அன்பின் சகோதரர்களே!
‘உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடிய தாகவே உள்ளது” (17-81)
கடந்த 17.09.2011 சனிக்கிழமை மாலை அனுராதபுர மாவட்டத்தில் முஸ்லீம்களை அதிகமாக கொண்ட ஊரான கலாவெவயின் பழைய கொமினிகேஷன் ஜங்ஷன் (டீகோ டவர்) பகுதியில் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி ஒன்றை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கலாவெவைக் கிளையினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் இஸ்லாத்தின் பெயரால் நமது சமுதாய மக்கள் செய்யும் மார்க்கத்தில் இல்லாத பித்அத்தான காரியங்கள் எவை? அவற்றை செய்பவர்களின் மறுமை நிலை என்ன? என்ற தலைப்பில் ஜமாத்தின் பிரச்சாரகரும், அழைப்பு மாத இதழின் துணை ஆசிரியருமான சகோதரர் ரஸ்மின் M.I.Sc அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நடந்தது என்ன?
பித்அத் மற்றும் இணைவைத்தல் என்றால் என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டதின் பின்னால் பகிரங்க கேள்வி [...]






