நேகம, ஹோராப்பொல, கலாவெவ) வேண்டுகொளுக்கினங்க ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையத்தின் மூலமாக 15000ம் ரூபா பணமும் புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டது.

பல வகைகளிலும் ஆன்மீக மற்றும் சமுதாயப் பணியை மிகவும் வீரியமாக முன்னெடுத்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் கல்வி பிரிவினால் இவ்வுதவி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

O/L 9 பாடங்களிலும் சிறப்புச் சித்தி. மேற்படிப்பிற்கு SLTJ 12000ம் ரூபா நிதியுதவி

O/L 9 பாடங்களிலும் சிறப்புச் சித்தி. மேற்படிப்பிற்கு SLTJ 12000ம் ரூபா நிதியுதவி
June 24, 2011
உதவிகள்

இலங்கைக் கல்வி அமைச்சினால் நடத்தப்படும் கல்விப் பொதுத் தராதர சதாரண தரத்தில் ( O/L ) 9 பாடங்களிலும் சித்தியடைந்த மாணவிக்கு அவருடைய மேற்படிப்படை தொடர்வதற்காக ரூபா 12 ஆயிரம் நிதியுதவி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக வழங்கப்பட்டது.

ஜமாத்தின் சமூக சேவைப் பொருப்பாளர் சகோதரர் முஈனுத்தீன் நிதியுதவியை வழங்குவதையும், ஜமாத்தின் அங்கத்தவர் சகோதரர் ரிலா அவர்கள் அருகில் இருப்பதையும் காணலாம்.