எளிய மார்க்கம்

காத்தான்குடியில் நடைபெற்ற சகோதரர் பீ.ஜெ அவர்களின் ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி

March 10, 2012
எளிய மார்க்கம்

காத்தான்குடி கிளை மூலம் ஏற்பாடு செய்யதிருந்த இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் எனும் சகோதரர் பீ.ஜே அவர்களின் நேரடி கேள்வி பதில் ஒன்லைன் நிகழ்ச்சி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மன்டபத்தில் இரவு 7.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெற்றது. இதில் கிழக்கு மாகானத்தைச் சேர்ந்த பல சகோதரர்கள் பங்குபெற்று பயனடைந்தனர். மேலும் இந்நிகழ்ச்சிககு முன்னால் மாலை 4.00 மணி முதல் 5.45 வரை சகோதரர் ரியாஸ் எம்.ஐ.எஸ்.சீ. அவர்கள் இஸ்லாமும் முஸ்லிம் பெண்களும் எனும் தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தினார்.

SLTJ வட்டதெனிய கிளையில் நடைபெற்ற கொள்கை விளக்க நிகழ்ச்சி & இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

SLTJ வட்டதெனிய கிளையில் நடைபெற்ற கொள்கை விளக்க நிகழ்ச்சி & இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
March 5, 2012
எளிய மார்க்கம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் வட்டதெனிய கிளை ஏற்பாடு செய்திருந்த மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மற்றும் முஸ்லிம் சகோதரர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி 03.03.2012 ம் திகதி பி.ப. 2.30 மணிக்கு வட்டதெனிய எனும் ஊரில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தடுப்பதற்காக ஊர் பள்ளிவாசல் நிர்வாகச் சபையும் ஊர் பிரமுகர்களும் பல முயற்ச்சிகளில் ஈடுபட்டிருந்த போதிலும் அவர்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் வெற்றிகரமாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போலிஸ் மூலம் நிகழ்ச்சியை தடுப்பதற்கு ஒரு சிலர்  முயன்ற போதும் அவர்களது முயற்சி பயனளிக்கவில்லை.  சகோதர் ரியாஸ் MISc அவர்கள் கொள்கை விளக்கம் அளிக்க சகோதரர் பர்ஸான் அவர்கள் பொதுமக்களால் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்கினார். ஆண்கள், பெண்கள் என பலர் இதில் [...]

பேராதனை பல்கலைக் கழகத்தில் நடை பெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி.

பேராதனை பல்கலைக் கழகத்தில் நடை பெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி.
January 12, 2012
எளிய மார்க்கம்

கடந்த 11.01.2012 புதன்கிழமை பேராதனை பல்கலைக் கழக கலை பீட மாணவர்களுக்கான இஸ்லாமிய விளக்க நிகழ்ச்சியை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்தியது. பல்கலைக் கழக கூடத்தில் நடை பெற்ற இந்நிகழ்வில் சகோதரர் ரஸ்மின் M.I.Sc “21ம் நூற்றாண்டில் இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மாணவர்களின் கேள்விகளுக்கு சகோதரர் அப்துர் ராசிக் B.COM பதிலளித்தார்.

இந்நிகழ்ச்சியில் இரு நூறுக்கும் அதிகமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

Bro.Althafi’s participation of the Islamic conference in Kalawewa.

Bro.Althafi’s participation of the Islamic conference in Kalawewa.
December 18, 2011
எளிய மார்க்கம்

The Islamic conference was organized by Kalawewa, Horopola and Negama branches of Sri Lanka Thawheed Jamath at Kalawewa in the Anuradhapura district.

Bro.Fakeer Mohamed Althafi from Tamil Nadu Thawheed Jamath conducted this event. He is a senior member of Tamil Nadu Thawheed Jamath management. He spoke on the titled ‘Alikkappada vendiya asathiyangal’ (destroyable falsehood) according to the Quran and the sunnah. He commented on the people who pretend as followers of thawheed but indulge in the acts [...]

சீதன ஒழிப்பு சிறப்பு சொற்பொழிவு – கலை கட்டியது காத்தான்குடி நகர்.

சீதன ஒழிப்பு சிறப்பு சொற்பொழிவு – கலை கட்டியது காத்தான்குடி நகர்.
December 7, 2011
எளிய மார்க்கம்

கிழக்கு மண்ணில் முஸ்லீம்களை அதிகமாகக் கொண்ட காத்தான்குடி மண்ணின் – காத்தான்குடி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் வைத்து கடந்த 02.12.2011 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் மாபெரும் சீதன ஒழிப்பு சிறப்பு சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டது. அல்ஹம்துலி்ல்லாஹ்.

தென்னிந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்து மார்க்க அறிஞர் சகோததர் அல்தாஃபி அவர்கள் இந்நிகழ்வில் சீதனத்தை ஒழிப்போம், பெண்ணுரிமை காப்போம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவை நிகழ்த்தினார்.

சீதனக் கொடுமையால் தினமும் அல்லல் படும் கிழக்கு மக்களின் கஷ்டங்களை குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கி பேசப்பட்ட உரையைக் கேட்ட பலர் கண்ணீர் விட்டு அழுதமை குறிப்பிடத் தக்கதாகும்.

உரையைத் தொடர்ந்து பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டமை [...]

கலாவெவயில் ”அல்தாஃபி” கலந்து கொண்டு உரையாற்றிய இஸ்லாமிய மாநாடு.

கலாவெவயில் ”அல்தாஃபி” கலந்து கொண்டு உரையாற்றிய இஸ்லாமிய மாநாடு.
December 6, 2011
எளிய மார்க்கம்

அனுராதபுர மாவட்டம், கலாவெவ என்ற ஊரில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கலாவெவ, ஹோராப்பொல மற்றும் நேகம ஆகிய மூன்று கிளைகளும் இணைந்து நடத்திய இஸ்லாமிய மாநாட்டில் தென்னிந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டடிருந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டார்கள்.

அழிக்கப்பட வேண்டிய அசத்தியங்கள் என்ற தலைப்பில் உரையாற்றிய அல்தாஃபி அவர்கள் இஸ்லாம் என்ற போர்வையில் நுழைந்துள்ள போலிகளை இணங்காட்டியதுடன் தவ்ஹீத் என்ற போர்வையில் மக்கள் மத்தியில் ஏமாற்றித் திரிபவர்களின் உண்மைத் தன்மையையும் திருமறைக் குர்ஆன் மற்றும் சுன்னா அடிப்படையில் அழகான முறையில் தெளிவாக விபரித்துரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி ஏற்பாடு [...]