மாணவர் நிகழ்ச்சிகள்

SLTJ மல்வானைக் கிளை சார்பாக குர்ஆன் மத்ரஸா ஆரம்பம்.

January 14, 2012
அறிவிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மல்வானைக் கிளை சார்பாக சிறுவர்களுக்கான குர்ஆன் மத்ரஸா ஆரம்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இந் நிகழ்வில் மல்வானைக் கிளை தலைவர் முர்சிபான் மற்றும் செயலாளர் முராத் ஜமாத்தின் பிரச்சாரகர் சகோதரர் மிஷால் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்களுக்கு இஸ்லாமிய ஒழுக்கவியல் தொடர்பான புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எதுன்கஹகொடுவயில் O/L மாணவர்களுக்கான வதிவிடப் பயிற்சி முகாம்.

எதுன்கஹகொடுவயில் O/L மாணவர்களுக்கான வதிவிடப் பயிற்சி முகாம்.
January 14, 2012
அறிவிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மூலம் எதிர்வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் க.பொ.த சாதாரண தரம் முடித்தவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி நிகழ்ச்சி நடை பெறவுள்ளது. அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறோம்.

பேராதனை பல்கலைக் கழகத்தில் நடை பெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி.

பேராதனை பல்கலைக் கழகத்தில் நடை பெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி.
January 12, 2012
எளிய மார்க்கம்

கடந்த 11.01.2012 புதன்கிழமை பேராதனை பல்கலைக் கழக கலை பீட மாணவர்களுக்கான இஸ்லாமிய விளக்க நிகழ்ச்சியை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்தியது. பல்கலைக் கழக கூடத்தில் நடை பெற்ற இந்நிகழ்வில் சகோதரர் ரஸ்மின் M.I.Sc “21ம் நூற்றாண்டில் இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மாணவர்களின் கேள்விகளுக்கு சகோதரர் அப்துர் ராசிக் B.COM பதிலளித்தார்.

இந்நிகழ்ச்சியில் இரு நூறுக்கும் அதிகமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பேராதனை பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய விளக்க நிகழ்ச்சி.

பேராதனை பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய விளக்க நிகழ்ச்சி.
January 10, 2012
அறிவிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மூலம் இன்று (11.01.2012) பேராதனை பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய விளக்க நிகழ்ச்சி நடை பெறவுள்ளது.

பல்கலைக் கழக மாணவர்களின் இஸ்லாமிய விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப் படும் இந்த நிகழ்வில் இஸ்லாம் பற்றிய விளக்கம் மற்றம் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடை பெறவுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

SLTJ எதுங்கஹகொடுவ கிளை சார்பாக O/L மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டி முகாம்.

SLTJ எதுங்கஹகொடுவ கிளை சார்பாக O/L மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டி முகாம்.
December 12, 2011
பயிற்சி வகுப்புகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் எதுங்கஹகொடுவ கிளை சார்பாக க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விஞ்ஞானப் பாட விரிவுரை நடத்தப்பட்டது. இதில் ஆசிரியர் சகோதரர் ரஸ்மி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் எப்படி பரீட்சைக்கு தயாராக வேண்டும் என்பது தொடர்பான விளக்கத்தைக் கொடுத்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

SLTJ மாபோலைக் கிளை சார்பாக O/L மாணவர்களுக்கான விஞ்ஞானக் கருத்தரங்கு.

SLTJ மாபோலைக் கிளை சார்பாக O/L மாணவர்களுக்கான விஞ்ஞானக் கருத்தரங்கு.
October 31, 2011
பயிற்சி வகுப்புகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாபோலைக் கிளை சார்பாக நேற்று (30-10-2011) ஞாயிற்றுக் கிழமை மாபோலை அல் – அஷ்ரப் முஸ்லீம் வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விஞ்ஞானப் பாட கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இதில் சகோதரர் ரஸ்மி (Under Graduate. Agri) அவர்கள் மாணவர்களுக்கான விஞ்ஞான விளக்கங்களை செவ்வெனே நிகழ்த்தினார்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாபோலைக் கிளை இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

GCE A/L மாணவர்களுக்கான மூன்று நாள் வதிவிடப் இஸ்லாமியப் பயிற்சி.

GCE A/L மாணவர்களுக்கான மூன்று நாள் வதிவிடப் இஸ்லாமியப் பயிற்சி.
September 12, 2011
அறிவிப்பு

GCE A/L மாணவர்களுக்காக மூன்று நாள் வதிவிட இலவச இஸ்லாமியப் பயிற்சி வகுப்பை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஏற்பாடு செய்துள்ளது. GCE A/L பரீட்சை எழுதியவர்கள் அல்லது எழுதக் காத்திருப்பவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து பயன் பெற முடியும்.

ஆண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் அனுபவம் வாய்ந்தவர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து பயன் பெருமாறு அன்பாய் அழைக்கிறோம்.

ஷஃபான் 15ம் நாள் நோன்புக்கு ஆதாரம் உண்டா? வழிகெட்டவர்களின் தவறான மொழியாக்கமும், தரங்கெட்ட பத்வாவும்(?).

ஷஃபான் 15ம் நாள் நோன்புக்கு ஆதாரம் உண்டா? வழிகெட்டவர்களின் தவறான மொழியாக்கமும், தரங்கெட்ட பத்வாவும்(?).
July 20, 2011
கட்டுரைகள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜமாத்துல் முஸ்லிமீன் என்ற பெயரில் இலங்கையில் இருக்கும் வழி கெட்ட அமைப்பொன்று ஷஃபான் மாதம் 15ம் நாள் நோன்பு பிடிக்க வேண்டும் என்றும் அதுதான் பராஅத் இரவு என்றும் குறிப்பிட்டு ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டிருந்தார்கள் அந்தத் துண்டுப் பிரசுரத்திற்குறிய பதிலை இங்கு தருகிறோம்.

இதுதான் வழிகெட்ட அமைப்பினர் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தை பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.

ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்கச் சொல்லும் ஒரு ஹதீஸும் முஸ்லிம் நூலில் இல்லை. வித்தியாசமாக எதையாவது சொல்ல வேண்டும் நோய் காரணமாக இவ்வாறு வாதிடுகின்றனர்.

அவர்கள் குறிப்பிடும் மூன்று ஹதீஸ்களிலும் மாதத்தின் இறுதியில் என்று மொழி பெயர்ப்பதற்குப் பதிலாக [...]

வட்டி என்ற சமுதாயக் கொடுமை. (தொடர் – 02)

வட்டி என்ற சமுதாயக் கொடுமை. (தொடர் – 02)
July 16, 2011
கட்டுரைகள்

வட்டியைப் பற்றி சரியாக தெளிவு படுத்தாமல் நபியவர்கள் மரணித்தார்களா?

கட்டுரை ஆசிரியர் : Rasmin  M.I.Sc

வட்டியைப் பற்றி திருக்குர்ஆன் சொல்லும் செய்திகளை சென்ற தொடரில் பார்த்தோம். வட்டியைப் பற்றி நபி(ஸல்)அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்போது நோக்குவோம்.

அவ்ன் பின் அபீ ஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:    குருதி உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை என் தந்தை (அபூஜுஹைஃபா அவர்கள்) விலைக்கு வாங்கினார்கள். (பிறகு, அவருடைய தொழிற் கருவிகளை உடைத்துவிட்டார்கள்).  (இது தொடர்பாக) அவர்களிடம் நான் (விளக்கம்) கேட்க, அவர்கள் “நபி (ஸல்) அவர்கள், நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (குருதிஉறிஞ்சி எடுப்பதற்கு பெறுகின்ற கூலியை)யும் தடைசெய்தார்கள். வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!” என்று பதிலளித்தார்கள். (புகாரி [...]

கபுராளிகள் தினம் கற்பனையாக உருவாக்கப்பட்டதே!

கபுராளிகள் தினம் கற்பனையாக உருவாக்கப்பட்டதே!
July 11, 2011
கட்டுரைகள்

இல்லாத பெயரில் பொல்லாத பித்அத்கள்.

கட்டுரை ஆசிரியர் : RASMIN M.I.Sc

அன்னையர் தினம், முதியோர் தினம், ஆசிரியர் தினம், என்று பல விதமான தினங்களை இன்று மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த தொடரில் நமக்கும் காலத்திற்குக் காலம் ஏதாவது சில தினங்களை உருவாக்க வேண்டும் என்று நினைத்த இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த மத குருமார்கள் சிலர், நபியவர்களின் பிறந்த தினம், நபியவர்கள் மிஃராஜ் சென்ற தினம், என்று பல வகையான மார்க்கத்தில் இல்லாத கொண்டாட்டங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு அவற்றையும் மார்க்கம் என்ற பெயரில் காலா காலமாக அரங்கேற்றி வருகிறார்கள்.

அந்த வகையில் ஷஃபான் மாதம் 15ம் நாளை கபுராளிகள் தினம் (பராஅத் இரவு) என்று உருவாக்கி அதனை வெகு விமர்சையாக முஸ்லீம்களில் சிலர் கொண்டாடி [...]

அறிந்தும், பலரால் சரியாக அறியப்படாத தலைவர்.

அறிந்தும், பலரால் சரியாக அறியப்படாத தலைவர்.
July 5, 2011
கட்டுரைகள்

அலி பின் அபீதாலிப் அவர்களின் வரலாற்றில் இருந்து சில பகுதிகள்.…….   ஆக்கம்: RASMIN M.I.Sc

இஸ்லாம் உருவாக்கிய சமுதாயத்தில் மிக முக்கிய சமுதாயமாக நபியவர்களைப் பின்பற்றியவர்களில் அவா்களுடைய சஹாபாக்கள் கருதப் படுகிறார்கள். ஏன் என்றால் அந்த சஹாபாக்கள் இஸ்லாமிய மார்க்கம் இந்தப் புவியில் பரவ வேண்டும் என்பதற்காக தங்களுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவு செய்தார்கள்.
சொந்த ஊரை விட்டுத் துரத்தப் பட்டார்கள், கடுமையாக தாக்கப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள் இப்படி தங்களுக்கு எந்தத் துன்பம் ஏற்படினும் கொள்கையை விடோம் என்ற நாதத்தை தங்கள் வாழ்க்கையாகவே வைத்திருந்தார்கள்.
அந்த வகையில் தங்கள் வாழ்வை இந்த மார்க்கத்திற்காக செலவு செய்தவா்களில் முக்கியமானவராக கருதப்படுபவர்களில் ஒருவர்தான் வீரத்தின் புலி என்று வா்ணிக்கப்படும் அலி பின் அபீதாலிப் அவா்கள்.
இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் [...]