பறகஹதெனியவில் ஜும்ஆவை நிறுத்த அராஜகம் செய்யும் அசத்தியக் கும்பல்

பறகஹதெனியவில் ஜும்ஆவை நிறுத்த அராஜகம் செய்யும் அசத்தியக் கும்பல்
May 8, 2012
பிரச்சினைகள்

இலங்கையில் தவ்ஹீத் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்ட இடங்களில் முக்கிய இடமாக பறகஹதெனிய திகழ்கிறது. ஆனால்,இ இன்று இந்த பெருமையை சிதைக்கும் களமாக அது மாறியுள்ளது.
தவ்ஹீத்வாதிகள் என்று தங்களைப் போற்றிக் கொள்ளும் இவர்களில் பலருக்கு தவ்ஹீத் என்றால் என்னவென்றே தெரியாது. அதனால் தான் ஏகத்துவத்தை தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அன்று தவ்ஹீத் பிரச்சாரம் எப்படி ரவுடிகளாலும் அரசில்வாதிகளாலும் தடுக்கப்பட்தோ அதேபோல் இன்று போலித் தவ்ஹீத்வாதிகளால் தடுக்கப்டுகிறது.
“இஸ்லம் அந்நியமான நிலையில் தோன்றியது. அது மீண்டும் அந்நிய நிலைக்குச் செல்லும். அதை சீர் செய்வோர் மீது சுபசோபனம் உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த நபிமொழி இன்றைய நிலையை மிகவும் தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது.
இன்று தவ்ஹீத் என்ற போர்வையில் சில போலி இயக்கங்கள் உள்ளன. [...]

தம்புள்ள பள்ளி இடிப்பும் கோடாரிக் காம்பாய் மாறிப்போன முஸ்லிம் தலைமைகளும்.!

தம்புள்ள பள்ளி இடிப்பும் கோடாரிக் காம்பாய் மாறிப்போன முஸ்லிம் தலைமைகளும்.!
May 7, 2012
செய்திகள்

“மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும்இ ஆலயங்களும் வழிபாட்டுத்தலங்களும் அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.” (அல்குர்ஆன் 22 : 40)

கடந்த 20,04,2012 ஆம் திகதி இலங்கை முஸ்லிம்களின் உணர்வுகள் மொத்தமாய் எரிமலையாக்கப்பட்ட தினம்! இலங்கை தேசத்தின் இறைமையை காக்கும் இமைகளாய் வாழ்ந்த முஸ்லிம்களின் இறையில்லம் இனவாதிகளின் ஆக்ரமிப்புக்கும் அடாவடித்தனத்துக்கும் உள்ளாகி எமது வழிபாட்டு உரிமை தட்டிப்பறிக்கப்பட்ட கரு தினம்! 50 ஆண்டுகளாய் அல்லாஹ்வை வழிபட்டு வந்த அரச பதிவுகளுடன் கூடிய ஆவணங்களை அத்தாட்சியாய் வைத்துள்ளஇ ஓர் இறையில்லத்தை திட்டமிட்ட சதிவலைகள் மூலம் சில இனவாத சக்திகள் கபளீகரம் செய்ய எத்தனித்த தினம்!

‘பௌத்தர்களுக்குரிய புனித புமிக்குள் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளம் அமைய [...]

நாங்கள் தனித்து செயற்படுவது ஏன்?

நாங்கள் தனித்து செயற்படுவது ஏன்?
May 4, 2012
துண்டுப் பிரசுரங்கள்

(SLTJ பரகஹதெனிய கிளையால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்)
 அன்பிற்கினிய சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
திருக்குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் வழி காட்டுதலும் தவிர வேறு எதுவும் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களில்லை என்பதை நாம் வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறோம். அல்லாஹ்வின் வேதத்தையும், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் தவிர எவரது நடவடிக்கைகளையும் மார்க்க ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும், எவ்வளவு பெரிய மேதையானாலும் நபித் தோழர்களேயானாலும் அவர்களின் கூற்றுகளும், செயல்களும் கூட மார்க்க ஆதாரமாக முடியாது எனவும் தெளிவுபடக் கூறி வருகிறோம். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் புறக்கணிப்பவர்களுடன் இணைந்து வணக்கங்கள் செய்ய முடியாது என்ற காரணத்தால் நாம் தனித்து செயற்படுகின்றோம். ஆதாரங்களையும், காரணங்களையும் எடுத்துக் காட்டியே நாம் இவ்வாறு கூறியும் செய்தும் வருகின்றோம். ஆயினும் [...]

தம்புள்ளை பள்ளிவாசல் இடிப்பும் முஸ்லிம்களின் பொறுப்பும்

தம்புள்ளை பள்ளிவாசல் இடிப்பும் முஸ்லிம்களின் பொறுப்பும்
May 3, 2012
வீடியோக்கள்.

சிங்களக் காவிக் கரசேவர்களால் சேதப்படுத்தப்பட்டு இடித்து நொறுக்க திட்டமிடப்பட்ட தம்புள்ள அல் ஹைராத் பள்ளிவாசல் சம்பவத்தின் பின்னணி என்ன?
இப்பிரச்சினைக்கு இஸ்லாம் சொல்லும் தீர்வு என்ன?
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு என்ன?
என்பவற்றை தெளிவு படுத்தும் ஜமாஅத்தின் துணைத் தலைவர் சகோதரர் பர்ஸான் அவர்களின் ஜும்ஆப் பேருரை.

“திருக் குர்ஆன் இறைவேதமே!” அடுக்கடுக்கான சான்றுகளை வைத்து நிரூபித்த டிஎன் டிஜே! திக்குமுக்காடிய கிறித்தவ போதகர்கள்!!

“திருக் குர்ஆன் இறைவேதமே!”   அடுக்கடுக்கான சான்றுகளை வைத்து  நிரூபித்த டிஎன் டிஜே! திக்குமுக்காடிய கிறித்தவ போதகர்கள்!!
May 2, 2012
விவாதங்கள்

என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் (மத்தேயு 27:46). மேற்கண்ட வார்த்தைகள் ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது கடைசியாகப் புலம்பிய வார்த்தைகள். இதே வார்த்தைகளைத் தான் “திருக்குர்ஆன் இறைவேதமே!” என்ற தலைப்பில் விவாதிக்க வந்த கிறித்தவ போதகர்கள் விவாதத்தின் இறுதியில் சொல்லி புலம்பிக் கொண்டு சென்றிருப்பார்கள் என்று நினைக்கின்றோம்.
அந்த அளவிற்கு அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் “திருக்குர்ஆன் இறைவேதமே!”
என்ற தலைப்பில் கிறித்தவ போதகர்களுடனான விவாதம் சிறப்பாக நடந்து முடிந்தது.
கடந்த 28, மற்றும் 29 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையிலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைமயகத்தில் வைத்து நடைபெற்ற விவாதத்தில் பீஜே தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுவினர் கிறித்தவ போதகர் ஜெர்ரி தாமஸ் குழுவினரோடு விவாதித்தனர். தரப்புக்கு தலா 25 பார்வையாளர்கள் [...]

தம்புள்ள பள்ளியை புத்த பிக்குகள் சேதப்படுத்தியதை கண்டித்து .குவைத் மண்டலம் நடத்திய விழிப்புணர்வு கூட்டம்

தம்புள்ள பள்ளியை புத்த பிக்குகள் சேதப்படுத்தியதை கண்டித்து .குவைத் மண்டலம் நடத்திய விழிப்புணர்வு கூட்டம்
May 1, 2012
ஜமாஅத் நிகழ்ச்சிகள்

இலங்கை தம்புள பகுதியில் உள்ள முஸ்லீம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த இறை இல்லத்தில் மத வெறிக்கொண்ட புத்த பிக்குகள் வெறியாட்டத்தில் இறங்கி அப்பள்ளியை சேதப்படுத்தியதை கண்டிக்கும் விதமாகவும் இக்கண்டனத்தை இலங்கை அரசுக்கு எடுத்து செல்லும் விதமாகவும் ஒரு விழிப்புணர்வு கூட்டத்திற்கு குவைத் மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த 27-4-2012 அன்று வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு முர்காப் பகுதியில் உள்ள மனோ சல்வா உணவகத்தில் ஏற்ப்பாடு செய்திருந்தது.

மண்டல செயலாளர் சகோ கூத்தாநல்லூர் ஜின்னா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆரம்பமாக சகோதரர் இலங்கை ஒட்டுமாவடி ஃபாஹிர் அவர்களின் துவக்க உரை நிகழ்த்தினார்.அதை தொடர்ந்து மண்டல தலைவர் சகோதரர் கூனிமேடு ராஜா உணர்ச்சிமிகு சிறப்புரையாற்றினார்.காவி உடையணிந்த [...]

தம்புள்ள பள்ளியை இடிக்க வந்த கயவர்களுக்கு எதிராக SLTJ செய்த மாபெறும் ஆர்ப்பாட்டப் பேரணி

தம்புள்ள பள்ளியை இடிக்க வந்த கயவர்களுக்கு எதிராக SLTJ செய்த மாபெறும் ஆர்ப்பாட்டப் பேரணி
April 30, 2012
செய்திகள்

புத்த மதவெறிபிடித்த காவிச் சண்டாளர்களால் தம்புள்ளை அல்ஹைரிய்யா ஜூம்ஆப் பள்ளி தாக்கப்பட்டைக் கண்டித்தும் ஏனைய பள்ளிகளைப் பாதுகாக்கவும் பள்ளி மீது தாக்குதல் நடத்தியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கடந்த வெள்ளியன்று 27-04-2012 ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. மாளிகாவத்தையிலிருந்து கோட்டை புகையிரத நிலையம் வரை நகர்ந்த இந்த ஊர்வலத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பள்ளிவாசலை அதே இடத்தில் மீண்டும் நிர்மாணிக்கவும், உரிய இடத்திலேயே முஸ்லிம்களிடம் ஒப்படைக்கவும் ஆவன செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்திக் கோசமிட்னர், மாற்றுக் காணியில் பள்ளிவாசலை அமைக்க முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனையை திட்டவட்டமாக முஸ்லிம்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்த [...]

ஹெம்மாதகம விவாதத்தில் அசத்தியவாதிகளின் அடித்தளம் ஆட்டம் கண்டுவிட்டது

ஹெம்மாதகம விவாதத்தில் அசத்தியவாதிகளின் அடித்தளம் ஆட்டம் கண்டுவிட்டது
April 30, 2012
விவாதங்கள்

எம்.ஏ.ஹபீழ் ஸலபி

 இஸ்லாம் ஒரு பரிபூரணமான மார்க்கம். அதன் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆனும் அஸ்ஸூன்னாவும் மட்டுமே மனித வாழ்க்ககைக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் உட்பொதிந்துள்ளது. மனிதன் மறுமை நாள் வரை எதிர் நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வை அவை இரண்டும் தன்னகத்தேகொண்டுளளன. அவற்றிலிருந்து எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியும் என்பதை 2012 ஏப்ரல் சனி 21 ஞயிறு 22 ஆகிய இரண்டு தினங்களில் நடந்த விவாதத்தில் மீண்டும் ஒரு முறை தவ்ஹீத் ஜமாஅத் தெட்டத் தெளிவாக நிரூபித்துள்ளது.
இந்த விவாதம் இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரம் எது? என்ற கருப்பொருளில ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கத்திற்குமிடையில் ஹெம்மாதகம அல் அஸ்ஹர் நவோதய பாடசாலை கேட்போர் கூடத்தில் அமைதியான முறையில் [...]

அஜ்வா ஹதீஸின் உண்மை நிலை

அஜ்வா ஹதீஸின் உண்மை நிலை
April 30, 2012
ஆய்வுகள்

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது நமது நிலைபாடு. இந்த நிலைபாட்டுக்குக் குர்ஆனிலிருந்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்களிலிருந்தும் ஆதாரங்களை வெளிப்படையாக பல சந்தர்ப்பங்களில் மக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

இதே அடிப்படையில் நபித்தோழர்களும், இமாம்களும் சில ஹதீஸ்களை மறுத்துள்ளனர் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை மறுப்பதாக நம்மீது குற்றம் சாட்டுபவர்கள் இன்று வரை இதற்கு எந்தப் பதிலையும் கூறவில்லை.

குர்ஆனுக்கு முரண்படும் குறிப்பிட்ட சில ஹதீஸ்களுக்கு மாத்திரம் பதில் என்ற பெயரில் உளறுகிறார்களே தவிர குர்ஆனுக்கு முரணாக அமைந்துள்ள செய்திகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற அடிப்படை விதியை மறுக்கும் விதமாக எந்த ஆதாரத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை. இந்த அடிப்படைக்குப் பல சான்றுகளை நாம் தெளிவுபடுத்தி [...]

பள்ளிகளைக் குறிவைக்கும் சிங்களக் காவிக் கரசேவர்கள்

பள்ளிகளைக் குறிவைக்கும் சிங்களக் காவிக் கரசேவர்கள்
April 27, 2012
செய்திகள்

அபூ ஹம்னா ஸலபி

இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய, தம்புள்ள அல் ஹைராத்; ஜும்ஆப் பள்ளி தகர்ப்புப் பின்னணி குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாடு. நாட்டின் அரசியல் சாசனம் மத  சுதந்திரத்தை வழங்கியுள்ளது. இந்த சுதந்திரம் ஒரு சாரால் மீரப்படும் போது பிரச்சினைகள் எழுவதைத் தடுக்க முடியாத நிலை ஏற்படும்.
இந்த நாட்டின் பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்களவர்கள் தமிழ்மக்களின் உரிமைகளைப் பரித்ததால், சுமார் 30 ஆண்டுகள் அதன் ரணத்தை அனைத்து மக்களும் அனுபவிக்க நேரிட்டது. அந்த ரணத்தின் வடுக்கள் மாறமுன்னரே இன்னொரு சிறுபான்மையான முஸ்லிம் மக்களின் பள்ளி மீது கை வைத்து மதத்துவேசத்தை சிங்களத் தீவிரவாத தீய சக்திகள் துவங்கியுள்ளன. [...]