வட்டி என்ற சமுதாயக் கொடுமை. (தொடர் – 01)

வட்டி என்ற சமுதாயக் கொடுமை. (தொடர் – 01)
July 15, 2011
கட்டுரைகள்

கட்டுரை ஆசிரியர் : Rasmin  M.I.Sc

உலகில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் ஒரே மார்க்கமான இஸ்லாம் மனிதனின் அனைத்துத் தேவைகளையும் அறிந்த இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும்.
நாம் வாழும் காலத்தில் நமக்கு எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் ஒரே மார்க்கமாக இஸ்லாம் மாத்திரம் தான் இருக்கிறது.நமது அன்றாடப் பிரச்சினைகள்,குடும்பம் தொடர்பானவைகள், சமுதாயப் பிரச்சினைகள் என்று அனைத்தையும் அலசும் ஒரே கொள்கை இஸ்லாமிய கொள்கை மாத்திரம் தான் என்பதில் எல்லளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
அந்த அடிப்படையில் மனிதனை பல வழிகளிலும் கெடுத்து நரகில் தள்ளுவதற்கு துணை நிற்கும் செல்வம் பற்றிய தெளிவான ஒரு கண்ணோட்;டத்தையும் இஸ்லாம் நமக்குத் தருகிறது.
இஸ்லாம் சொல்லும் பொருளாதராக் கொள்கைகளில் நாம் சரியாகப் புரிய வேண்டிய மிக முக்கியமான [...]

மல்வானையில் – இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோருடன் SLTJயின் இனிய ஒன்று கூடல்.

மல்வானையில் – இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோருடன் SLTJயின் இனிய ஒன்று கூடல்.
July 14, 2011
சமூக சேவை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் மற்றும் மல்வானைக் கிளை ஆகியவை இணைந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கான இஸ்லாமிய விளக்க பயிற்சி வகுப்பை கடந்த 14.07.2011 வியாழக் கிழமை அன்று மல்வானையில் ஏற்பாடு செய்திருந்தது.

ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில்……

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர் ரொஷான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து ஜமாத்தின் துனைச் செயலாளர் சகோதரர் ரிஸா யுசுப் அவர்கள் இஸ்லாத்தை போதிப்பதின் அவசியத்தைப் பற்றிப் பேசினார்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தேசிய தலைவர் சகோதரர் ரியால் அவர்கள் இஸ்லாம் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் சஹாபாக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு பின்பற்றிய முறையுடன், அன்மைக் [...]

அவ்லியாக்களின் சிறப்புகளும், தரீக்காக்களும்.

அவ்லியாக்களின் சிறப்புகளும், தரீக்காக்களும்.
July 13, 2011
தரீக்கா

கட்டுரை ஆசிரியர் : பி.ஜெய்னுலாப்தீன்.

(இந்தக் கட்டுரை, சகோதரர் பி.ஜே. அவர்கள் இருபது வருடங்களுக்கு முன்பு தாம் ஆசிரியராக இருந்த ஒரு மாத இதழில் எழுதிய கட்டுரையாகும்.)

புராணங்களில் வரும் நிர்வாணச் சாமியார்கள், ஆபாசக் கடவுளர்களின் அட்டகாசங்களை மிஞ்சும் வகையில் அவ்லியாக்கள் என்று சுன்னத் ஜமாஅத்தினரால் கூறப்படுவோரின் அட்டகாசங்கள் அமைந்திருக்கின்றன. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பார்கள். புத்தி பேதலித்தவர்களின் கடைசிப் புகலிடம் தரீக்கா என்ற போலி ஆன்மீகம் என்று கூறலாம். தரங்கெட்டவர்கள், தறுதலைகளின் கடைசித் தலம் தரீக்கா என்பதை இந்தக் குப்பையைப் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.)

ஒரே இறைவனை மட்டும் வணங்க வேண்டும்; அவனது இறுதித் தூதர் அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை. இந்த இரண்டையும் அழுத்தமாகவும், உறுதியாகவும் நம்புவதுடன் மக்களுக்கும் இதை நாம் [...]

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பிறைக் குழு ஆரம்பம்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பிறைக் குழு ஆரம்பம்.
July 11, 2011
புதியவை

நோன்பு, ஹஜ், இத்தா உள்ளிட்ட பல கடமைகளை முஸ்லீம்கள் பிறையை அடிப்படையாகக் கொண்டே நிறைவேற்றுகிறார்கள். இந்தப் பிறையை சுன்னா அடிப்படையில் நம்பகத் தன்மையுடன் தீர்மானிக்கும் தேவை பன்னெடுங் காலமாக இந் நாட்டில் நிலவி வருகிறது.  இந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்காக,  குர்ஆன், சுன்னா அடிப்படையில் இலங்கை முழுவதையும் பிறை பார்ப்பதற்குறிய எல்லையாகக் கொண்டு செயல்படும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத், பிறைக் குழு ஒன்றை ஆரம்பித்துள்ளது.

நாடு முழுவதும் இயங்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் கிளைகளின் சகோதரர்கள் மாதா மாதம் பிறை பார்க்கும் புனிதப் பணியில் ஈடுபடவுள்ளனர். (இன்ஷா அல்லாஹ்)

எனவே எதிர்வரும் ரமழான் மாதத்தின் தலைப் பிறை தீர்மானிக்கும் விஷயத்தில் தொடங்கி அனைத்து அன்பர்களும் [...]

கபுராளிகள் தினம் கற்பனையாக உருவாக்கப்பட்டதே!

கபுராளிகள் தினம் கற்பனையாக உருவாக்கப்பட்டதே!
July 11, 2011
கட்டுரைகள்

இல்லாத பெயரில் பொல்லாத பித்அத்கள்.

கட்டுரை ஆசிரியர் : RASMIN M.I.Sc

அன்னையர் தினம், முதியோர் தினம், ஆசிரியர் தினம், என்று பல விதமான தினங்களை இன்று மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த தொடரில் நமக்கும் காலத்திற்குக் காலம் ஏதாவது சில தினங்களை உருவாக்க வேண்டும் என்று நினைத்த இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த மத குருமார்கள் சிலர், நபியவர்களின் பிறந்த தினம், நபியவர்கள் மிஃராஜ் சென்ற தினம், என்று பல வகையான மார்க்கத்தில் இல்லாத கொண்டாட்டங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு அவற்றையும் மார்க்கம் என்ற பெயரில் காலா காலமாக அரங்கேற்றி வருகிறார்கள்.

அந்த வகையில் ஷஃபான் மாதம் 15ம் நாளை கபுராளிகள் தினம் (பராஅத் இரவு) என்று உருவாக்கி அதனை வெகு விமர்சையாக முஸ்லீம்களில் சிலர் கொண்டாடி [...]

sltj மாபோலைக் கிளையினால் இருதய சத்திர சிகிச்சைக்கு உதவி வழங்கப் பட்டது.

sltj மாபோலைக் கிளையினால் இருதய சத்திர சிகிச்சைக்கு உதவி வழங்கப் பட்டது.
July 9, 2011
உதவிகள்

மார்க்கப் பிரச்சாரத்தை இலங்கை முழுவதும் கொண்டு செல்லும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (sltj) சமுதாய சேவையையும் தன்னால் முடிந்தளவுக்கு முன்னெடுத்து வருகிறது.

மாபோலைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனின் இருதய சத்திர சிகிச்சைக்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் மாபோலைக் கிளை சார்பாக 11500 ரூபா வழங்கப்பட்டது.

குறிப்பிட்ட தொகை சிறுவனின் தாயாரிடம் மாபோலை கிளையினால் ஒப்படைக்கப்பட்டது.

இந்தத் தொகையைக் கொடுப்பதற்கு உதவிய அனைத்து சகோதரர்களுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாபோலைக் கிளை நன்றி தெரிவித்துக் கொள்கிறது. ஜஸாகல்லாஹு கைரா!

 

SLTJ கம்பொலை கிளையில் பயான் நிகழ்ச்சி.

SLTJ கம்பொலை கிளையில் பயான் நிகழ்ச்சி.
July 9, 2011
ஜமாஅத் நிகழ்ச்சிகள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) கம்பொலைக் கிளை சார்பாக கடந்த 07.08.2011 வெள்ளிக் கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர் பர்சான் (ஆசிரியர் அழைப்பு மாத இதழ்) அவர்கள் இஸ்லாம் காட்டித் தரும் எழிய திருமணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதில் சகோதரர்கள் திரளாக கலந்து பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

வெளிவந்து விட்டது ”அழைப்பு“ ஜுலை மாத இதழ்.

வெளிவந்து விட்டது ”அழைப்பு“ ஜுலை மாத இதழ்.
July 7, 2011
புதியவை

சத்தியக் கொள்கையை சமரசமில்லாமல் உடைத்துச் சொல்லி வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் “ அழைப்பு ” ஜுலை மாத இதழ் தற்போது வெளிவந்துள்ளது.

ரமழான் மாத சிறப்பிதழாக வெளிவந்துள்ள இந்த சஞ்சிகையில் ரமழான் மாதம் பற்றிய மிகச் சிறந்த ஆக்கங்கள் குர்ஆன், சுன்னா அடிப்படையில் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன.

நாளின் ஆரம்பம் எது?

சுயமரியாதைக்கு வேட்டு வைக்கும் யாசகம்.

தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் சரியானவையா?

இரவுத் தொழுகை 23 தானா?

போன்ற மிகச் சிறந்த ஆக்கங்களை சுமந்து வந்திருக்கிறது ஜுலை மாத “அழைப்பு”

விலை : ரூபா 50/=

பொலன்னறுவை மண்ணிலும் ஏகத்துவ எழுச்சி. அல்ஹம்துலில்லாஹ்.

பொலன்னறுவை மண்ணிலும் ஏகத்துவ எழுச்சி. அல்ஹம்துலில்லாஹ்.
July 7, 2011
பிரச்சினைகள்

கடந்த ஒரு வருட காலமாக பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவப் பிரச்சாரம் மிகவும் வீரியமாக நடைபெற்று வருகிறது. “அல்ஹம்து லில்லாஹ்”. இதன் விளைவாக தற்போதைக்கு அம்மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் மூன்று கிளைகள் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் மார்க்க விளக்க கூட்டங்கள், ஜும்மா பயான், சமூக சேவைகள் என்று பல செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் அந்த ஊரிலுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாக சபை மற்றும் மாவட்ட ஜம்மியதுல் உலமா போன்றோரிடமிருந்து பாரிய எதிர்ப்புகளும் சவால்களும் கொள்கைவாதிகளை நோக்கி வந்த வண்ணமே இருந்தன.

ஏகத்துவத்திற்கு கி்டைத்த வெற்றி

கடந்த சில வாரங்களாக மாணி்க்கம்பிடிய என்ற ஊரில் நபி வழியில் நம் மார்க்க [...]

இறையில்லம் மற்றும் இஸ்லாமிய அழைப்பு மையம் அமைய உதவிடுவீர்!

இறையில்லம் மற்றும் இஸ்லாமிய அழைப்பு மையம் அமைய உதவிடுவீர்!
July 7, 2011
அறிவிப்பு

அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யார் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அது போன்ற ஒன்றை சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி – 450

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள கற்பிட்டி கிளையின் தஃவாப்பணியினை வீரியத்துடன் முன்னெடுக்கும் நோக்கிளும், நபிவழியில் தம் தொழுகைகளை நடாத்துவதற்குமாக வேண்டி  இறையில்லம் மற்றும் இஸ்லாமிய அழைப்பு மையம் ஒன்றினை நிர்மாணிக்கும் முகமாக 15 பேச்சர்ஸ் காணித்துண்டொன்றை வாங்கும் பணிக்கு வாரி வழங்கும் படி பரோபகாரிகளை பண்பாய் வேண்டுகிறோம்.மேற்படி காணிக் கொள்வனவு திட்டத்திற்கு சுமார் 12 இலட்சம் ரூபாய்கள் வரை [...]