வணக்கங்கள்

கொள்கை விளக்கம்

February 21, 2012
கொள்கை

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

கொள்கை விளக்கம்

வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை உறுதியாக நம்புவதும்ää முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் திருத்தூதருமாவார் என்பதை உறுதியாக நம்புவதும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும்.
அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும்
அல்லாஹ்வை வணங்குங்கள் அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!
அல்குர்ஆன் 4:36
ஜின்னையும்ääமனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. அல்குர்ஆன் 51:56
இணை கற்பித்தல் கூடாது
அகில உலகையும் படைத்துää காத்து பராமரிக்கும் ஒரே ஒரு இறைவன் அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது.அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை.எதுவும் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும்.
பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகள்ääஆற்றல்கள் [...]

ஹஜ்ஜின் சட்ட திட்டங்கள் முழுத்தொகுப்பு.

ஹஜ்ஜின் சட்ட திட்டங்கள் முழுத்தொகுப்பு.
November 1, 2011
நூல்கள்

ஹஜ் தொடர்பான அனைத்து சட்டதிட்டங்கள் மற்றும் கேள்வி பதில்களின் தொகுப்பை தலைப்புகளில் க்லிக் செய்து பார்க்கவும்.

ஹஜ் சட்டங்கள் தொகுப்பு.

ஹஜ் குறித்த கேள்வி பதில்கள்

நபிவழியில் நம் ஹஜ்

ஹஜ் அத்தியாயம் புகாரி

உம்ரா அத்தியாயம் புகாரி

ஹாஜியார் பட்டம் உண்டா

ஹஜ் செயல் விளக்கம்

ஹஜ்ஜுக்கு போகும் போது வசிய்யத் அவசியமா

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா

தக்க ஆண் துணை இல்லாமல்

மதீனா ஸியாரத்

பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமை முடிக்காமல் ஹஜ் செய்யலாமா

ஹாஜியாருக்கு தனி அடையாளம் உண்டா

ஓசியில் ஹஜ் செய்யலாமா

வங்கியில் வேலை செய்பவரின் ஹஜ் கூடுமா

தனியார் மூலம் ஹஜ் செய்யலாமா

காபாவை சுற்றுவது ஏன்

மஹ்ரம் இல்லாமல் ஹஜ் செய்யலாமா

வங்கியில் வேலை பார்ப்பவரின் [...]

குர் ஆன், சுன்னா ஒளியில் குர்பானியின் சட்டங்கள்.

குர் ஆன், சுன்னா ஒளியில் குர்பானியின் சட்டங்கள்.
November 1, 2011
நூல்கள்

நாம் எந்த ஒரு வணக்கத்தைப் புரிந்தாலும் அதை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தவாறு செய்ய வேண்டும். நாம் விரும்பியவாறு செய்தால் அந்த செயல் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தொழுகை நோன்பு போன்ற வணக்கங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியதைப் போல் குர்பானியின் சட்டங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
ஆனால் குர்பானி தொடர்பாக பல தவறான நம்பிக்கைகள் மக்களிடத்தில் நிலவுகின்றன. ஆகையால் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு குர்பானி தொடர்பான சட்டங்கள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கே.

இஸ்மாயீல் (அலை) அவர்களைத் தனக்காக அறுத்துப் பலியிட வேண்டும் என்று இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் அறிவித்தான்.

இப்ராஹீம் (அலை) தள்ளாத வயதில் இஸ்மாயில் (அலை) அவர்களைப் [...]

ரமழான் பற்றிய கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பு.

ரமழான் பற்றிய கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பு.
July 22, 2011
நோன்பு

புனிதமிக்க ரமழான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

திருமறைக் குர்ஆன் இறக்கியருளப் பட்ட இம் மாதத்தில் அதிகமான நன்மைகளை செய்யவதோடு அதிகமதிகம் பாவ மண்ணி்ப்பையும் இறைவனிடம் நாம் கேட்க்க வேண்டும்.

ஆயிரம் மாதங்களைவிட சிறப்பான லைலதுல் கத்ர் இரவும் இம்மாதத்தில் தான் நம்மைத் தாண்டிச் செல்கிறது. அப்படிப்பட்ட சிறப்பான மாதத்தில் செய்ய வேண்டிய காரியங்கள், செய்யக் கூடாதவைகள் போன்றவற்றைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ரமழான் பற்றிய ஒரு தொகுப்பை இங்கு நாம் வெளியிடுகிறோம்.

தலைப்பைக் க்லிக் செய்வதின் மூலம் நீங்கள் அவற்றைப் படித்துப் பயன் பெற முடியும்.

நோன்பின் சட்டங்கள் முழுத் தொகுப்பு (நூல்)

நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா? குளுகோஸ் (சேலைன்) ஊசி போடலாமா? [...]

ஆறு நோன்பு ஆதாரமற்றதா?

ஆறு நோன்பு ஆதாரமற்றதா?
July 21, 2011
ஆய்வுகள்

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ الْحَارِثِ الْخَزْرَجِيِّ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ أَخُو يَحْيَى بْنِ سَعِيدٍ أَخْبَرَنَا عُمَرُ بْنُ ثَابِتٍ أَخْبَرَنَا [...]

பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா

பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா
July 21, 2011
நோன்பு

ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29ம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாமா?

எம். ஷபீர்

இரண்டு சாட்சிகள் பிறை பார்த்ததாகக் கூறினால் அதை அப்பகுதியினர் ஏற்க வேண்டும் என்பதற்கு ஹதீஸில் ஆதாரம் உள்ளது. ஆனால் அவர்கள் எந்த நேரத்தில் பார்த்ததாகக் கூறினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பொருள் கொள்ளக் கூடாது.

இரவு பத்து மணிக்கு தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினால் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அந்த நேரத்தில் தலைப் பிறையைப் பார்க்க முடியாது.

நண்பகலில் தலைப் பிறையைப் [...]

நோன்பை தாமதமாக திறக்களாமா?

நோன்பை தாமதமாக திறக்களாமா?
July 21, 2011
நோன்பு

நோன்பு நேரங்களில் சூரியன் மறையக் கூடிய நேரத்தை விஞ்ஞானக் கணிப்பு மூலம் அறிந்து கொள்கின்றோம். ஆனால் சில நிமிடங்கள் முன் பின்னாக முரண்பட்டுக் கூறுகின்றனர். இதனால் பேணுதலுக்காக சில நிமிடங்கள் கூடுதலாக்கி நோன்பைத் திறக்கலாமா?

சூரியன் உதயம், சூரியன் மறைவு போன்ற நேரங்கள் தொடர்பாக‌ விஞ்ஞானக் கணிப்பில் எந்த முரண்பாடும் இல்லை. அக்டோபர் 2ம் தேதி காந்தி மண்டபத்தில் இந்த இடத்தில் சூரிய ஒளி வரும் என்று கணித்துள்ளார்கள் என்றால் அந்த இடத்தில் குறிப்பிட்ட நாளில் சூரிய ஒளி வருகின்றது. அந்த அளவுக்குத் துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஊருக்கு ஊர் வேறுபடுமே தவிர ஒரே ஊருக்கு இரண்டு விதமான நேரத்தை யாரும் கணிப்பதில்லை.

حدثنا عبد الله بن يوسف أخبرنا [...]

நாளின் ஆரம்பம் எது? உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா

நாளின் ஆரம்பம் எது?  உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா
July 21, 2011
நோன்பு

பிறையை பல வருடத்திற்கு முன்கூட்டியே கணித்து விடலாம் என்றும், சுபுஹுடைய நேரம் தான் நாளுடைய ஆரம்பம் என்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒற்றுமை கோஷம் கூறும் கூட்டத்தை அவர்கள் குறிவைத்து செயல்படுகிறார்கள். பிறை முன்கூட்டியே தெரிந்து விட்டால் எல்லோரும் ஒரே நாளில் பெருநாளை ஒன்றாகவும் அமைதியாகவும் கொண்டாடலாம் என்கிறார்கள். அதே போல் நபிகள் நாயகத்திற்கு இப்போதுள்ள அறிவியல் ஞானம் இல்லாததால் தான் பிறையைப் பார்த்து நாட்களை முடிவு செய்தார்கள். அவர்கள் எடுக்கும் உதாரணம், நார்வே போன்ற நாட்டைத் தான். அங்கு வருடத்தில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாக இருப்பதால் எப்படி பிறையைக் கணக்கிடுவார்கள்? தயவு செய்து நல்ல ஒரு பதிலை எதிர்பார்க்கிறேன்.

ரஃபீக் நாகர்கோவில்

பதில் :

விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா?

விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா?
July 21, 2011
நோன்பு

கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்’ என்ற ஹதீஸில் சலுகை என்பதற்கு, நோன்பை மீட்ட வேண்டும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறீர்கள். அதற்கான நேரடியான எந்த ஆதாரத்தையும் முன் வைக்கவில்லை. ஆனால் நோன்பை விட்டு விடலாம்; மீட்டத் தேவையில்லை’ என்ற கருத்தில் நபித்தோழர்கள் கூறிய செய்தி தாரகுத்னீ, தப்ரானீ போன்ற நூற்களில் உள்ளது. இந்த விளக்கம் இல்லையென்றால் தங்களின் விளக்கத்தை ஏற்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் மேற்கண்ட ஹதீஸைத் தாங்கள் புரிந்து கொண்டு விளக்கியதை விட நபித்தோழர்களின் கூற்று பொருத்தமான விளக்கமாகத் தோன்றுகிறது. இது குறித்து விளக்கவும்.

ஏ.எம்.எஸ். ஹமீது கல்முனை, இலங்கை

மார்க்கத்தின் [...]

நோன்பாளி இரத்தம் கொடுக்கலாமா?

நோன்பாளி இரத்தம் கொடுக்கலாமா?
July 21, 2011
நோன்பு

நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா? குளுகோஸ் (சே லைன்) ஊசி போடலாமா? :

நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் காலத்திலும் அதற்கடுத்த கால கட்டங்களிலும் இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் வழக்கம் அரபியரிடம் இருந்தது.

தலையின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் துவாரமிட்டு கொம்பு போன்ற கருவியின் மூலம் அதை உறிஞ்சி வெளி யேற்றி வந்தனர். கண்ணாடிக் குவளையைப் பயன்படுத்தியும் இவ்வாறு இரத்தத்தை வெளியேற்றி வந்தனர். இது உடலுக்கு ஆரோக்கியமானது எனவும் நம்பி வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் காலத்தின் இந்த நடைமுறையிலிருந்து வேறு பல சட்டங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا خَالِدٌ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي [...]

நோன்பின் சட்டங்கள் (நூல்)

நோன்பின் சட்டங்கள் (நூல்)
July 21, 2011
நூல்கள்

நோன்பின் சட்டங்கள்.
அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் நோன்பைப் பற்றித் தொகுத்த முழுமையான புத்தகத்தை இங்கு தருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
இஸ்லாத்தின் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. ஆண்டு தோறும் முஸ்லிம் சமுதாயம் இக்கடமையை நிறைவேற்றி வந்தாலும் பலர் நோன்பின் சட்டங்களை முழுமையாக அறியாதவர்களாக உள்ளதை நாம் காண்கிறோம்.

நோன்பை முறித்து விடக் கூடிய காரியங்களைச் செய்து விட்டு, நோன்பாளிகளாகத் தங்களைப் பற்றி நினைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

நோன்பை முறிக்காத காரியங்களை, நோன்பை முறிக்கும் காரியங்கள் என்று நினைத்து, தங்களைத் தாங்களே சிரமப்படுத்திக் கொள்பவர்களும் உள்ளனர்.

நோன்பைக் குறித்துப் பலவிதமான மூட நம்பிக்கைகளும் சமுதாயத்தில் உள்ளன. எனவே நோன்பைப் பற்றி தெளிவான விளக்கத்தை அளிக்கும் நோக்கத்தில் இந்நூல் வெளியிடப்படுகின்றது.

கீழ்க்காணும் [...]