பிரச்சினைகள்

பறகஹதெனியவில் ஜும்ஆவை நிறுத்த அராஜகம் செய்யும் அசத்தியக் கும்பல்

May 8, 2012
பிரச்சினைகள்

இலங்கையில் தவ்ஹீத் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்ட இடங்களில் முக்கிய இடமாக பறகஹதெனிய திகழ்கிறது. ஆனால்,இ இன்று இந்த பெருமையை சிதைக்கும் களமாக அது மாறியுள்ளது.
தவ்ஹீத்வாதிகள் என்று தங்களைப் போற்றிக் கொள்ளும் இவர்களில் பலருக்கு தவ்ஹீத் என்றால் என்னவென்றே தெரியாது. அதனால் தான் ஏகத்துவத்தை தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அன்று தவ்ஹீத் பிரச்சாரம் எப்படி ரவுடிகளாலும் அரசில்வாதிகளாலும் தடுக்கப்பட்தோ அதேபோல் இன்று போலித் தவ்ஹீத்வாதிகளால் தடுக்கப்டுகிறது.
“இஸ்லம் அந்நியமான நிலையில் தோன்றியது. அது மீண்டும் அந்நிய நிலைக்குச் செல்லும். அதை சீர் செய்வோர் மீது சுபசோபனம் உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த நபிமொழி இன்றைய நிலையை மிகவும் தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது.
இன்று தவ்ஹீத் என்ற போர்வையில் சில போலி இயக்கங்கள் உள்ளன. [...]

சினிமாவே என்னை சீரழித்தது! – ஆசிரியையைக் கொன்ற மாணவன் வாக்குமூலம்

சினிமாவே என்னை சீரழித்தது! – ஆசிரியையைக் கொன்ற மாணவன் வாக்குமூலம்
February 18, 2012
பிரச்சினைகள்

சென்னை: வருத்தமா இருக்கு… எங்க டீச்சர் செத்துடுவாங்கன்னு நினைக்கவே இல்ல.. போலீஸ் வந்து கைது பண்ணுவாங்கன்னும் தெரியாது, என அப்பாவியாக வாக்குமூலம் அளித்துள்ளான், சமீபத்தில் தனது வகுப்பு ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற மாணவன்.

மேலும் ஆசிரியையை கொல்ல கத்தி எடுக்கத் தூண்டியதே தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் வரும் வன்முறைக் காட்சிகள்தான் என அந்த மாணவன் கூறியுள்ளான்.

சென்னை நகரை மட்டுமல்ல, பள்ளி கல்வி முறையையே உலுக்கியுள்ளது, வகுப்பு ஆசிரியையை அவரது மாணவனே குத்திக் கொன்ற சம்பவம்.

கடந்த வியாழக்கிழமை பாரிமுனையில் உள்ள ஆர்மேனியன் தெருவில் இருக்கும் செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இந்த கொலை நிகழ்ந்தது. அந்த பள்ளியின் ஆசிரியை உமா மகேஸ்வரி வகுப்பறையில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரிடம் [...]

பெருநாள் தொழுகையை தடுத்த விஷமிகள் – நேகமையில் தாக்கப்பட்ட தவ்ஹீத் சொந்தங்கள்.

பெருநாள் தொழுகையை தடுத்த விஷமிகள் – நேகமையில் தாக்கப்பட்ட தவ்ஹீத் சொந்தங்கள்.
November 13, 2011
பிரச்சினைகள்

அனுராதபுர மாவட்டம் நேகமையில் திடலில் பெருநாள் தொழுகை நடத்தியதற்காக பித்அத் வாதிகளினால் தாக்கப்பட்ட சகோதரர்கள்.

கடந்த பெருநாள் தினத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக வழமை போல் எல்லாக் கிளைகளிலும் பெருநாள் திடல் தொழுகை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அனுராதபுர மாவட்டம் கலாவெவ தேர்தல் தொகுதிக்குற்பட்ட நேகம என்ற ஊரிலும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நேகம கிளை சார்பாக குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்குறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நேகம பெரிய பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்த பித்அத் வாதிகள் திடல் தொழுகையைத் தடுப்பதற்கு பல விதமான முயற்சிகளையும் மேற்கொண்டார்கள்.

சரியாக காலை [...]

அனுராதபுரம், கலாவெவயில் நடந்தது என்ன? விவாதத்திலிருந்து பின்வாங்கிய பித்அத்வாதிகள்.

அனுராதபுரம், கலாவெவயில் நடந்தது என்ன?  விவாதத்திலிருந்து பின்வாங்கிய பித்அத்வாதிகள்.
October 11, 2011
தெருமுணை பிரச்சாரங்கள்

அன்பின் சகோதரர்களே!

‘உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடிய தாகவே உள்ளது” (17-81)

கடந்த 17.09.2011 சனிக்கிழமை மாலை அனுராதபுர மாவட்டத்தில் முஸ்லீம்களை அதிகமாக கொண்ட ஊரான கலாவெவயின் பழைய கொமினிகேஷன் ஜங்ஷன் (டீகோ டவர்) பகுதியில் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி ஒன்றை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கலாவெவைக் கிளையினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் இஸ்லாத்தின் பெயரால் நமது சமுதாய மக்கள் செய்யும் மார்க்கத்தில் இல்லாத பித்அத்தான காரியங்கள் எவை? அவற்றை செய்பவர்களின் மறுமை நிலை என்ன? என்ற தலைப்பில் ஜமாத்தின் பிரச்சாரகரும், அழைப்பு மாத இதழின் துணை ஆசிரியருமான சகோதரர் ரஸ்மின் M.I.Sc அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நடந்தது என்ன?

பித்அத் மற்றும் இணைவைத்தல் என்றால் என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டதின் பின்னால் பகிரங்க கேள்வி [...]

SLTJ நேகம கிளை சார்பாக எதிர்ப்புக்கு மத்தியில் பெருநாள் திடல் தொழுகை.

SLTJ நேகம கிளை சார்பாக எதிர்ப்புக்கு மத்தியில் பெருநாள் திடல் தொழுகை.
September 6, 2011
பிரச்சினைகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நேகம (கெக்கிராவை வலயம்) கிளை சார்பாக பெருநாள் திடல் தொழுகை நடத்தப்பட்டது. ரமழான் மாதம் முழுவதும் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இரவுத் தொழுகையை சுன்னா அடிப்படையில் நடத்தப்பட்டு, பெருநாள் தொழுகையையும் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் திடலில் நடத்தப் பட்டது. ஜமாத்தின் பிரச்சாரகர் சகோதரர் அஜ்மீர் (அமீனி) அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

“இஸ்லாமிய அமைப்புகள் தீவிரவாதத்தை போதிக்கின்றன”. முஸ்லீம்களை மீண்டும் சீண்டியது லக்பிம நியுஸ் ஆங்கில நாளேடு – வன்மையாக கண்டிக்கிறது SLTJ

“இஸ்லாமிய அமைப்புகள் தீவிரவாதத்தை போதிக்கின்றன”. முஸ்லீம்களை மீண்டும் சீண்டியது லக்பிம நியுஸ் ஆங்கில நாளேடு – வன்மையாக கண்டிக்கிறது SLTJ
July 17, 2011
பிரச்சினைகள்

பல் சமூகத்தவர்களும் வாழும் இலங்கைத் திருநாட்டில் சமூகங்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை உண்டாக்கும் நோக்கில் சில கீழ்த்தரமான எண்ணங் கொண்டவர்கள் செயல்படுகிறார்கள்.

அதில் முதல் இடத்தை ரியாஸ் சாலி (ஆசாத் சாலியில் சகோதரரும் கொழும்பு தெவடகஹ தர்காவின் ட்ரஸ்ட்டியும் ஆவார்) தான் பெருவார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

அல்லாஹ்வை வணங்குவதை விட்டு விட்டு கப்ரில் அடக்கப்பட்டுள்ள மரணித்தவர்களை வணங்கும் கொள்கையை கொண்ட ரியால் சாலி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லக்பிம நியுஸ் ஆங்கில நாளேட்டில் Wahhabist terriorist traing in srilanka? THE ISSUES என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார்.

அந்தக் கட்டுரையில் இலங்கையில் வெளிநாட்டுப் பணத்தின் உதவியுடன் இயங்கும் இஸ்லாமிய [...]

பொலன்னறுவை மண்ணிலும் ஏகத்துவ எழுச்சி. அல்ஹம்துலில்லாஹ்.

பொலன்னறுவை மண்ணிலும் ஏகத்துவ எழுச்சி. அல்ஹம்துலில்லாஹ்.
July 7, 2011
பிரச்சினைகள்

கடந்த ஒரு வருட காலமாக பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவப் பிரச்சாரம் மிகவும் வீரியமாக நடைபெற்று வருகிறது. “அல்ஹம்து லில்லாஹ்”. இதன் விளைவாக தற்போதைக்கு அம்மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் மூன்று கிளைகள் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் மார்க்க விளக்க கூட்டங்கள், ஜும்மா பயான், சமூக சேவைகள் என்று பல செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் அந்த ஊரிலுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாக சபை மற்றும் மாவட்ட ஜம்மியதுல் உலமா போன்றோரிடமிருந்து பாரிய எதிர்ப்புகளும் சவால்களும் கொள்கைவாதிகளை நோக்கி வந்த வண்ணமே இருந்தன.

ஏகத்துவத்திற்கு கி்டைத்த வெற்றி

கடந்த சில வாரங்களாக மாணி்க்கம்பிடிய என்ற ஊரில் நபி வழியில் நம் மார்க்க [...]

சகோதரர் ஸஹ்ரான் மவ்லவிக்கு SLTJயின் விவாத அழைப்பு.

சகோதரர் ஸஹ்ரான் மவ்லவிக்கு SLTJயின் விவாத அழைப்பு.
June 27, 2011
பிரச்சினைகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் என்ற நமது அமைப்பு குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் பிரச்சாரம் செய்து வருவது அனைவரும் அறிந்ததே!

ஜமாத்தின் பிரச்சாரத்திற்கு எதிராக கருத்துச் சொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் பகிரங்கமாக கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு ஜமாத் எந்நேரத்திலும் பின்வாங்கியதில்லை அல்ஹம்துலில்லாஹ்.

அந்த வகையில் கடந்த காலங்களில் நமது ஜமாத்தை விமர்சித்தவர்களை பகிரங்க விவாத மேடையில் சந்திப்பதற்கு ஜமாத் அழைப்பு விடுத்ததையும் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்

அந்த வகையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்துடன் விவாதம் செய்யத் தயார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தவர்களில் ஒருவர் சகோதரர் ஸஹ்ரான் மவ்லவி அவர்கள்.

விவாதம் செய்ய வேண்டுமானால் ஜமாத்திற்கு எழுத்து மூலம் [...]

நுனிப்புல் மேய்பவர்கள் யார்? மவ்தூதியின் பக்கவாத்தியங்களுக்கு வரிக்கு வரி பதில்.

நுனிப்புல் மேய்பவர்கள் யார்?   மவ்தூதியின் பக்கவாத்தியங்களுக்கு வரிக்கு வரி பதில்.
May 26, 2011
கட்டுரைகள்

ஆக்கம் : RASMIN M.I.Sc

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் மே மாத அழைப்பு இதழில் தஜ்ஜாலின் வருகையை மறுக்கும் அபுல் அஃலா மவ்தூதி என்ற தலைப்பில் நான் எழுதிய ஒரு ஆக்கம் வெளியிடப்பட்டது.

அதே ஆக்கம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் இணையதளத்திலும், எனது தளத்திலும் வெளியிடப்பட்டது வாசகர்கள் அறிந்ததே.

குறிப்பிட்ட ஆக்கத்திற்கு வரிக்கு வரி பதில் தர வேண்டியவர்கள் அப்படி செய்வதை விட்டுவிட்டு நம்மை பார்த்து நுனிப்புல் மேய்பவர்கள் என்று தலைப்பிட்டு புல்லின் மேல் விழுந்திருக்கும் பணியை நக்கும் வேலையைப் பார்த்ததுதான் நகைப்புக்குறியதாக இருக்கிறது.

அவர்கள் வெளியிட்ட ஆக்கத்தினை பல சகோதரர்களும் நமக்கு அனுப்பித் தந்து பதில் வெளியிடும் படி கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்தஆக்கம் பிரசுரிக்கப்படுகிறது.

சரி இனி அவர்கள் பதில் என்ற பெயரில் எழுதியிருக்கும் ஆக்கத்திற்குறிய நமது பதிலைப் பார்ப்போம்.

(இப்போது [...]

கெக்கிராவையில் கந்தூரிக்கு எதிராக நோட்டிஸ் விநியோகம்.

கெக்கிராவையில் கந்தூரிக்கு எதிராக நோட்டிஸ் விநியோகம்.
April 21, 2011
ஜமாஅத் நிகழ்ச்சிகள்

அனுராத புர மாவட்டம் கெக்கிராவைப் பகுதியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் ஹோராப்போலக் கிளையின் சார்பாக கந்தூரிக்கு எதிராக நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இஸ்லாத்தை அதன் தூய வடிவில் சொல்ல வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் கிளைகள் அமைத்துச் செயல்பட்டு வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மக்கள் மத்தியில் பெருகிக் கிடக்கும் மூடப் பழக்கங்களை துடைத் தெரிவதற்காக துண்டுப் பிரசுரங்கள் மூலமும் தனது தஃவாவை முன்னெடுப்பது குறிப்பிடத்தக்கது.

பலத்த எதிர்புக்கு மத்தியில் கந்தூரிக்கு எதிராக ஜமாத்தின் ஹோராப்பொல கிளை களம் இரங்கி செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

வெளியிடப்பட்ட நோட்டிஸ்.

ஹெம்மாத்தகமையில் நடை பெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி எம்.ஐ சுலைமான் கலந்து கொண்டார்.

ஹெம்மாத்தகமையில் நடை பெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி எம்.ஐ சுலைமான் கலந்து கொண்டார்.
April 14, 2011
அறிவிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாத கமை கிளை ஏற்பாடு செய்திருந்த மார்க்க விளக்க நிகழ்சி கடந்த 07.04.2011 அன்று ஹெம்மாத கம மஸ்ஜிதுல் ஹிதாயாவில் நடை பெற்றது. இந்நிகழ்வில் சகோதரர் எம்.ஐ சுலைமான் அவா்கள் அசத்தியம் அழிவுரும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பகிரங்க கேள்வி பதில் நிகழ்சியும் நடை பெற்றது. கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது ஜமாத்தே இஸ்லாமி என்ற அமைப்பினரைப் பற்றி முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டது. அந்தக் கேள்விகளுக்கு குா்ஆன், ஹதீஸில் இருந்து மிகத் தெளிவாக பதில் கொடுக்கப்பட்டதுடன் ஜமாத்தின் அழைப்பு மாத இதழ் ஜமாத் தே இஸ்லாமி தொடர்பாக பொய்யான தகவலை எழுதியிருப்பதாக கேட்கப்பட்ட கேள்வி நேரத்தில் இது தொடர்பாக ஜமாத்தே இஸ்லாமி பகிரங்கமான வழி கேட்டில் இருக்கிறது அவா்கள் [...]