என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27:46). மேற்கண்ட வார்த்தைகள் ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது கடைசியாகப் புலம்பிய வார்த்தைகள். இதே வார்த்தைகளைத் தான் “திருக்குர்ஆன் இறைவேதமே!” என்ற தலைப்பில் விவாதிக்க வந்த கிறித்தவ போதகர்கள் விவாதத்தின் இறுதியில் சொல்லி புலம்பிக் கொண்டு சென்றிருப்பார்கள் என்று நினைக்கின்றோம்.
அந்த அளவிற்கு அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் “திருக்குர்ஆன் இறைவேதமே!”
என்ற தலைப்பில் கிறித்தவ போதகர்களுடனான விவாதம் சிறப்பாக நடந்து முடிந்தது.
கடந்த 28, மற்றும் 29 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையிலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைமயகத்தில் வைத்து நடைபெற்ற விவாதத்தில் பீஜே தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுவினர் கிறித்தவ போதகர் ஜெர்ரி தாமஸ் குழுவினரோடு விவாதித்தனர். தரப்புக்கு தலா 25 பார்வையாளர்கள் [...]
விவாதங்கள்
“திருக் குர்ஆன் இறைவேதமே!” அடுக்கடுக்கான சான்றுகளை வைத்து நிரூபித்த டிஎன் டிஜே! திக்குமுக்காடிய கிறித்தவ போதகர்கள்!!
ஹெம்மாதகம விவாதத்தில் அசத்தியவாதிகளின் அடித்தளம் ஆட்டம் கண்டுவிட்டது
எம்.ஏ.ஹபீழ் ஸலபி
இஸ்லாம் ஒரு பரிபூரணமான மார்க்கம். அதன் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆனும் அஸ்ஸூன்னாவும் மட்டுமே மனித வாழ்க்ககைக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் உட்பொதிந்துள்ளது. மனிதன் மறுமை நாள் வரை எதிர் நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வை அவை இரண்டும் தன்னகத்தேகொண்டுளளன. அவற்றிலிருந்து எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியும் என்பதை 2012 ஏப்ரல் சனி 21 ஞயிறு 22 ஆகிய இரண்டு தினங்களில் நடந்த விவாதத்தில் மீண்டும் ஒரு முறை தவ்ஹீத் ஜமாஅத் தெட்டத் தெளிவாக நிரூபித்துள்ளது.
இந்த விவாதம் இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் எது? என்ற கருப்பொருளில ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கத்திற்குமிடையில் ஹெம்மாதகம அல் அஸ்ஹர் நவோதய பாடசாலை கேட்போர் கூடத்தில் அமைதியான முறையில் [...]
தோல்வியை மறைப்பதற்காக அவதூறு பரப்பும் அசத்தியவாதிகள்
இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் எது? என்ற விவாதத்தில் தோற்ற சுன்னத் ஜமாஅத் வேடமிட்ட போலித் தப்லீக் ஜமாஅத்தினர் அடுக்கடுக்காக நாம் அவர்களின் மத்ஹபு இஜ்மா – கியாஸ் ஆகியவற்றிலுள்ள ஆபாச அரக்கத்தனங்களை அள்ளிப் போட்டபோது, பதில் சொல்ல முடியாமால் விழி பிதுங்கிய இவர்கள் கேள்வி – பதில் நேரத்திலும் விவாதத்தின் போதும் குர்ஆனில் தாங்களாகவே சில விஷயங்களை சேர்த்துக் கொண்டதாக ஒப்புக் கொண்டனர். மேலும் பதில் சொல்ல முடியால் இழி நிலையையும் அடைந்தனர்.
தற்போது இவர்கள் தங்கள் தோல்வியை மறைப்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத்தினர் குர்ஆனை மறுப்பதாக குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர். இவர்கள் இப்போது பரப்பும் அனைத்துக்கும் முன்னரே பதில் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களின் அவதூறுக்கான பின்வரும் பதிலை [...]
நன்றி! நன்றி!!
தவ்ஹீத் கொள்கையை எதிர்ப்போரிடம் தஃவாவை முன்வைக்கும் மிகச் சிறந்த ஊடகமான விவாதக்களம், தவ்ஹீத் ஜமாஅத்தின் தஃவா வரலாற்றில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது என்பதை வரலாற்று மாணவர்கள் நன்கு அறிவர். அந்தவகையில், இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் எது? என்ற கருப்பொருளில் 2012 ஏப்ரல் சனி 21 ஞயிறு 22 ஆகிய இரண்டு தினங்களில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கத்திற்குமிடையில் நடந்த இந்த விவாதமும் இலங்கை தஃவா வரலாற்றில் ஒரு முக்கிய வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது.
www.onlinepj.comல் இரண்டு நாள் விவாதமும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இணையதளம் மூலம் தமிழ்க்கூறும் நல்லுலகில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த விவாதத்தைப் பார்த்தனர். ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 30க்கும் மேற்பட்ட கிளைகளில் [...]
இலங்கை தஃவா வரலாற்றில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவாதம்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் தப்லீக் ஜமாஅத் சார்புள்ள இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கத்திற்கும் இடையில் “இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் எவை?” என்ற தலைப்பில் ஹெம்மாதகமை அல் அஸ்ஹர் நவோதய பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று (21-04-2012) நடை பெற்றது. இரண்டு நாள் விவாதத்தின் முதல் நாள் விவாதம் இன்று விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இன்ஷா அல்லாஹ் நாளையும் விவாதம் தொடரவுள்ளது. நாளை காலை 9 மணி முதல் விவாதம் தொடரும்.இரவு 7 மணி முதல் 9 மணிவரை கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது. இந்த விவாதம் onlinepj.com ல் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹெம்மாதகமை விவாதத்தில் விவாதிப்போர் பட்டியல்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் ஹெம்மாதகமை இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கத்திற்கும் இடையில் எதிர்வரும் 21,22ம் திகதிகளில் “இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் எவை?” என்ற தலைப்பில் ஹெம்மாதகமை அல் அஸ்ஹர் நவோதய பாடசாலை கேட்போர் கூடத்தில் பகிரங்க விவாதம் நடாத்துவதாக இரு சாராருக்குமிடையில் நடைபெற்ற விவாத ஒப்பந்தத்தின் போது ஏகமானதாக முடிவுசெய்யப்பட்டது.
அதன் போது விவாதிப்போர் பட்டியலை ஏப்பரல் மாதம் முதலாம் திகதி இரு சாராரும் விவாத ஏற்பாட்டுக் குழுவிடம் ஒப்படைப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது. அதன்பிரகாரம் விவாதத்திற்காக ஹெம்மாதகமை இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கம் சார்பாக விவாதிப்பவர்களின் பட்டியலை தந்துள்ளனர். விவாதமொன்றுக்கு முன்னரே விவாதிப்பவர்களை ஏன் தெரியப்படுத்த வேண்டுமென்தை அறிந்த இவர்கள் அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் விவாதிப்போரை மொட்டையாக அறிவித்துள்ளனர். ஒப்பந்தத்தில் [...]
சூனியம் குறித்து அன்ஸார் மவ்லவியின் வாதங்களுக்கு வரிக்கு வரி பதில்
சூனியம் என்பது ஏமாற்றும் வித்தை தான். அதன் மூலம் யாரும் யாருக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்பதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவையும் ஆதாரமாகக் கொள்ளத் தகாததுமாகும் என்பதும் அல்லாஹ்வைப் போல் எந்த மனிதனாலும் செயல்பட முடியும் என்று நம்புவது பகிரங்க இணை கற்பித்தலாகும் என்பதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையாக உள்ளது. இது குறித்து தொடர்ந்து அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டி நிரூபித்து வருகிறோம். ஆனால் இதை எதிர்க்கக் கூடியவர்கள் நம்முடைய அனைத்து வாதங்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் ஒன்றிரண்டு வாதங்களுக்கு மட்டும் பதில் என்ற பெயரில் அர்த்தமற்ற வாதங்களை எடுத்து வைக்கின்றனர். அந்த வரிசையில் அக்கரைப்பற்று அன்ஸார் [...]
விவாதத்திலிருந்து பின் வாங்கியது யார் ?
அர்ஹம் மவ்லவியின் நோட்டீசுக்கு வரிக்கு வரி பதில்
சகோதரர் அர்ஹம் வெளியிட்ட நோட்டீசுக்கு வரிக்கு வரி பதிலளிக்கும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது. விவாத ஒப்பந்தத்தை முறித்ததும் ரத்துச் செய்ததும் யார் என்பதை மிகத் தெளிவாக இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
இதன் சீ.டீயை ஜமாஅத் தலைமையகத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
சகோதரர் ஸஹ்ரான் அவர்களின் 4வது கடிதத்திற்கான பதில்.
சகோதரர் ஸஹ்ரான் அவர்களுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையில் விவாதம் தொடர்பாக தொடர் கடிதப் பரிமாற்றங்கள் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே! அந்த வகையில் நமது 3வது கடிதத்திற்கு மவ்லவி ஸஹ்ரான் அவர்கள் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அக்கடிதத்தையும் அதற்கு நமது ஜமாத் சார்பாக அனுப்பப்பட்ட பதில் கடிதத்தையும் இங்கு வெளியிடுகிறோம்.
மவ்லவி ஸஹ்ரான் அவர்கள் அனுப்பிய கடிதம்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பதில் கடிதம்.
ஜெர்ரி குருப், விவாதத்திலிருந்து பின் வாங்கி ஓட்டம் – நடந்தது என்ன?
இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.
அல்குர்ஆன் 74:49,50,51
Download Video
என்ற இறைவசனத்தை மெய்ப்பிக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துடன் முதல் தலைப்பில் விவாதம் செய்த கிறிஸ்தவ அறிஞர்கள், இரண்டாம் தலைப்பில் விவாதத்திற்கு வராமல் ஓட்டமெடுத்த நிகழ்வு கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஜனவரி 21 மற்றும் 22 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் சென்னை தி.நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கத்தில் பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கும், ஜெர்ரி தாமஸ் குழுவினருக்கும் இடையே அனல் பறந்த விவாதம் நடைபெற்றதை சென்ற வார [...]
வரலாற்று சிறப்புமிக்க ஒரு விவாதம் (SAN vs TNTJ)
வரலாற்று சிறப்புமிக்க ஒரு விவாதம் இனிதே நிறைவேறியுள்ளது. கிறிஸ்தவர்களுடனான இந்த விவாதம் பல வகையில் முக்கியதுவம் வாய்ந்ததாகும்.
மற்ற கிறிஸ்தவ பாதிரிமார்களுடன் நடைபெறும் விவாதம் போலல்லாமல், இந்த SAN அமைப்பினர் என்று சொல்லப்படக்கூடியவர்கள் பல வகையில் வேறுபட்டு நிற்கின்றனர்.
பொதுவாக, கிறிஸ்தவர்கள் தங்கள் கொள்கை தான் சரி என்றும், பிறரது கொள்கைகள் தவறு என்றும் பொது மேடைகளில் அதிகமாக பிரச்சாரங்கள் செய்கிற வழக்கம் உடையவர்களல்லர். தாங்கள் உண்டு, தங்கள் மார்க்கம் உண்டு என்று இருப்பவர்கள் தான்.
ஆனால், இந்த SAN அமைப்பினரும், அதன் தலைவரான திரு. ஜெர்ரி தாமஸ் அவர்களும் தங்கள் மார்க்கத்தை பிரச்சாரம் செய்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், பிற மதங்களை, அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தை கடுமையாக விமர்சித்தும் சாடியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். [...]















