நிவாரண உதவிள்

கனடா வாழ் இலங்கை சகோதரரின் உதவியினால் யுத்த மண்ணில் SLTJயின் குடிநீர் திட்டம்.

October 13, 2011
நிவாரண உதவிள்

மன்னார், வேப்பம் குளம் பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறும் மக்களுக்காக அவர்களின் குடி நீர் தேவையை நிவர்த்தி செய்யும் விதமாக இலவச குடி நீர் திட்டத்தின் படி பொதுக் கினறு ஒன்றை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அமைத்துக் கொடுத்தது அல்ஹம்துலில்லாஹ்.

கனடாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த முஹம்மத் ஜிப்ரி ஷரீப் ( கொழும்பு கிரேன்பாஸ்) என்ற சகோதரரின் குடும்பத்தினர் இந்தக் கினறு அமைக்கும் உன்னதமான பணிக்கு நிதியுதவி செய்திருந்தார்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் நேரடி கண்காணிப்பில் கனடாவைச் சேர்ந்த இலங்கை சகோதரரின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட பொதுக் கினறு கடந்த 01.10.2011 அன்று திறந்து வைக்கப்பட்டது.

எந்த வெளிநாட்டு அமைப்பிடமிருந்தும் எவ்விதமான நிதியுதவியையும் பெறாமல் [...]

இருதய சத்திர சிகிச்சை க்கு உதவி

இருதய சத்திர சிகிச்சை க்கு உதவி
September 23, 2010
நிதி உதவிகள்

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தின் சமூகப் பணிகளின் ஒர் அங்கமாக இருதய சத்திர சிகிச்சைக்காக டெடன்ஸ் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஒருவருக்கு 85000.00 ருபா பணத்தை வழங்கினர். ஜமாத்தினர் அன்பளிப்பு செய்யூம் போது பிடிக்கப்பட்ட படம். படத்தில் ஜமாத்தின் தலைவர் ஆர். எம். ரியால் காசோலையை வழங்குவதையூம் அருகில் பொதுச் செயலாளர் அப்துர் ராஸிக்இ பொருளாலர் கமர்தீனையூம் படத்தில் காணலாம். தய சத்திர சிகிச்சைக்காக டெடன்ஸ் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஒருவருக்கு 85000.00 ருபா பணத்தை வழங்கினர். ஜமாத்தினர் அன்பளிப்பு செய்யூம் போது பிடிக்கப்பட்ட படம். படத்தில் ஜமாத்தின் தலைவர் ஆர். எம். ரியால் காசோலையை வழங்குவதையூம் அருகில் பொதுச் செயலாளர் [...]

சவுதியில் பாதிக்கப் பட்ட இலங்கைப் பெண் ஆரியவதிக்கு SLTJ ரூபா 75000ம் நிதியுதவி.

சவுதியில் பாதிக்கப் பட்ட இலங்கைப் பெண் ஆரியவதிக்கு SLTJ ரூபா 75000ம் நிதியுதவி.
September 16, 2010
நிதி உதவிகள்

சவுதியில் பாதிக்கப் பட்ட இலங்கைப் பெண் ஆரியவதிக்கு SLTJ ரூபா 75000ம் நிதியுதவி.

கடந்த 10 நாட்களாக பேசப்பட்டு வரும் மிக பரபரப்பான செய்தி ஆரியவதி என்ற இலங்கைப் பெண் சவூதியில் வைத்து பாதிக்கப் பட்டதாகும்.
குறிப்பிட்ட பெண் சவூதிக்கு வீட்டு வேலைக்காக சென்றவர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் இலங்கை திரும்பினார்.இலங்கை திரும்பி அடுத்த நாள் ஆரியவதி மாத்தரையில் கம்புருபிட்டிய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார்.
அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவ குழு ஆரியவதியின் உடலில் கிட்டத்தட்ட 23 ஆணிகள் ஏற்றப் பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
23 ஆணிகளும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப் பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக கூறப்பட்ட சவுதியைச் சேர்ந்த தம்பதியினரை சவுதி அரசு கைது செய்துள்ளது.
இந்தச் செய்தி கடந்த சில [...]