கிழக்கு மண்ணில் முஸ்லீம்களை அதிகமாகக் கொண்ட காத்தான்குடி மண்ணின் – காத்தான்குடி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் வைத்து கடந்த 02.12.2011 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் மாபெரும் சீதன ஒழிப்பு சிறப்பு சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டது. அல்ஹம்துலி்ல்லாஹ்.
தென்னிந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்து மார்க்க அறிஞர் சகோததர் அல்தாஃபி அவர்கள் இந்நிகழ்வில் சீதனத்தை ஒழிப்போம், பெண்ணுரிமை காப்போம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவை நிகழ்த்தினார்.
சீதனக் கொடுமையால் தினமும் அல்லல் படும் கிழக்கு மக்களின் கஷ்டங்களை குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கி பேசப்பட்ட உரையைக் கேட்ட பலர் கண்ணீர் விட்டு அழுதமை குறிப்பிடத் தக்கதாகும்.
உரையைத் தொடர்ந்து பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டமை [...]





