வீடியோக்கள்.

தப்லீக் ஜமாஅத்தினருடன் நடைபெற்ற விவாதம் (வீடியோ)

May 12, 2012
வீடியோக்கள்.

அல்லாவின் பேருதவியால் கடந்த ஏப்ரல் 21,22ம் தினங்களில் தப்லீக் ஜமாஅத்தினருடன் ‘இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் என்ன?’ எனும் தலைப்பில் பகிரங்க விவாதம் நடைபெற்றதும் அங்கே அவர்கள் அசிங்கங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் வெட்கித்து தலை குனிந்ததும் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
காரசாரமாக நடைபெற்ற அவ்விவாதத்தின் வீடியோவை இங்கு வெளியிடுகின்றோம்.

தப்லீக் விவாதம்

தம்புள்ளை பள்ளிவாசல் இடிப்பும் முஸ்லிம்களின் பொறுப்பும்

தம்புள்ளை பள்ளிவாசல் இடிப்பும் முஸ்லிம்களின் பொறுப்பும்
May 3, 2012
வீடியோக்கள்.

சிங்களக் காவிக் கரசேவர்களால் சேதப்படுத்தப்பட்டு இடித்து நொறுக்க திட்டமிடப்பட்ட தம்புள்ள அல் ஹைராத் பள்ளிவாசல் சம்பவத்தின் பின்னணி என்ன?
இப்பிரச்சினைக்கு இஸ்லாம் சொல்லும் தீர்வு என்ன?
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு என்ன?
என்பவற்றை தெளிவு படுத்தும் ஜமாஅத்தின் துணைத் தலைவர் சகோதரர் பர்ஸான் அவர்களின் ஜும்ஆப் பேருரை.

சூனியம் குறித்து அன்ஸார் மவ்லவியின் வாதங்களுக்கு வரிக்கு வரி பதில்

சூனியம் குறித்து அன்ஸார் மவ்லவியின் வாதங்களுக்கு வரிக்கு வரி பதில்
April 2, 2012
விவாதங்கள்

சூனியம் என்பது ஏமாற்றும் வித்தை தான். அதன் மூலம் யாரும் யாருக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்பதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவையும் ஆதாரமாகக் கொள்ளத் தகாததுமாகும் என்பதும் அல்லாஹ்வைப் போல் எந்த மனிதனாலும் செயல்பட முடியும் என்று நம்புவது பகிரங்க இணை கற்பித்தலாகும் என்பதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையாக உள்ளது. இது குறித்து  தொடர்ந்து அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டி நிரூபித்து வருகிறோம். ஆனால் இதை எதிர்க்கக் கூடியவர்கள் நம்முடைய அனைத்து வாதங்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் ஒன்றிரண்டு வாதங்களுக்கு மட்டும் பதில் என்ற பெயரில் அர்த்தமற்ற வாதங்களை எடுத்து வைக்கின்றனர். அந்த வரிசையில் அக்கரைப்பற்று அன்ஸார் [...]

விவாதத்திலிருந்து பின் வாங்கியது யார் ?

விவாதத்திலிருந்து பின் வாங்கியது யார் ?
March 10, 2012
விமர்சனங்கள்

அர்ஹம் மவ்லவியின் நோட்டீசுக்கு வரிக்கு வரி பதில்

சகோதரர் அர்ஹம் வெளியிட்ட நோட்டீசுக்கு வரிக்கு வரி பதிலளிக்கும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது. விவாத ஒப்பந்தத்தை முறித்ததும் ரத்துச் செய்ததும் யார் என்பதை மிகத் தெளிவாக இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
இதன் சீ.டீயை ஜமாஅத் தலைமையகத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

மீண்டும் அர்ஹம் மவ்லவியுடன் நடந்த விவாத ஒப்பந்தம்.

மீண்டும் அர்ஹம் மவ்லவியுடன் நடந்த விவாத ஒப்பந்தம்.
January 12, 2012
விவாதங்கள்

நீங்களே முடிவு செய்யுங்கள்.

ஒரே நபருடன் இரண்டு விவாத ஒப்பந்தங்கள் ஏன்?

ஏற்கனவே நடந்த விவாத ஒப்பந்தம் இரத்தானதற்கு காரணம் யார்?

மீண்டும் போடப்பட்ட ஒப்பந்தப்படி விவாதம் நடத்துவதற்கான நிபந்தனைகள் என்ன?

அர்ஹம் மவ்லவியின் திருகுதாளங்கள் அவர் முன்னாலே பட்டியலிடப்படும் காட்சி.

தான் கொள்கையில்லாதவன் என தானே ஒப்புக் கொள்ளும் காட்சிகள்.

“தன்மானத்திற்காகத் தான் விவாதிக்கிறேன். கொள்கையை நிலை நாட்டுவதற்காக அல்ல”  என தானே சொல்லும் காட்சி.

முன்னுக்குப் பின் முரனாகப் பேசி மாட்டிக் கொள்ளும் நிமிடங்கள்.

தான் நம்பியவர்கள் தன்னைக் கைவிட்ட கதை.

இது போன்ற பல செய்திகளை உள்ளடக்கிய விவாத ஒப்பந்த வீடியோவை வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறோம்.

அர்ஹம் மவ்லவியுடன் SLTJ யின் விவாத ஒப்பந்தம் வீடியோ பதிவு வெளியீடு.

அர்ஹம் மவ்லவியுடன் SLTJ யின் விவாத ஒப்பந்தம் வீடியோ பதிவு வெளியீடு.
October 20, 2011
விவாதங்கள்

அர்ஹம் மவ்லவியுடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக கடந்த 01.10.2011 அன்று மாபோலையில் வைத்து 2 தலைப்புகளில் விவாத ஒப்பந்தம் போடப்பட்டது.  அந்த ஒப்பந்தத்தின் நகல் பிரதிகளை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

விவாத ஒப்பந்தத்தின் வீடியோ பதிவையும் இங்கு வெளியிடுகிறோம்.

 

அனுராதபுரம், கலாவெவயில் நடந்தது என்ன? (வீடியோ)

அனுராதபுரம், கலாவெவயில் நடந்தது என்ன? (வீடியோ)
October 11, 2011
விவாதங்கள்

கடந்த 17.09.2011 சனிக் கிழமை அன்று அனுராதபுர மாவட்டம் கலாவெவ என்ற ஊரில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக நடத்தப்பட்ட இஸ்லாமியப் பிரச்சார நிகழ்ச்சியில் பகிரங்க கேள்வி பதில் நடந்து கொண்டிருந்த நேரம் பித்அத்தை ஆதரிக்கக் கூடியவர்கள் நிகழ்ச்சியைக் கெடுக்கும் விதமாக கூச்சலிட்டதையும், கேள்வி கேட்க்கவென வந்து கடைசியில் விவாதிக்க முடியாது என்று சொல்லி ஓடி ஒழிந்ததையும் அனுராதபுரம், கலாவெவயில் நடந்தது என்ன? விவாதத்திலிருந்து பின்வாங்கிய பித்அத்வாதிகள். என்ற நமது ஆக்கத்தில் நாம் தெளிவுபடுத்தியிருந்தோம்.
அந்நிகழ்ச்சியின் கேள்வி பதில் நிகழ்வின் வீடியோ காட்சியை இங்கு வெளியிடுகிறோம்.

SLTJ யின் சமுதாயப் பணிக்கு அள்ளித் தாருங்கள்.

SLTJ யின் சமுதாயப் பணிக்கு அள்ளித் தாருங்கள்.
August 25, 2011
அறிவிப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நாடு முழுவதும் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளை மிகவும் வீரியமாக செயல்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே!

ஜமாத்தின் சேவைகள் தொய்வின்றித் தொடர உங்கள் உதவிகளை அள்ளித் தாருங்கள். இறைவனின் அருளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் ஸக்காத் மற்றும் நன்கொடைகளை அனுப்ப வேண்டிய முகவெரி.

SRI LANKA THAWHEED JAMATH (SLTJ)

HATTON NATIONAL BANK, A/C  NO : 108010104971

MARADHANA BRANCH, COLOMBO – 10

 

 

 

ரமழான் பற்றிய கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பு.

ரமழான் பற்றிய கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பு.
July 22, 2011
நோன்பு

புனிதமிக்க ரமழான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

திருமறைக் குர்ஆன் இறக்கியருளப் பட்ட இம் மாதத்தில் அதிகமான நன்மைகளை செய்யவதோடு அதிகமதிகம் பாவ மண்ணி்ப்பையும் இறைவனிடம் நாம் கேட்க்க வேண்டும்.

ஆயிரம் மாதங்களைவிட சிறப்பான லைலதுல் கத்ர் இரவும் இம்மாதத்தில் தான் நம்மைத் தாண்டிச் செல்கிறது. அப்படிப்பட்ட சிறப்பான மாதத்தில் செய்ய வேண்டிய காரியங்கள், செய்யக் கூடாதவைகள் போன்றவற்றைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ரமழான் பற்றிய ஒரு தொகுப்பை இங்கு நாம் வெளியிடுகிறோம்.

தலைப்பைக் க்லிக் செய்வதின் மூலம் நீங்கள் அவற்றைப் படித்துப் பயன் பெற முடியும்.

நோன்பின் சட்டங்கள் முழுத் தொகுப்பு (நூல்)

நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா? குளுகோஸ் (சேலைன்) ஊசி போடலாமா? [...]

நோன்பின் சிறப்புகள்.

நோன்பின் சிறப்புகள்.
July 21, 2011
வீடியோக்கள்.

தமிழுலகறிந்த சிறந்த பேச்சாளரும், எழுத்தாளரும், மார்க்க ஆய்வாளருமான அறிஞர் சகோதரர் பி.ஜெ அவர்கள் நோன்பின் சிறப்பைப் பற்றிய ஆற்றிய உரையை இங்கு தருகிறோம்.

திருமறைக் குர்ஆன் இறங்கிய சிறப்பான மாதமாகிய ரமழானில் மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும் என்ற கட்டளை இறைவனால் இடப்பட்டிருக்கிறது.

அப்படிப்பட்ட சிறப்பான மாதத்தின் தூய்மையான செய்திகளை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் நாம் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

தமிழ் பேசும் மக்கள் எழிமையாக விளங்கிக் கொள்ளும் வகையில் விளக்கம் தருகிறார் பி.ஜெ (மாநிலத் தலைவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்)

கொள்கை எழுச்சி மாநாட்டு கேள்வி பதில் நிகழ்ச்சி தொகுப்பு.

கொள்கை எழுச்சி மாநாட்டு கேள்வி பதில் நிகழ்ச்சி தொகுப்பு.
June 21, 2011
வீடியோக்கள்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் கடந்த ஏப்ரல் நான்காம் தேதி நடத்தப்பட்ட தவ்ஹீத் எழுச்சி மாநாட்டில் நடை பெற்ற பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சியின் தொகுப்பு – இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் உயர் நிலைக் குழு உறுப்பினரும் பிரபல எழுத்தாளருமான சகோதரர் எம்.ஐ. சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் கொடுத்தார்.