ஹெம்மாதகமை விவாதத்தில் விவாதிப்போர் பட்டியல்

ஹெம்மாதகமை விவாதத்தில் விவாதிப்போர் பட்டியல்
April 4, 2012
விவாதங்கள்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் ஹெம்மாதகமை இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கத்திற்கும் இடையில் எதிர்வரும் 21,22ம் திகதிகளில் “இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் எவை?” என்ற தலைப்பில் ஹெம்மாதகமை அல் அஸ்ஹர் நவோதய பாடசாலை கேட்போர் கூடத்தில் பகிரங்க விவாதம் நடாத்துவதாக இரு சாராருக்குமிடையில் நடைபெற்ற விவாத ஒப்பந்தத்தின் போது ஏகமானதாக முடிவுசெய்யப்பட்டது. 

அதன் போது விவாதிப்போர் பட்டியலை ஏப்பரல் மாதம் முதலாம் திகதி இரு சாராரும் விவாத ஏற்பாட்டுக் குழுவிடம் ஒப்படைப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது. அதன்பிரகாரம் விவாதத்திற்காக ஹெம்மாதகமை இஸ்லாமிய சட்ட அமுலாக்கல் சங்கம் சார்பாக விவாதிப்பவர்களின் பட்டியலை தந்துள்ளனர். விவாதமொன்றுக்கு முன்னரே விவாதிப்பவர்களை ஏன் தெரியப்படுத்த வேண்டுமென்தை அறிந்த இவர்கள் அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் விவாதிப்போரை மொட்டையாக அறிவித்துள்ளனர். ஒப்பந்தத்தில் [...]

ஏப்ரல் பூல் ? முட்டாள்கள் தினம். இஸ்லாத்தில் ஏற்புடையதா?

ஏப்ரல்  பூல் ? முட்டாள்கள் தினம். இஸ்லாத்தில் ஏற்புடையதா?
April 3, 2012
கட்டுரைகள்

ஆக்கம்: ஜவாஹீர் (ஜமாலி)

மனித குலத்தின் ஈருல வெற்றிக்கு கருவாக இருக்கின்ற திருமறைக் குர்ஆன் ஜாஹியாக்காலம் தொட்டு இன்றைய நவீன காலம் வரை ஏற்படுத்திய மாற்றங்களையும் சாதித்த சாதனைகளையும் எழுத ஆரம்பித்தால் பேனாவின் மைக்குப்பிகள் முடிவுற்று விடும்.

நூங்கள் வாழுகின்ற சமகால, தேசிய, சர்வதேச சமூக அமைப்புக்கள். இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான ஜாஹிலிய்யத்தின் அடிப்படை அடித்தலத்தில் அமைந்திருப்பதை அவதானிக்கின்றோம்.

அறிவும்,  ஆராய்ச்சியும்  அமோகமாய்  முன்னேறிய  இன்றைய  கால கட்டத்தில் மனிதர்களில்  ஒரு  சாரார் மௌட்டீகத்திற்கும்,  பிற்போக்கு  சிந்தனைகளுக்கும் கூஜா  தூக்குகின்ற  அவல  நிலையை  இன்று கண்கூடாகக்  கான்கிறோம். கற்காலத்திலிருந்து  பொற்காலத்திற்குத்  தாவிய  மனிதன்  மீண்டும் கற்காலத்திற்கே  செல்கிறானோ  என  அவதானிகள்  சிந்திக்குமளவிற்கு  மனித குலம் இன்று [...]

சூனியம் குறித்து அன்ஸார் மவ்லவியின் வாதங்களுக்கு வரிக்கு வரி பதில்

சூனியம் குறித்து அன்ஸார் மவ்லவியின் வாதங்களுக்கு வரிக்கு வரி பதில்
April 2, 2012
விவாதங்கள்

சூனியம் என்பது ஏமாற்றும் வித்தை தான். அதன் மூலம் யாரும் யாருக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்பதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவையும் ஆதாரமாகக் கொள்ளத் தகாததுமாகும் என்பதும் அல்லாஹ்வைப் போல் எந்த மனிதனாலும் செயல்பட முடியும் என்று நம்புவது பகிரங்க இணை கற்பித்தலாகும் என்பதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையாக உள்ளது. இது குறித்து  தொடர்ந்து அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டி நிரூபித்து வருகிறோம். ஆனால் இதை எதிர்க்கக் கூடியவர்கள் நம்முடைய அனைத்து வாதங்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் ஒன்றிரண்டு வாதங்களுக்கு மட்டும் பதில் என்ற பெயரில் அர்த்தமற்ற வாதங்களை எடுத்து வைக்கின்றனர். அந்த வரிசையில் அக்கரைப்பற்று அன்ஸார் [...]

ஹோராப்பொலையில் பெண்களுக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி

ஹோராப்பொலையில் பெண்களுக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி
March 29, 2012
அறிவிப்பு

சத்திய இஸ்லாத்தை தெளிவாக எடுத்துரைக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாடு முழுவதிலும் உள்ள கிளைகளினூடாக பலவிதமான தஃவாப்பணிகளை எதிர்ப்புகளையும் தாண்டி செய்து வருகிறது. ஆண்களுக்கு மட்டும் இஸ்லாத்தை படிக்க வசதிகளை செய்துகொள்ளும் இக்காலத்தில் பெண்களக்கும் இஸ்லாத்தை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்ற  நந்நோக்கில் நாடலாவிய ரீதியில் பெண்களுக்கும் விசேட நிகழ்ச்சிகளை ஜமாஅத் செய்து வருகிறது. அதன் தொடராக கெகிராவை, ஹோராப்பொலையில் எதிர்வரும் 31.03.2012 அன்று மாலை 3.45 முதல் 6.00 மணி வரை பெண்களக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம் குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு

இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம் குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு
March 29, 2012
செய்திகள்

ஆன்லைன் பீ.ஜே. இணயத்தளத்தில் சகோதரர் பீ.ஜே. அவர்கள் 2012.03.28ம் திகதி இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம் குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்துள்ளார். வாசகர்களின் நலன் கருதி நமது இணயத்தளதிலும் அதை வெளியிடுகின்றோம்.

இலங்கைக்கு எதிரான கேலிக் கூத்தான தீர்மானம்

இலங்கைக்கு எதிராக ஐநா சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் குறித்து காரசாரமான வாதப்பிரதி வாதங்கள் தூள் பறக்கின்றன. இந்த விவாதங்கள் அனைத்தும் உண்மைக்கு மாற்றமாகவும் உலக மக்களை ஏமாற்றும் வகையிலும் உள்ளன என்பது நமது நிலைப்பாடாகும்.

அமெரிக்காவும் அனைத்து உலக நாடுகளும் மக்களை முட்டாள்களாக்கப் பார்க்கின்றன என்பதற்கும். தமிழர்கள் பெயரில் இயக்கம் நடத்தும் அனைவரும் தமிழர்களை முட்டாள்களாக்கப் பார்க்கின்றனர் என்பதற்கும்  ஆதாரமாக ஐநாவில் [...]

இதோ வெளிவந்து விட்டது “நபி வழியில் தொழுகையின் சட்டங்கள்” சிங்களத்தில்

இதோ வெளிவந்து விட்டது “நபி வழியில் தொழுகையின் சட்டங்கள்” சிங்களத்தில்
March 29, 2012
செய்திகள்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினால் வெளியிடப்பட்ட சகோதரர் எம்.ஐ.சுலைமான் அவர்கள் எமுதிய “நபி வழியில் தொழுகையின் சட்டங்கள்” என்ற புத்தகத்தை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் சகோதரர் அப்துர் ராஸிக் B.Com அவர்கள் சிங்கள மொழியில் மொழிபெயர்த்துள்ளார். தொழுகையின் அனைத்து சட்ட திட்டங்களும் நபிகளாரின் முழுமையான வழிகாட்டலின் கீழ் கற்றரிந்து செயல் படுத்த இப்புத்தகம் முழுமையாக துணை புரியும் என சிங்களம் பேசும் முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.

புத்தகம் கிடைக்குமிடம்:

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் புத்தக நிலையம்

இல: 241A, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை,

மாளிகாவத்தை,

கொழும்பு -10.

தொடர்புகளுக்கு 0112677974, [...]

உலக இன்பங்களின் தன்மை – தலைமையகத்தில் வாராந்த பயான்

உலக இன்பங்களின் தன்மை – தலைமையகத்தில் வாராந்த பயான்
March 29, 2012
வாராந்திர பயான்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் 27.03.2012ம் திகதி “உலக இன்பங்களின் தன்மை” எனும் தலைப்பில் சகோதரர் ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸீ அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். பல சகோதரர்கள் கலந்து பயனடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.

சிலாபத்தில் நடைபெற்ற SLTJ அங்கத்தவர்களுக்கான தர்பியா (விரிவான செய்திகளுடன்)

சிலாபத்தில் நடைபெற்ற SLTJ அங்கத்தவர்களுக்கான தர்பியா (விரிவான செய்திகளுடன்)
March 27, 2012
நல்லொழுக்க பயிற்சிகள்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் மற்றும் மாதம்பைக் கிளைகள் இணைந்து நடாத்திய முழு நாள் தர்பியா நிகழ்ச்சி கடந்த 25.03.2012 அன்று காலை 9.30 மணிக்கு இஸ்லாமிய அழைப்பு மையம், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையில் சகோதரர் எம்.எஸ்.எம் ஸப்வான் டி.ஐ.எஸ்.ஸீ அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.

தலைமை உரையில் இத்தர்பியாவின் நோக்கம் குறித்து விளக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சகோதரர் எம்.டீ.எம். ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸீ அவர்களினால் “அழைப்பாளர்களின் அணிகலன்கள்”” எனும் தலைப்பில் சிறப்பானதொரு பயற்சி வழங்கப்பட்டது. இதில் அழைப்பாளன் என்றால் யார்? அழைப்புப் பணியின் அவசியம், அழைப்பாளர்களிலிடம் இருக்கவேண்டிய மற்றும் தவிர்க்கப்படவேண்டிய பண்புகள் போன்ற அம்சங்கள் தெளிவாக விளக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வருகை தந்திருந்த [...]

ஸிஹ்ர் ஓர் ஆய்வு – தொடர் 4

ஸிஹ்ர் ஓர் ஆய்வு – தொடர் 4
March 27, 2012
ஆய்வுகள்

சூனியத்தின் மூலம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்று வைத்துக் கொண்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் ஏற்கத் தக்கதல்ல என்பது குறித்து நாம் ஆய்வு செய்து வருகிறோம்.

நம்முடைய திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் இது குறித்து நாம் எடுத்து வைத்த எந்த வாதத்துக்கும் இஸ்மாயீல் ஸலஃபி உருப்படியான ஒரு பதிலையும் தரவில்லை என்பதையும் பார்த்து வருகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் யூதர்கள் நபிகள் நாயகத்தை விட யூத குருமார்கள் ஆன்மிக ஆற்றல்மிக்கவர்கள் என்று எண்ணி இருப்பார்கள் என்பதையும் ஒரு காரணமாக முன் வைத்து நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைத்திருக்க முடியாது என்பதை நிரூபித்தோம்.

சிலாபத்தில் நடைபெற்ற SLTJ அங்கத்தவர்களுக்கான தர்பியா

சிலாபத்தில் நடைபெற்ற SLTJ அங்கத்தவர்களுக்கான தர்பியா
March 25, 2012
நல்லொழுக்க பயிற்சிகள்

இன்று (25.03.2012) காலை 9.30 மணியளவில் ஆரம்பமான நிகழ்ச்சிகள் மாலை 6.00 மணி வரை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.60 க்கும் மேற்பட்ட SLTJ யின் அங்கத்தவர்கள் இந்நிகழ்வில் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ். விரிவான தகவல்கள் நாளை வெளியிடப்படும். இன்ஷாஅல்லாஹ்