நோன்பு

ரமழான் பற்றிய கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பு.

July 22, 2011
நோன்பு

புனிதமிக்க ரமழான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

திருமறைக் குர்ஆன் இறக்கியருளப் பட்ட இம் மாதத்தில் அதிகமான நன்மைகளை செய்யவதோடு அதிகமதிகம் பாவ மண்ணி்ப்பையும் இறைவனிடம் நாம் கேட்க்க வேண்டும்.

ஆயிரம் மாதங்களைவிட சிறப்பான லைலதுல் கத்ர் இரவும் இம்மாதத்தில் தான் நம்மைத் தாண்டிச் செல்கிறது. அப்படிப்பட்ட சிறப்பான மாதத்தில் செய்ய வேண்டிய காரியங்கள், செய்யக் கூடாதவைகள் போன்றவற்றைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ரமழான் பற்றிய ஒரு தொகுப்பை இங்கு நாம் வெளியிடுகிறோம்.

தலைப்பைக் க்லிக் செய்வதின் மூலம் நீங்கள் அவற்றைப் படித்துப் பயன் பெற முடியும்.

நோன்பின் சட்டங்கள் முழுத் தொகுப்பு (நூல்)

நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா? குளுகோஸ் (சேலைன்) ஊசி போடலாமா? [...]

ஆறு நோன்பு ஆதாரமற்றதா?

ஆறு நோன்பு ஆதாரமற்றதா?
July 21, 2011
ஆய்வுகள்

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ الْحَارِثِ الْخَزْرَجِيِّ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ أَخُو يَحْيَى بْنِ سَعِيدٍ أَخْبَرَنَا عُمَرُ بْنُ ثَابِتٍ أَخْبَرَنَا [...]

பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா

பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா
July 21, 2011
நோன்பு

ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29ம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாமா?

எம். ஷபீர்

இரண்டு சாட்சிகள் பிறை பார்த்ததாகக் கூறினால் அதை அப்பகுதியினர் ஏற்க வேண்டும் என்பதற்கு ஹதீஸில் ஆதாரம் உள்ளது. ஆனால் அவர்கள் எந்த நேரத்தில் பார்த்ததாகக் கூறினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பொருள் கொள்ளக் கூடாது.

இரவு பத்து மணிக்கு தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினால் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அந்த நேரத்தில் தலைப் பிறையைப் பார்க்க முடியாது.

நண்பகலில் தலைப் பிறையைப் [...]

நோன்பை தாமதமாக திறக்களாமா?

நோன்பை தாமதமாக திறக்களாமா?
July 21, 2011
நோன்பு

நோன்பு நேரங்களில் சூரியன் மறையக் கூடிய நேரத்தை விஞ்ஞானக் கணிப்பு மூலம் அறிந்து கொள்கின்றோம். ஆனால் சில நிமிடங்கள் முன் பின்னாக முரண்பட்டுக் கூறுகின்றனர். இதனால் பேணுதலுக்காக சில நிமிடங்கள் கூடுதலாக்கி நோன்பைத் திறக்கலாமா?

சூரியன் உதயம், சூரியன் மறைவு போன்ற நேரங்கள் தொடர்பாக‌ விஞ்ஞானக் கணிப்பில் எந்த முரண்பாடும் இல்லை. அக்டோபர் 2ம் தேதி காந்தி மண்டபத்தில் இந்த இடத்தில் சூரிய ஒளி வரும் என்று கணித்துள்ளார்கள் என்றால் அந்த இடத்தில் குறிப்பிட்ட நாளில் சூரிய ஒளி வருகின்றது. அந்த அளவுக்குத் துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஊருக்கு ஊர் வேறுபடுமே தவிர ஒரே ஊருக்கு இரண்டு விதமான நேரத்தை யாரும் கணிப்பதில்லை.

حدثنا عبد الله بن يوسف أخبرنا [...]

நாளின் ஆரம்பம் எது? உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா

நாளின் ஆரம்பம் எது?  உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா
July 21, 2011
நோன்பு

பிறையை பல வருடத்திற்கு முன்கூட்டியே கணித்து விடலாம் என்றும், சுபுஹுடைய நேரம் தான் நாளுடைய ஆரம்பம் என்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒற்றுமை கோஷம் கூறும் கூட்டத்தை அவர்கள் குறிவைத்து செயல்படுகிறார்கள். பிறை முன்கூட்டியே தெரிந்து விட்டால் எல்லோரும் ஒரே நாளில் பெருநாளை ஒன்றாகவும் அமைதியாகவும் கொண்டாடலாம் என்கிறார்கள். அதே போல் நபிகள் நாயகத்திற்கு இப்போதுள்ள அறிவியல் ஞானம் இல்லாததால் தான் பிறையைப் பார்த்து நாட்களை முடிவு செய்தார்கள். அவர்கள் எடுக்கும் உதாரணம், நார்வே போன்ற நாட்டைத் தான். அங்கு வருடத்தில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாக இருப்பதால் எப்படி பிறையைக் கணக்கிடுவார்கள்? தயவு செய்து நல்ல ஒரு பதிலை எதிர்பார்க்கிறேன்.

ரஃபீக் நாகர்கோவில்

பதில் :

விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா?

விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா?
July 21, 2011
நோன்பு

கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்’ என்ற ஹதீஸில் சலுகை என்பதற்கு, நோன்பை மீட்ட வேண்டும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறீர்கள். அதற்கான நேரடியான எந்த ஆதாரத்தையும் முன் வைக்கவில்லை. ஆனால் நோன்பை விட்டு விடலாம்; மீட்டத் தேவையில்லை’ என்ற கருத்தில் நபித்தோழர்கள் கூறிய செய்தி தாரகுத்னீ, தப்ரானீ போன்ற நூற்களில் உள்ளது. இந்த விளக்கம் இல்லையென்றால் தங்களின் விளக்கத்தை ஏற்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் மேற்கண்ட ஹதீஸைத் தாங்கள் புரிந்து கொண்டு விளக்கியதை விட நபித்தோழர்களின் கூற்று பொருத்தமான விளக்கமாகத் தோன்றுகிறது. இது குறித்து விளக்கவும்.

ஏ.எம்.எஸ். ஹமீது கல்முனை, இலங்கை

மார்க்கத்தின் [...]

நோன்பாளி இரத்தம் கொடுக்கலாமா?

நோன்பாளி இரத்தம் கொடுக்கலாமா?
July 21, 2011
நோன்பு

நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா? குளுகோஸ் (சே லைன்) ஊசி போடலாமா? :

நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் காலத்திலும் அதற்கடுத்த கால கட்டங்களிலும் இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் வழக்கம் அரபியரிடம் இருந்தது.

தலையின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் துவாரமிட்டு கொம்பு போன்ற கருவியின் மூலம் அதை உறிஞ்சி வெளி யேற்றி வந்தனர். கண்ணாடிக் குவளையைப் பயன்படுத்தியும் இவ்வாறு இரத்தத்தை வெளியேற்றி வந்தனர். இது உடலுக்கு ஆரோக்கியமானது எனவும் நம்பி வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் காலத்தின் இந்த நடைமுறையிலிருந்து வேறு பல சட்டங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا خَالِدٌ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي [...]

நோன்பின் சட்டங்கள் (நூல்)

நோன்பின் சட்டங்கள் (நூல்)
July 21, 2011
நூல்கள்

நோன்பின் சட்டங்கள்.
அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் நோன்பைப் பற்றித் தொகுத்த முழுமையான புத்தகத்தை இங்கு தருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
இஸ்லாத்தின் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. ஆண்டு தோறும் முஸ்லிம் சமுதாயம் இக்கடமையை நிறைவேற்றி வந்தாலும் பலர் நோன்பின் சட்டங்களை முழுமையாக அறியாதவர்களாக உள்ளதை நாம் காண்கிறோம்.

நோன்பை முறித்து விடக் கூடிய காரியங்களைச் செய்து விட்டு, நோன்பாளிகளாகத் தங்களைப் பற்றி நினைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

நோன்பை முறிக்காத காரியங்களை, நோன்பை முறிக்கும் காரியங்கள் என்று நினைத்து, தங்களைத் தாங்களே சிரமப்படுத்திக் கொள்பவர்களும் உள்ளனர்.

நோன்பைக் குறித்துப் பலவிதமான மூட நம்பிக்கைகளும் சமுதாயத்தில் உள்ளன. எனவே நோன்பைப் பற்றி தெளிவான விளக்கத்தை அளிக்கும் நோக்கத்தில் இந்நூல் வெளியிடப்படுகின்றது.

கீழ்க்காணும் [...]

ஷஃபான் 15ம் நாள் நோன்புக்கு ஆதாரம் உண்டா? வழிகெட்டவர்களின் தவறான மொழியாக்கமும், தரங்கெட்ட பத்வாவும்(?).

ஷஃபான் 15ம் நாள் நோன்புக்கு ஆதாரம் உண்டா? வழிகெட்டவர்களின் தவறான மொழியாக்கமும், தரங்கெட்ட பத்வாவும்(?).
July 20, 2011
கட்டுரைகள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜமாத்துல் முஸ்லிமீன் என்ற பெயரில் இலங்கையில் இருக்கும் வழி கெட்ட அமைப்பொன்று ஷஃபான் மாதம் 15ம் நாள் நோன்பு பிடிக்க வேண்டும் என்றும் அதுதான் பராஅத் இரவு என்றும் குறிப்பிட்டு ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டிருந்தார்கள் அந்தத் துண்டுப் பிரசுரத்திற்குறிய பதிலை இங்கு தருகிறோம்.

இதுதான் வழிகெட்ட அமைப்பினர் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தை பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.

ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்கச் சொல்லும் ஒரு ஹதீஸும் முஸ்லிம் நூலில் இல்லை. வித்தியாசமாக எதையாவது சொல்ல வேண்டும் நோய் காரணமாக இவ்வாறு வாதிடுகின்றனர்.

அவர்கள் குறிப்பிடும் மூன்று ஹதீஸ்களிலும் மாதத்தின் இறுதியில் என்று மொழி பெயர்ப்பதற்குப் பதிலாக [...]

ஹெம்மாத்தகமையில் நடை பெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி எம்.ஐ சுலைமான் கலந்து கொண்டார்.

ஹெம்மாத்தகமையில் நடை பெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சி எம்.ஐ சுலைமான் கலந்து கொண்டார்.
April 14, 2011
அறிவிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாத கமை கிளை ஏற்பாடு செய்திருந்த மார்க்க விளக்க நிகழ்சி கடந்த 07.04.2011 அன்று ஹெம்மாத கம மஸ்ஜிதுல் ஹிதாயாவில் நடை பெற்றது. இந்நிகழ்வில் சகோதரர் எம்.ஐ சுலைமான் அவா்கள் அசத்தியம் அழிவுரும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பகிரங்க கேள்வி பதில் நிகழ்சியும் நடை பெற்றது. கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது ஜமாத்தே இஸ்லாமி என்ற அமைப்பினரைப் பற்றி முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டது. அந்தக் கேள்விகளுக்கு குா்ஆன், ஹதீஸில் இருந்து மிகத் தெளிவாக பதில் கொடுக்கப்பட்டதுடன் ஜமாத்தின் அழைப்பு மாத இதழ் ஜமாத் தே இஸ்லாமி தொடர்பாக பொய்யான தகவலை எழுதியிருப்பதாக கேட்கப்பட்ட கேள்வி நேரத்தில் இது தொடர்பாக ஜமாத்தே இஸ்லாமி பகிரங்கமான வழி கேட்டில் இருக்கிறது அவா்கள் [...]

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) சார்பாக இந்த வாரம் (11.03.2011) நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள்.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) சார்பாக இந்த வாரம் (11.03.2011) நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள்.
March 8, 2011
அறிவிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஜும்மா நடக்கும் இடங்களும் பிரச்சாரகர்களும்.

தலைமையகம் :

உரை : சகோதரர் அஜ்மீர் (அமீனி)

மாபோலைக் கிளை (மஸ்ஜிதுல் முத்தகீன்)
உரை :  சகோதரர் ரிஷாப் M.I.Sc
சிலாபம் கிளை (மஸ்ஜிதுன் நூர்)

உரை : சகோதரர் பர்சான் (நளீமி)

பரகஹதெனிய கிளை

உரை : சகோதரர் ரஸான் தவ்ஹீதி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த வாரம் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள்.

07.03.2011 கொழும்பு மாளிகாவத்தை அஸருக்குப் பின் பெண்கள் பயான்

உரை : சகோதரர் ரிஷாப் M.I.Sc

07.03.2011 மானிக்கம் பிட்டிக் கிளை மஃரிபுக்குப் பின்

உரை : சகோதரர் அஜ்மீர் (அமீனி)

08.03.2011 தம்பாளைக் கிளை மஃரிபுக்குப் பின்

உரை : ஸப்வான் தவ்ஹீதி

09.03.2011 தலைமையகம் இஷாவுக்குப் பின்

உரை : சகோதரர் ரஸ்மின் M.I.Sc

11.03.2011 தலைமையகம் இஷாவுக்குப் பின்

உரை : சகோதரர் [...]