ஜமாஅத் நிகழ்ச்சிகள்

இரக்காமத்தில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அறிமுகம்

May 20, 2012
இதர நிகழ்ச்சிகள்

நேற்று (19-05-2012) அம்பாரை மாவட்டம் இரக்காமம் எனும் ஊரில்  ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அறிமுகம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் பிரசாரகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை நடாத்தினர்.அவ்வூர் கொள்கைவாதிகள் அந்நிகழ்வில் கலந்து கொண்டு ஜமாஅத் குறித்த அவர்களின் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்றனர்.  நிகழ்ச்சியை தலைமை நிர்வாக உருப்பினர் சகோதரர் ரிழ்வான் ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஜமாஅத்தின் மார்க்கஇ நிர்வாகக் கொள்கைகளை எமது பிரசாரகர் சகோதரர் ஸப்வான் தெளிவுபடுத்தினார். ஜமாஅத் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான முறையில் தேசிய துணைத் தலைவர் சகோதரர் பர்ஸான் பதிலளித்தார்.

அட்டாலச்சேனையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அறிமுகம்

அட்டாலச்சேனையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அறிமுகம்
May 19, 2012
இதர நிகழ்ச்சிகள்

இன்று (19-05-2012) அட்டாலச்சேனை ஜம்இய்யது தர்பிய்யதில் இஸ்லாமியா என்ற அவர்களின் தஃவா நிலையத்தில் வைத்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅதின் நிர்வாகிகள் மற்றும் பிரசாரகர்கள் கலந்து கொண்டு ஜமாஅத் அறிமுகம் நிகழ்ச்சியை நடாத்தினர்.அவ்வூர் கொள்கைவாதிகள் அந்நிகழ்வில் கலந்து கொண்டு ஜமாஅத் குறித்த அவர்களின் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்றனர்.  நிகழ்ச்சியை தலைமை நிர்வாக உருப்பினர் சகோதரர் ரிழ்வான் ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஜமாஅத்தின் மார்க்க, நிர்வாகக் கொள்கைகளை தேசிய துணைத் தலைவர் சகோதரர் பர்ஸான் தெளிவுபடுத்தினார்.

“இஸ்லாமும் நமது ஊரும்” சம்மாந்துரையில் நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

“இஸ்லாமும் நமது ஊரும்” சம்மாந்துரையில் நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
May 19, 2012
மார்க்க விளக்கப் பொதுக் கூட்டங்கள்

ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் இம்மார்க்க சொற்பொழிவு மாலை 06.00 மணிக்கு சகோதரர் அப்துல் ஜப்பார் தலைமையில் ஆரம்பமனது. தலைமையுரையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் குறித்து தெளிவானதொரு அறிமுகத்தை வழங்கினார். அத்தோடு மஃரிப் தொழுகைக்காக நேரம் வழங்கப்பட்டது.

அடுத்த அமர்வு  மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து துவங்கியது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகர் ஸப்வான் DISc ‘இது தான் இஸ்லாம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். சமுதாயத்தில் இஸ்லாம் என்று தவறாக சித்தரிக்கப்படுபவற்றை இணங்காட்டி உண்மையான இஸ்லாம் எது என்பதையும் வஹியின் பிரகாரம் தான் எமது  வாழ்க்கை அமையவேண்டும் என்பன போன்ற முக்கிய தகவலகளை மையமாகக் கொண்டு தமது உரையை நிகழ்த்தினார்.

இறுதியாக ‘இஸ்லாமும் நமது ஊரும்’ [...]

பல்லேகல வில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அறிமுகம்

பல்லேகல வில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அறிமுகம்
May 14, 2012
ஜமாஅத் நிகழ்ச்சிகள்

நேற்று 13-05-2012 அன்று பல்லேகலவில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅதின் பிரசாரகர்ளான பர்ஸான் தாஹா அவர்களும் எம்.ஏ.ஹபீழ் ஸலபி அவர்களும் கலந்து கொண்டு ஜமாஅத் அறிமுகப் படுத்திஇ சிறப்புரையாற்றினர். ‘இஸ்லாம் அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் அழைப்பு ஆசிரியர் பர்ஸான் தாஹா அவர்கள் உரையாற்றினார்கள். ‘இஸ்லாம் ஓர் அறிவுபூர்வமான மார்க்கம்’ என்ற தொனிப்பொருளில் எம்.ஏ.ஹபீழ் ஸலபி அவர்கள் உரையாற்றினார்கள். அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பெருமளவு ஆண்களும் பெண்களும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் பெண்கள் பகுதியிலிருந்தே அதிக கேள்விகள் வந்தன. அனைத்துக் கேள்விகளுக்கும் உரையாளர்கள் இருவரும் பதில் அளித்தனர். மாலை 3.30க்கு ஆரம்பமான நிகழ்ச்சி மாலை 6 மணிவரை நடைபெற்றது. சகோ. M.A.M. ராபி அவர்கள் நிகழ்ச்சியை அங்குள்ள ஏகத்துவ [...]

சாய்ந்தமருது வில் நடைபெற்ற பகிரங்க மார்க்க விளக்க பொதுக் கூட்டம்

சாய்ந்தமருது வில் நடைபெற்ற பகிரங்க மார்க்க விளக்க பொதுக் கூட்டம்
May 13, 2012
மார்க்க விளக்கப் பொதுக் கூட்டங்கள்

ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் ஆரம்பிக்கப்பட்ட இம்மார்க்கச் சொற்பொழிவு
மாலை 05.00 மணிக்குத்தான் ஆரம்பம் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் மாலை
04.00 மணிக்கே மக்கள் அரங்கத்தை  சுற்றி குழுமிவிட்டார்கள்.

சத்தியத்தை எந்த விதமான ஒழிவு மறைவுமின்றி எடுத்துரைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட எமது ஜமாஅத்தின் முதலாவது பிரச்சார மேடைசாய்ந்தமருது கடற்கரைத்திடலில் நாட்டப்பட்டது.ஆரம்ப உரையாகவே சகோதரர் அல்தாபி நிகழ்த்திய  இஸ்லாம் கூறும் மனோதத்துவம் எனும் தலைப்பிலான உரை ஒலி பெருக்கியின் ஊடாக அங்கு கூடியிருந்த அனைவரின் உள்ளத்தையும் வெகுவாக கவர்ந்தது.

மாலை 05.30 மணிக்கு சகோதரர் நிக்றாஸ் தலைமை உரையாக கல்விக் காவலர்களின் கவனத்திற்கு!
எனும் தலைப்பில் நிகழ்ச்சியை ஆரம்பித்தார். எமது நாட்டிலுள்ள முஸ்லிம்
பாடசாலைகளில் நடைபெறும் மார்க்க விரோதச் செயல்களை  தனது வாழ்வில் இருந்தே
சுட்டிக் காட்டினார்.

அடுத்த அமர்வு, மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து துவங்கியது……

ஸ்ரீ லங்கா [...]

தம்புள்ள பள்ளியை புத்த பிக்குகள் சேதப்படுத்தியதை கண்டித்து .குவைத் மண்டலம் நடத்திய விழிப்புணர்வு கூட்டம்

தம்புள்ள பள்ளியை புத்த பிக்குகள் சேதப்படுத்தியதை கண்டித்து .குவைத் மண்டலம் நடத்திய விழிப்புணர்வு கூட்டம்
May 1, 2012
ஜமாஅத் நிகழ்ச்சிகள்

இலங்கை தம்புள பகுதியில் உள்ள முஸ்லீம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த இறை இல்லத்தில் மத வெறிக்கொண்ட புத்த பிக்குகள் வெறியாட்டத்தில் இறங்கி அப்பள்ளியை சேதப்படுத்தியதை கண்டிக்கும் விதமாகவும் இக்கண்டனத்தை இலங்கை அரசுக்கு எடுத்து செல்லும் விதமாகவும் ஒரு விழிப்புணர்வு கூட்டத்திற்கு குவைத் மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த 27-4-2012 அன்று வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு முர்காப் பகுதியில் உள்ள மனோ சல்வா உணவகத்தில் ஏற்ப்பாடு செய்திருந்தது.

மண்டல செயலாளர் சகோ கூத்தாநல்லூர் ஜின்னா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆரம்பமாக சகோதரர் இலங்கை ஒட்டுமாவடி ஃபாஹிர் அவர்களின் துவக்க உரை நிகழ்த்தினார்.அதை தொடர்ந்து மண்டல தலைவர் சகோதரர் கூனிமேடு ராஜா உணர்ச்சிமிகு சிறப்புரையாற்றினார்.காவி உடையணிந்த [...]

புழுதிவயலில் SLTJயின் உத்தியோகபூர்வ கிளை ஆரம்பம்

புழுதிவயலில் SLTJயின் உத்தியோகபூர்வ கிளை ஆரம்பம்
April 16, 2012
புதிய கிளை துவக்க நிகழ்ச்சிகள்

புத்தளம் மாவட்டத்தில் புழுதிவயல் எனும் ஊரில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜமாஅத்தின் கொள்கைகள் தெளிவாக விளக்கப்பட்டு அனைத்து நிபந்தனைகளுக்கும் உடன்பட்ட பிறகே இக்கிளை துவக்கப்பட்டது. இதில் கீழ் வரும் நிர்வாகிகள் கிளை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்    : டீ.எம்.எம். ஏ. முனாப்

துனை தலைவர்    : எம்.எந்.எம்.ரிப்கான்

செயலாளர்    :   டீ.எம்.பதுர்தீன்

துனை செயலாளர்  : கே.எம்.ஏ. பஸீர்

பொருளாளர்  : எம்.எஸ்.அப்துல் ஹகீம்

கொம்பனித்தெருவில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ கிளை ஆரம்பம்

கொம்பனித்தெருவில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ கிளை ஆரம்பம்
April 11, 2012
புதிய கிளை துவக்க நிகழ்ச்சிகள்

10.04.2012ம் திகதி கொம்பனித்தெருவில் எம்.டீ. கிட்சிலான் மண்டபத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபுர்வ கிளை ஆரம்பமாக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் கொம்பனித்தெருவின் ஏகத்துவச் சகோதரர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டதுடன் அதில் பலதரப்பட்ட கேள்விகளும் வாதங்களும் முன்வைக்கப்பட்டு அவைகளுக்கு பதிலளிக்கபட்டது. பிறகு ஜமாஅத்தின் கொள்கைகளை விளங்கி ஏற்ற சகோதரர்களில் 5 பேர் கொண்ட நிர்வாகத்தை உத்தியோகபுர்வமாக மக்கள் மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தலைவர்: எம். பைரோஸ் 0777838698

துனை தலைவர்: எம். இம்தியாஸ் 0757120456

செயலாளர்: எம். காலித் 0777710505

துனை செயலாளர் :எம். ஹிஷாம் 0773735170

பொருளாளர்: எம். இர்ஷாத் 0777719771

தடம் புரண்ட தவ்ஹீத்வாதிகள் – மக்கொனை பொதுக்கூட்டம்

தடம் புரண்ட தவ்ஹீத்வாதிகள் – மக்கொனை பொதுக்கூட்டம்
April 10, 2012
மார்க்க விளக்கப் பொதுக் கூட்டங்கள்

பேருவலை மக்கொனை கிளை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட பகிரங்க மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 07.04.2012ம் திகதி மக்கொனையில்  நடைபெற்றது. இதில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் “நாங்கள் ஏன் தனித்து செயல் படுகிறோம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதை தொடர்ந்து “தடம் புரண்ட தவ்ஹீத்வாதிகள்” எனும் தலைப்பில்    ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் துனை பொதுச் செயலாளர் சகோதரர் ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸீ அவர்கள் உரை நிகழ்த்தினார். மக்கள் மத்தியில் சன்மார்க்கத்தை பகிரங்கமாக எடுத்துரைக்கும் இது போன்ற இன்னும் நிகழ்ச்சிகளை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தோய்வின்றி தொடர்ச்சியாக செய்யும். இன்ஷா அல்லாஹ்!

மாற்றுக் கொள்கைச் சகோதரர்களுடன் கலந்துரையாடல்

மாற்றுக் கொள்கைச் சகோதரர்களுடன் கலந்துரையாடல்
April 9, 2012
இதர நிகழ்ச்சிகள்

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த வெள்ளிக் கிழமை அஸர் அதாழுகையின் பின் சாய்ந்தமருது கடற்கரைப்பகுதியில் மாற்றுக் கொள்கையில் உள்ள சகோதரர்களுடன் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல் கல்முனை – சாய்ந்தமருது கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வு “ஏன் நீங்கள் சிறீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்துடன் இணைந்து செயற்பட தயங்குகிறீர்கள்?” எனும் கருப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்காக மாற்றுக் கொள்கையில் உள்ள சகோதரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி அழைக்கப்பட்டனர்.  அழைக்கப்பட்ட பெரும் பான்மையான சகோதரர்கள் கலந்து தம்முடைய ஐயங்களை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்காக தலைமையகத்தில் இருந்து வருகை தந்த சகோதரர் ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸீ அவர்கள்  மாற்றுக் கொள்கையடையோரின் சந்தேகங்களை தெளிவுபடுத்தினார்.அல்ஹம்துலில்லாஹ்….!

ஹோராப்பொலையில் பெண்களுக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி

ஹோராப்பொலையில் பெண்களுக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி
March 29, 2012
அறிவிப்பு

சத்திய இஸ்லாத்தை தெளிவாக எடுத்துரைக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாடு முழுவதிலும் உள்ள கிளைகளினூடாக பலவிதமான தஃவாப்பணிகளை எதிர்ப்புகளையும் தாண்டி செய்து வருகிறது. ஆண்களுக்கு மட்டும் இஸ்லாத்தை படிக்க வசதிகளை செய்துகொள்ளும் இக்காலத்தில் பெண்களக்கும் இஸ்லாத்தை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்ற  நந்நோக்கில் நாடலாவிய ரீதியில் பெண்களுக்கும் விசேட நிகழ்ச்சிகளை ஜமாஅத் செய்து வருகிறது. அதன் தொடராக கெகிராவை, ஹோராப்பொலையில் எதிர்வரும் 31.03.2012 அன்று மாலை 3.45 முதல் 6.00 மணி வரை பெண்களக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.