விமர்சனங்கள்

தோல்வியை மறைப்பதற்காக அவதூறு பரப்பும் அசத்தியவாதிகள்

April 24, 2012
விமர்சனங்கள்

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் எது? என்ற விவாதத்தில் தோற்ற  சுன்னத் ஜமாஅத் வேடமிட்ட போலித் தப்லீக் ஜமாஅத்தினர் அடுக்கடுக்காக நாம் அவர்களின் மத்ஹபு இஜ்மா – கியாஸ் ஆகியவற்றிலுள்ள ஆபாச அரக்கத்தனங்களை அள்ளிப் போட்டபோது, பதில் சொல்ல முடியாமால் விழி பிதுங்கிய இவர்கள் கேள்வி – பதில் நேரத்திலும் விவாதத்தின் போதும் குர்ஆனில் தாங்களாகவே சில விஷயங்களை சேர்த்துக் கொண்டதாக ஒப்புக் கொண்டனர். மேலும் பதில் சொல்ல முடியால் இழி நிலையையும் அடைந்தனர்.

தற்போது இவர்கள் தங்கள் தோல்வியை மறைப்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத்தினர் குர்ஆனை மறுப்பதாக குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர். இவர்கள் இப்போது பரப்பும் அனைத்துக்கும் முன்னரே பதில் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களின் அவதூறுக்கான பின்வரும் பதிலை [...]

முஜத்தித் வேசம் போடும் முகல்லித் ‘ரிஸ்வான் மதனி’

முஜத்தித் வேசம் போடும் முகல்லித் ‘ரிஸ்வான் மதனி’
April 23, 2012
விமர்சனங்கள்

அபூ கப்பாப்

எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி என்பவர் பலவேசத்தில் முஜ்தஹிதுகள் பற்றி ஒரு கட்டுரை என்று உளறிக் கொட்டியிருந்தார். பண்பற்ற பலவேசத்தினரும் பகுத்தறிவின்றி அதைப் பதிவேற்றியிருந்தனர். அனைத்து சாக்கடைகளின் களஞ்சியமாகப் பயன்பட்டு வரும் எந்தக் கொள்கையும் இல்லாத பலவேசம்டொட்கொம் எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனியின் இந்த உளரலையும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளது.

மூளையற்ற மூர்க்கத்தனம்தான் மார்க்கம் என்று நினைக்கும் உளரல் உளநோயாளிகளுக்கு மறுப்பளிக்க முன்னர் இஜ்திஹாத் பற்றி வாய்திறக்கவாவது இவர்களுக்கு நாதியிருக்கிறதா? என்பதை முதலில் பார்த்துவிட்டு இவர் என்ன உளரியுள்ளார் என்பதை நோக்குவோம்.

“அவ்விரண்டிலும் காணப்படாத அம்சங்களுக்கான தீரர்வை அவை இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்பட்ட பெரும்பாண்மை அறிஞர்களின் அங்கீககாரத்தைப் பெற்ற இஜ்மாவின் அடிப்படையிலும், கியாஸ் என்ற அணுமான விளக்கத்தின் அடிப்படையிலும் தமது [...]

தவ்ஹீத் போர்வையில் இணை வைப்பு

தவ்ஹீத் போர்வையில் இணை வைப்பு
March 24, 2012
கட்டுரைகள்

எஸ். அப்பாஸ் அலீ MISc

நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் பலரிடம் இஸ்லாம் குறித்து தவறான நம்பிக்கைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக இஸ்லாத்தின் அடிப்படை விஷயத்திலும் இவர்கள் தவறான நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.

இலங்கை மற்றும் தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் வருவதற்கு முன் குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற சரியான நிலைபாட்டை மக்கள் அறியாது இருந்தனர். இன்றைக்கும் பலருடைய நிலை அவ்வாறே உள்ளது.

முன்னோர்கள், பெரியார்கள், இமாம்கள் எதைக் கூறினாலும் அக்கூற்றுக்கு ஆதாரம் இருக்கின்றதா? இல்லையா? என்று சிந்திக்கும் மனநிலை அன்றைக்கு மக்களிடம் இல்லை.

இமாம்கள் கூறுவதையே ஆதாரமாக எடுத்துக் கொண்டு அவர்களைக் கண்மூடி பின்பற்றி வந்தனர். மத்ஹபு மாயவலையில் சிக்கி இருந்தனர்.

குர்ஆன், ஹதீஸ் [...]

பரிகசிக்கப்படும் பால்குடிச் சட்டம்

பரிகசிக்கப்படும் பால்குடிச் சட்டம்
March 22, 2012
விமர்சனங்கள்

பால்குடிச் சட்டம் குறித்த ஸாலிம் ஹதீஸ் தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க மறுத்து விரண்டு ஓடும் சிலர் தொடர்ந்து விமர்சித்து வருவதால் பால் குடி சம்பந்தமாக சவூதியில் வெளியிடப்பட்ட பத்வாவினால் ஏற்பட்ட விளைவினைப் பற்றி ஏகத்துவம் ஆசிரியர் அறிஞர் ஷம்சுல் லுஹா அவர்கள் தீட்டிய ஆசிரியர் தலையங்கத்தை இந்தச் சமயத்தில் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் வாசகர்களின் பார்வைக்குத் தருகிறோம். ஸாலிம் ஹதீஸ் தொடர்பான மறுப்பை தனிக்கட்டுரையில் காண்க. ஆசிரியர்

சவூதிப் பெண்கள் நீண்ட நாட்களாக இதர வளைகுடா நாடுகளைப் போன்று கார் ஓட்டுவதற்கு அனுமதி தர வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். அதற்கு அங்குள்ள ஆலிம்களில் ஒரு சாரார் கூடாது என்று மறுத்து வருகின்றனர். அது பல்வேறு [...]

கண்ட பாவனையில் கொண்டை முடிக்கும் இஸ்மாயில் ஸலபி

கண்ட பாவனையில் கொண்டை முடிக்கும் இஸ்மாயில் ஸலபி
March 15, 2012
விமர்சனங்கள்

தக்க ஆதாரங்களுடனும் நியாயமான காரணங்களுடனும் அல்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்ற ஆய்வுக்கு, கண்ட பாவனையில் கொண்டை முடிக்கும் இஸ்மாயில் ஸலபி என்பவர் சில வருடங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி மெகா சீரியல் போன்று உப்புச் சப்பற்ற உளறல் கட்டுரை ஒன்றை, பலவேசத்தில் மறுப்பு என்ற பெயரில் எழுதி அறிஞர் பீஜேவிடம் தக்க பதிலடியையும் வாங்கிக் கொண்டார்.

அதனால் கொஞ்சக் காலம் ஆடி அடங்கியிருந்த இந்த வேதாளம் மீண்டும்  தற்போது ஐ.எஸ்.ஹமீத் என்ற பெயரில் முருங்கை மரத்தில் ஏறியிருக்கிறது.

அல்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் என நாம் கூறுவதை ஒருவர் மறுத்து கட்டுரை எழுதுவதாக இருந்தால், அது குறித்து நாம் எடுத்து வைக்கும் அனைத்து ஆதாரங்களுக்கும் பதில் சொல்ல [...]

விவாதத்திலிருந்து பின் வாங்கியது யார் ?

விவாதத்திலிருந்து பின் வாங்கியது யார் ?
March 10, 2012
விமர்சனங்கள்

அர்ஹம் மவ்லவியின் நோட்டீசுக்கு வரிக்கு வரி பதில்

சகோதரர் அர்ஹம் வெளியிட்ட நோட்டீசுக்கு வரிக்கு வரி பதிலளிக்கும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது. விவாத ஒப்பந்தத்தை முறித்ததும் ரத்துச் செய்ததும் யார் என்பதை மிகத் தெளிவாக இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
இதன் சீ.டீயை ஜமாஅத் தலைமையகத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

பி.ஜெ யை பின்பற்றினாலும் தக்லீதே!

பி.ஜெ யை பின்பற்றினாலும் தக்லீதே!
March 4, 2012
விமர்சனங்கள்

ஆம் குர்ஆன், சுன்னா என்று பேசுபவர்களாக இருந்தாலோ அல்லது அதற்கு மாற்றமானவர்களாக இருந்தாலோ அனைவராலும் நம்மைப் பார்த்து வைக்கப்படும் விமர்சனங்களில் இது முக்கிய விமர்சனமாகும்.

இவர்கள் குர்ஆன், சுன்னா என்று பேசினாலும் பி.ஜெ எதைச் சொன்னாலும் அதையும் ஏற்று பின்பற்றுவார்கள். அவர் எதைச் சொல்கிறாரோ அதுதான் மார்க்கத்தின் தீர்ப்பு என்று இவர்கள் பிரச்சாரம் செய்வார்கள். என்பதுதான் நமக்கு எதிராக மற்றவர்கள் வைக்கும் முக்கியமான விமர்சனம்.

இந்த விமர்சனத்திற்கு பதில் சொல்வதற்காகத் தான் ஆய்வின் இறுதிப் பகுதியை “பி.ஜெ யைப் பின்பற்றுவதும் வழிகேடே!“ என்று தலைப்பிட்டு எழுதுகின்றோம்.

இந்தத் தலைப்பை ஆய்வு செய்வதற்கு முன் பி.ஜெ பற்றிய சில செய்திகளையும் நாம் அறிந்து கொள்ள [...]

தவ்ஹீத் ஜமாஅத் மாற்று மேடைகளை தவிர்ப்பது ஏன்?

தவ்ஹீத் ஜமாஅத் மாற்று மேடைகளை  தவிர்ப்பது ஏன்?
March 3, 2012
விமர்சனங்கள்

ஆர். ரஹ்மத்துல்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கெதிராக வைக்கப்படும் குற்றசாட்டுக்களில் பிரதான குற்றசாட்டாகப் பேசப்படுவது, இந்த அமைப்பினர் பிற இயக்கத்தின் மேடைகளில் ஒற்றுமையுடன் பிரச்சாரம் செய்வதில்லை என்பதாகும். இதற்கான விளக்கத்தை ஒவ்வொரு ஏகத்துவவாதியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியம்.

ஏனெனில் ஷைத்தான் மனிதனை ஒரே வடிவத்தில் தான் வழிகெடுப்பான் என நினைக்கக்கூடாது. மாறாக ஒருவனை வழிகெடுக்க ஷைத்தான் எத்தகைய யுக்தியையும் செய்யத் தயங்க மாட்டான்.

உதாரணத்திற்கு, வரதட்சணை வாங்கக்கூடாது என்பதில் நாம் உறுதியோடு இருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். இந்தத் தருணத்தில் நம்மை வழிகெடுக்க ஷைத்தான் வேறு வகையான ஆசை வார்த்தைகளைக் கூறுவான்.

நாமாகக் கேட்டால் தானே தவறு, அவர்கள் விரும்பிக் கொடுத்தால் தவறா? நாம் [...]

ஸஹபாக்களின் கண்ணியமும் பின்பற்றலும் இரண்டும் இருவேறுபட்டவை

ஸஹபாக்களின் கண்ணியமும் பின்பற்றலும்  இரண்டும் இருவேறுபட்டவை
March 1, 2012
விமர்சனங்கள்

நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர்.அத்தகையோர் தமது அறியாமையால் இப்படிக் கூறுகின்றனர் என்பது அவர்களின் வாதங்களைப் பார்க்கும் போது தெரிகிறது. நபித் தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்பது அவர்களை அவமதிப்பதாக ஆகாது

திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி காட்டுதலும் தவிர வேறு எதுவும் இலாத்தின் மூல ஆதாரங்களில்லை என்பதை நாம் வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகிறோம்.

அல்லாஹ்வின் கூற்றையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் தவிர எவரது நடவடிக்கைகளையும் மார்க்க ஆதாரமாகக் கொள்ளக் கூடாது எனவும், எவ்வளவு பெரிய மேதையானாலும் நபித் தோழர்களேயானாலும் அவர்களின் கூற்றுகளும், செயல்களும் கூட மார்க்க ஆதாரமாக முடியாது எனவும் [...]

ஸிஹ்ர் ஓர் ஆய்வு தொடர் – 2

ஸிஹ்ர் ஓர் ஆய்வு தொடர் – 2
February 29, 2012
ஆய்வுகள்

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்பது குறித்து நாம் விரிவான விளக்கம் அளித்து பல கேள்விகளையும் கேட்டிருந்தோம். அதில் முதலாவதாக நாம் கேட்ட பால் குடி தொடர்பான ஹதீஸ் பற்றி இஸ்மாயீல் ஸலஃபி இது வரை வாய் திறக்கவில்லை. இதற்கு அவர் அளிக்கும் பதிலில் எல்லா முடிச்சுக்களும் அவிழ்ந்து விடும் என்ற போதும் பதில் சொன்னால் மாட்டிக் கொள்வேன் என்ற (உமர் அலி) மனநிலையில் அவர் இருப்பது தெரிகிறது.

ஆயினும் நானும் பதில் சொன்னேன் என்று காட்டிக் கொள்வதற்காக மலகுல் மவ்த்தை மூஸா நபி கன்னத்தில் அறைந்த ஹதீஸ் குறித்து சில தமாஷான பதில்களைக் கூறியுள்ளார். நாம் கேட்ட அனைத்துக்கும் பதில் வந்த பின் மொத்தமாக ஒரே [...]

ஸிஹ்ர் ஓர் ஆய்வு

ஸிஹ்ர் ஓர் ஆய்வு
February 26, 2012
ஆய்வுகள்

அல் குர்ஆனும் சுன்னாவும் முரண்படுமா என்று “ஞான சூனியங்கள் ” அண்மைக் காலமாக கேள்வி எழுப்பி வருகின்றன. அல்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்தது. அதற்கு விளக்கவுரையாகத் தான் ஹதீஸ்கள் உள்ளன.
எனவே அல்குர்ஆனுக்கு முரணாக உள்ளவைகள் ஹதீஸ்களாக இருக்க முடியாது. ஹதீஸ்கள் என்ற பெயரில் சில பொய்களும் கட்டுக் கதைகளும் இடைச் செறுகள் செய்யப்பட்டன. அந்த தொடரில் நபி (ஸல்) அவர்கள் ஆறு மாதங்கள் பைத்தியமாக இருந்ததாக சில இட்டுக்கட்டப்பட்ட செய்திகளும் புகுத்தப் பட்டுள்ளன.
சிந்திக்காத சிந்தனைத் திரணற்ற சிலர் நபியையும் கேவலப்படுத்தி வருகின்றர். எனவே இது தொடர்பான தெளிவை வளங்குவதற்காக இத்தொடர் வெளியிடப்படுகிறது.

ஸிஹ்ர் ஓர் ஆய்வு- தொடர் 1

மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதப் புகுந்த [...]