ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் இம்மார்க்க சொற்பொழிவு மாலை 06.00 மணிக்கு சகோதரர் அப்துல் ஜப்பார் தலைமையில் ஆரம்பமனது. தலைமையுரையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் குறித்து தெளிவானதொரு அறிமுகத்தை வழங்கினார். அத்தோடு மஃரிப் தொழுகைக்காக நேரம் வழங்கப்பட்டது.
அடுத்த அமர்வு மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து துவங்கியது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகர் ஸப்வான் DISc ‘இது தான் இஸ்லாம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். சமுதாயத்தில் இஸ்லாம் என்று தவறாக சித்தரிக்கப்படுபவற்றை இணங்காட்டி உண்மையான இஸ்லாம் எது என்பதையும் வஹியின் பிரகாரம் தான் எமது வாழ்க்கை அமையவேண்டும் என்பன போன்ற முக்கிய தகவலகளை மையமாகக் கொண்டு தமது உரையை நிகழ்த்தினார்.
இறுதியாக ‘இஸ்லாமும் நமது ஊரும்’ [...]











